Tuesday, April 27, 2010

விருதும் வெஜ் தம் பிரியாணியும்

அன்பு அக்கா, கைதேர்ந்த சமையல் கலை நிபுணர்,பாட்டு,ஓவியம்,எழுத்து,கவிதை என்று பற்கலைகளிலும் சிறந்த திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் ஆசையாக தந்த அவார்டு,ஆனந்தக்கண்ணீருடன் பெற்றுக்கொள்கிறேன்.

இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்க உங்களுக்கு பிடித்து விடும்.தேவையான பொருட்கள் - பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா பச்சை - 400 கிராம்,(தண்ணீரில் ஊறவைக்கவும்)காய்கறிகள் - பிடித்தமானது - 400 கிராம்(கட் செய்து வைக்கவும்)

எண்ணெய் - 100 மில்லி,நெய் - 25 மில்லி,வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 200 கிராம்,மல்லி புதினா - கை பிடியளவு,பச்சை மிளகாய் - 4 ,இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்,சில்லி பவுடர் -முக்கால் ஸ்பூன்,மஞ்ச்ள் பொடி - கால்ஸ்பூன் ,கரம்மசாலா - அரைஸ்பூன்,சோம்பு பொடி- கால்ஸ்பூன்,பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது,உப்பு -தேவைக்கு.பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் ,நெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை ,வெங்காயம் சிவற வதக்கி,இஞ்சி பூண்டு ,கரம் மசாலா (ஏலம் பட்டை,கிராம்பு தூள்)சேர்த்து சிம்மில் வைத்து வதக்கி,மிளகாய்,மல்லி இலை,புதினா சேக்கவும்.


நல்ல மணம் வந்ததும் தக்காளி,உப்பு,மிளகாய்த்துள்,மஞ்சள் தூள் வதக்கி எண்ணெய் மேல் வந்ததும் காய்கறிகளை சேர்க்கவும.

காய்கறிகள் வெந்தபிறகு ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும்.சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.உப்பை சரி பார்க்கவும்,முடிந்தவரை மூடி வைத்தே சமைக்கவும்.


காய்கறி திக் கிரேவி பதத்தில் இருப்பது போல் வைக்கவும்.பக்குவமாக முக்கால் பதத்தில் அளவாக உப்பு போட்டு வேக வைத்த ரைஸை வடித்து வைக்கவும்.

சூடாக இருக்கும் பொழுதே வடித்த ரைஸை பிரியாணிக்கு ரெடி செய்த காய்கறி மசாலாவில் கொட்டவும்.விரும்பினால் சிவற பொரித்த வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன் தூவவும்,மல்லி இலை சேர்க்கவும்,லெமன் எல்லோ அல்லது சஃப்ரான் கரைத்து ஊற்றவும்,ஆரஞ்ச் ரெட் கலரும் சிறிது கரைத்து மேலே ஊற்றவும்.தம்மிற்கு ரெடி செய்ததை இப்ப காணலாம்,அதனை மேலோட்டமாக பிரட்டி விடவும்.அகப்பையின் கம்பை கொண்டு ரைஸின் மேல் இருந்து கிரேவி (கீழ்) வரை 3 இடங்களில் துளை(குத்தி) இடவும்.கிரேவியில் உள்ள ஜூஸ் மேல் எழுப்பி வர வசதியாக இருக்கும்.அலுமினியம் ஃபாயில் போட்டு அல்லது வெறுமனே மூடி கொண்டு மூடவும்,மேல் வெயிட்டுக்கு வடித்த கஞ்சியை சூடாக வைக்கவும்.தீயை சிம்மில் வைத்து பழைய தோசைக்கல்லை பிரியாணி பாத்திரத்தின் அடியில் வைக்கவும்,கனமான பாத்திரமாக இருந்தால் தேவையில்லை.அடி பிடிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு.


20 நிமிடம் சிம்மில் வைக்கவும்.பின்பு கவனமாக திறக்கவும்.ஆவி கையில் பட்டுவிடும்.காய்கறி கிரேவி கீழ் ட்ரையாக இருக்கும்,மேலே ஜூஸி பிரியாணி ரைஸ் இருக்கும்.ரைஸை ஒரு போல் காய்கறி மிக்ஸ் ஆவது போல் பிரட்டி விடவும்.உதிரி உதிரியாக சாஃப்டாக அருமையாக கமகமன்னு இருக்கும்.சுவையான வெஜ் தம் பிரியாணி ரெடி.ஆனியன் ரைத்தா,விரும்பினால் அவித்த முட்டை சேர்த்து பரிமாறவும்.

--ஆசியா உமர்.பின் குறிப்பு : நான் இங்கு சீரக சம்பா பச்சை உபயோகித்து இருக்கேன்.ஏலம்,பட்டை,கிராம்பு முழுதாக சேர்க்கலை,காய்களுடன் வாயில் அகப்படும்,எனவே பொடி செய்து போட்டு இருக்கிறேன்.நிச்சயம் ஒரு தடையாவது செய்து சாப்பிட்டு பாருங்க.


--ஆசியா உமர்.

29 comments:

LK said...

தொடர்ந்து சைவ உணவை போடுவதற்கு நன்றி,

LK said...

எங்க வீட்டு அம்மணி வேற மாதிரி பண்ணுவாங்க.
wishes for award . keep rocking

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஆசியா!

உங்களுக்கு நான் அறிவிப்பு அனுப்புவதற்குள் நீங்களாகவே என் விருதை தங்களின் தளத்தில் போட்டிருப்பது உண்மையிலேயே எனக்கு மகிழ்வையும் பெருமையையும் அளிக்கிறது. உங்களின் பெருந்தன்மைக்காக இன்னொரு அவார்டுகூட தரவேண்டும்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான ரெசிபி செய்துபார்க்கணும்.

Aruna Manikandan said...

Congratulation on ur well deserved awards and wishing u many more success
Biryani looks very tempting!!!!

asiya omar said...

எல்.கே வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மனோ அக்கா,உங்க ப்ளாகில் நீங்கள் சொல்லி இருப்பதே போதும்,அவ்வளவு சந்தோஷம்,உடனே போட்டாச்சு.மிக்க நன்றி.

asiya omar said...

ஸ்டார்ஜன் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

thanks for your wishes aruna.

Cool Lassi(e) said...

Dum biryani enakku romba pidikkum. i also make it this way! I have a big Dosa- kal and do it like so. Enjoy!

Mrs.Menagasathia said...

விருதுக்கு வாழ்த்துக்கள் அக்கா!!

தம் பிரியாணி அருமை!! அதனுடன் ராய்த்தா,எண்ணெய் கத்திரிக்காய்,தக்காளி தித்திப்பு பார்சல் அனுப்பவும்...

sarusriraj said...

அசத்தல் பிரியாணி...

Deivasuganthi said...

வாழ்த்துக்கள். பிரியாணி சூப்பர்!!!!!!

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...
This comment has been removed by a blog administrator.
ஜெய்லானி said...

அது சரி வெஜிடேரியன் போட்டதுக்கு விருதா??? !!!

விருதுக்கு வாழ்த்துக்கள் !!!..

சுந்தரா said...

அருமையான தம் பிரியாணி ரெசிப்பிக்கு நன்றி!

விருதுக்கு வாழ்த்துக்கள்!

Malar Gandhi said...

Congrats on those awards, buddy:) Veg-dhum biriyani looks splendid, loved those colors you used up there, kalakkals-attakaasam:)

Chitra said...

ஏலம்,பட்டை,கிராம்பு முழுதாக சேர்க்கலை,காய்களுடன் வாயில் அகப்படும்,எனவே பொடி செய்து போட்டு இருக்கிறேன்

....Thank you for this tip. Good one. Congratulations!!!

athira said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியா.

பிரியாணிக்கு லஞ் பொக்ஸ் அனுப்புகிறேன் எனக்கொரு பார்ஷல் பிளீஸ்ஸ்ஸ்ஸ்... சூப்பராக இருக்கு.

asiya omar said...

கூல் லஸ்ஸீ,மேனகா,சாரு,தெய்வசுகந்தி,ஜெய்லானி,மலர் காந்தி,சுந்தரா,சித்ரா,அதிரா வாழ்த்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

vanathy said...

ஆசியா அக்கா, அருமையாக இருக்கு. உங்கள் ப்ளாக் பற்றி இப்போது தான் அறிந்து கொண்டேன். தொடர்ந்து வருவேன்.

இமா said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஆசியா.

இந்தக் குறிப்பு பிடித்திருக்கிறது. தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். சமைத்துப் பார்க்கிறேன். படங்களும் நன்றாக இருக்கின்றன.

cpalani2001 said...

சமையல் குறிப்பு பிரமாதம்.வெஜ் தம பிரியாணி வெகு ருசியாக உள்ளது.விருதுக்கு வாழ்த்துக்கள்.
இரா.சி.பழனியப்பன்.இராஜபாளையம்.

asiya omar said...

வானதி உங்கள் முதல் வருகைக்கும் கருதிற்கும் மிக்க மகிழ்ச்சி.நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் வந்து செல்லுங்கள்.

asiya omar said...

இமா,வாங்க உங்கள் வாழ்த்தும் கருத்தும் எனக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது.you are very homely thats why i like you very much.

asiya omar said...

இரா.சி.பழனியப்பன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

அநன்யா மஹாதேவன் said...

வந்துட்டோம்ல? சூப்பர் வெஜ் பிரியாணி. ஒரு வாட்டி பண்ணி பார்க்கணும். விருதுக்கு வாழ்த்துக்கள் பல. :-)

asiya omar said...

அநன்யா நானே உங்களை தேடிப்பிடிக்கணும் என்று இருந்தேன்,வந்தீட்டிங்க,வருக வருக.மிக்க மகிழ்ச்சி.நன்றி.நிச்சயம் செய்து பாருங்க,ஈசி தான் .