Wednesday, April 28, 2010

அருணாவின் சிம்பிள் உருளைக்கிழங்கு ஃப்ரை




இந்த சிம்பிள் உருளைக்கிழங்கு ஃப்ரை அருமையாக இருந்தது.நன்றி அருணா.



தேவையான பொருட்கள் ;உருளைக்கிழங்கு - மீடியம் சைஸ் -4, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,பூண்டு - 4 பல்,எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,உப்பு தேவைக்கு.




உருளைக்கிழங்கை பாதிநிலா மாதிரி அழகாக கட் செய்து கொள்ளவும், ஒரு சாலோ ஃப்ரை பேனில் எண்ணெய் காய வைக்கவும்.தட்டிய பூண்டை சேர்க்கவும்,உருளைகிழங்கை சேர்த்து,சாம்பார் பொடி,தேவைக்கு உப்பு சேர்த்து அப்படியே பிரட்டி பிரட்டி மூடி போட்டு வேக வைக்கவும்.அருணா தண்ணீர் தெளிக்க சொல்லி இருந்தாங்க,நான் தண்ணீர் சேர்க்கவில்லை.சும்மாவே (சித்ரா எஃபெக்ட்)

எண்ணெயிலேயே பொரிந்து அசத்தலாக வந்தது.




சூப்பர் டேஸ்டான சிம்பிள் உருளைகிழங்கு ஃப்ரை ரெடி.எல்லாவகையான சாதத்திற்கும் பொருந்தும். குறிப்பாக தயிர் சாதத்திற்கு அருமையாக இருந்தது.

--ஆசியா உமர்.


4 comments:

Jaleela said...

பார்க்கவே அருமையாக இருக்கு நானும் அடிக்கடிதயிர் சாதத்துக்கு, சாம்பார் பொடி சேர்த்து இந்த வறுவல் செய்வதுண்டு.

Chitra said...

சும்மா சொல்லக்கூடாது. சும்மா, ஒரு உருளை கிழங்கு fry போட்டு , சும்மா அசத்துட்டீங்க. அப்படியே, நம்ம நன்றியை, அருணாவுக்கும் சும்மா பாஸ் பண்ணிடுங்க.

நாஸியா said...

Ok innaiku dinnerukku pannidalam.. right right! :)

Mrs.Menagasathia said...

எனக்கு பிடித்த சூப்பர்ர் வறுவல்!!