Saturday, April 24, 2010

மீன் ஆனம்

இது எல்லோரும் வைக்கிற மீன் குழம்பு தாங்க.

தேவையான பொருட்கள் ; பிடித்த மீன் - அரைகிலோ,வெங்காயம் - 100கிராம்,தக்காளி - 200 கிராம்,பூண்டு - 5 பல்.பச்சை மிளகாய் - 3 ,மல்லி கருவேப்பிலை -சிறிது.எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,உளுத்தம்பருப்பு,வெந்தயம்- தலா அரைஸ்பூன் ,புளி - எலுமிச்சை அளவு,காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,மல்லித்தூள் -2 டீஸ்பூன்,சீரகத்தூள் -அரைஸ்பூன்,மிளகுத்தூள் -அரைஸ்பூன்,மஞ்சள் தூள் -அரைஸ்பூன்,தேங்காய் துருவல்- 4 டேபிள்ஸ்பூன்,உப்பு - தேவைக்கு.



முதலில் ஒரு கடாயில்,எண்ணெய் விட்டு காய்ந்ததும்,உளுத்தம்பருப்பு,வெந்தயம் போட்டு வெடித்ததும்,நறுக்கிய வெங்காயம் பூண்டு,மிள்காய்,கருவேப்பிலை,மல்லி இலை ,உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.


மசாலா வகைகளை சேர்க்கவும்.புளித்தண்ணீர் விடவும்,உப்பு சரி பார்க்கவும்.கொதிக்க விடவும்.

கொதித்து மசாலா ,புளி வாடை அடங்கியதும் , உப்பு,மஞ்சள் தூள் போட்டு கழுவி சுத்தம் செய்த மீனை போடவும்.சினை இருந்தால் அதையும் கழுவி உடன் போடவும்.நான் இதில் போட்டு இருக்கேன்.எடுத்து சாப்பிட அருமையாக இருக்கும்.


கொதிவந்ததும் அரைத்த தேங்காய் விழுதை போட்டு திறந்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.அகப்பை போடக்கூடாது.சட்டியை பிடித்து உலசி விடவும்.எண்ணெய் மேலெழும்பி குழம்பு சூப்பராக வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான கமகமக்கும் மீன் ஆனம் ரெடி.பிரியப்பட்டால் மாங்காய் ஒன்றும் சேர்க்கலாம்.புளி அளவை பார்த்து போடவேண்டும்.சாதம்,இட்லி,தோசை,சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்..இட்லிக்கு அருமையாக இருக்கும்.

--ஆசியா உமர்.

11 comments:

LK said...

ithuku as usual my vote alone :)

asiya omar said...

thanks lk.

Mrs.Menagasathia said...

எனக்கு பிடித்தமான குழம்பு அருமையாக இருக்கு...

Chitra said...

Idli and fish curry - super combination! :-)

Geetha Achal said...

எனக்கு மிகவும் பிடித்தது...நீங்கள் சொல்லுவது போல எனக்கும் மீன் குழம்பினை இட்லியுடன் சாப்பிட தான் மிகவும் பிடிக்கும்...நன்றி...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சூப்பரா இருக்கு மீன் ஆனம்.

asiya omar said...

மேனகா,சித்ரா,கீதாஆச்சல்,ஸ்டார்ஜன் கருத்திற்கு மகிழ்ச்சி.

மின்மினி said...

நேத்து முள்ளானம் இன்னக்கி மீன் ஆனமா.. கலக்குங்க ஆசியாக்கா.

asiya omar said...

மின்மினி வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

Jaleela said...

மீன் ஆனம் ரொம்ப நல்ல இருக்கு ,
எங்க இங்கு மங்குனிய காணும், மீன் தலைய கண்ணுடன் பார்த்து ஏதாவது கமெண்ட் வருமே

asiya omar said...

ஜலீலா வாஙக,அதானே நானும் பார்த்தேன்.மகிழ்ச்சி.