Wednesday, April 28, 2010

வெஜ் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்

நூடுல்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே பிடிக்கும்.இந்த முறையில் செய்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள் ; இன்ஸ்ட்டண்ட் ஃப்ரைட் நூடுல்ஸ் பாக்கட் - 2,வெங்காயம் - 1,கேரட்- 1,கொடைமிள்காய் -1, முட்டைகோஸ் - 2 கைபிடியளவு, நூடுல்ஸ்மசாலாவில் உப்பு இருக்கும்,சோய் சாஸ் - 1-2 டீஸ்பூன்.முட்டை விரும்பினால் - 1.



நூடுல்ஸை நல்ல தண்ணீர் விட்டு கொதி வந்ததும் போட்டு பக்குவமாக வெந்ததும் வடித்து வைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம்,கோஸ்,கேரட்,கொடைமிளகாய் சேர்த்து வ்தக்கவும்,விரும்பினால் ஒரு முட்டை சேர்க்கலாம்.மசாலாவில் ஒரு பேக்கை சேர்க்கவும்,காயுடன் சேர்த்து பிரட்டவும்.

வதக்கியவற்றுடன் வடித்த நூடுல்ஸ் சேர்த்து ,மற்றொரு பேக் மசாலா ,சோயாசாஸ் சேர்க்கவும்.நன்கு ஒரு போல் கிளறி விடவும்.


சுவையான வெஜ் நூடுல்ஸ் ரெடி.பேக்கில் இருக்கும் மசாலாவே போதுமானது.உப்பு அதில் இருப்பதால் தனியாக சேர்க்க தேவையில்லை.விரும்பினால் மல்லி இலை,மிளகுத்தூள் தூவி ஸ்பூன்,ஃபோர்க் உடன் பரிமாறவும்.சூப்பராக இருக்கும்.குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை செய்து கொடுக்கலாம்.


--ஆசியா உமர்.

12 comments:

Aruna Manikandan said...

My daughter's favorite.....
Looks colourful :-)

ஜெய்லானி said...

:-)))))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நூடுல்ஸ் ரொம்ப டேஸ்ட்.

LK said...

நான் தனிய இருந்த அடிக்கடி பண்றது . உருளைக்கிழங்கு கூட சேர்க்கலாம்

அநன்யா மஹாதேவன் said...

நல்ல ஐடியா. நானும் பண்றேன்.

Mrs.Menagasathia said...

குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு,அருமை!!

VAAL PAIYYAN said...

VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com

Chitra said...

very simple recipe - a kid's favorite. mine too. :-)

vanathy said...

looking yummy. Very nice recipe.

jagadeesh said...

super blog.are u married?

asiya omar said...

தம்பி ஜெகதீஸ்,நன்றி.என் ப்ளாக் இன்னும் நீங்க சரியாக பார்க்கலைன்னு நினைக்கிறேன்,என்னைப்பற்றிய எல்லா விபரமும் இருக்கு.

jagadeesh said...

தவறாக நினைக்க வேண்டாம், உங்கள் கணவர் கொடுத்துவைத்தவர் என சொல்வதற்காக தான் கேட்டேன். உங்கள் வலைத்தளம் பார்கவே ருசியாக இருக்கிறது.