Wednesday, April 28, 2010

முருங்கைக்காய் பொரியல் / Drumstick Poriyal



சகோ.ஹைஷ் இந்த குறிப்பை பார்த்து செய்து அனுப்பிய முருங்கைக்காய் பொரியல் படத்தை இணைத்து இருக்கிறேன்.அருமை.நன்றி சகோ.

தேவையான பொருட்கள் ;
வாட்டசாட்டமான முருங்கைக்காய் - இரண்டு
தக்காளி -1 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
கடுகு,உளுத்தம் பருப்பு தலா அரைடீஸ்பூன்
சீரகம்- அரை- 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் -4
மல்லி,கருவேப்பிலை -சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு.

மிள்காய் வற்றல்,சீரகம் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும் ,நம்ம செல்வி அக்கா சொன்ன மாதிரி வற்றல் குலுங்கினால் ஈசியாக பொடியாகிவிடும்.
குக்கர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை தாளித்து,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி,முருங்கைக்காய் சேர்க்கவும்,பிரட்டவும்,பொடித்த சீரகம்,வற்றலை சேர்க்கவும்.



நன்றாக ஒரு சேர முருங்கைக்காயை பிரட்டி விடவும்.




பின்பு வதக்கிய முருங்கையுடன் தேங்காய் துருவல்,தக்காளி,உப்பு சேர்க்கவும்,அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.


நன்கு பிரட்டி விட்டு குக்கரை மூடி ஒரே விசில் வைத்து இறக்கவும்.



சுவையான முருங்கைக்காய் பொரியல் ரெடி. இதனை ப்லைன் சாதத்திற்கு சைட் டிஷ்சாக பயன்படுத்தலாம்.


பின்குறிப்பு : இது எங்க வீட்டு தோட்டத்தில் காய்த்தது, ஊரில் இருந்து கொண்டு வந்து உங்களுக்காக பொரியல் வைத்தேன்.

-ஆசியா உமர்.

20 comments:

Jaleela said...

ஹா ஹா ஆசியா படித்ததும் சிரித்து விட்டேன்.

வாட்ட சாட்டாமான முருங்கக்காய்,

முருங்கக்காய், கறீ, பருப்பில் போட்டாலே வாசம் தூக்கும்,

அதுவும் பொரியலில் கேட்கவா வேண்டும். நலல் இருக்குமே.

அனு said...

அப்பாடா..

வீட்ல நிறைய முருங்கைக்காய் சும்மா இருக்குதே.. என்ன பன்றதுன்னு குழம்பிட்டு இருந்தேன். சரியான சமயத்தில் அருமையான பதிவு..

அப்போ, இன்னைக்கு மதியம் முருங்கைக்காய் பொரியல் தான்.. சாப்பிட்டு பாத்துட்டு திரும்ப கமெண்ட் போடுறேனுங்கோ...

Chitra said...

நெல்லையில் அடிக்கடி, இந்த பொரியல் சாப்பிட்டு இருக்கிறேன். ம்ம்ம்ம்ம்ம்ம்...... yummy!

/////இது எங்க வீட்டு தோட்டத்தில் காய்த்தது,ஊரில் இருந்து கொண்டு வந்து உங்களுக்காக பொரியல் வைத்தேன்.////
....... customs problem கிடையாதா? இங்கு fresh vegetables கொண்டு வந்தால், customs clearance போது, எடுத்து குப்பையில் போட்டு விடுவதாக சொன்னார்கள். :-(

மங்குனி அமைச்சர் said...

//விருதும் வெஜ் தம் பிரியாணியும்
அருணாவின் சிம்பிள் உருளைக்கிழங்கு ஃப்ரை
முருங்கைக்காய் பொரியல்///

என்னா மேடம் ஒரே வெஜ்ஜா அசதுரிங்க

ஜெய்லானி said...

:-))

மனோ சாமிநாதன் said...

அன்பு ஆசியா!

முருங்கை பொரியல் பார்த்தாலே சுவையாகத் தெரிகிறது! மிளகாய், சீரகம் பொடித்து சேர்ப்பதால் நல்ல மணம் கிட்டும்.

Aruna Manikandan said...

Nice poriyal ...

Thanks a lot for trying the potato fry :-)

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் பொரியல்!!

Kousalya said...

நான் இந்த பொரியலை வத்தலுக்கு பதிலாக பச்சை மிளகாய் சேர்த்தும், தக்காளி, சீரகபொடி தவிர்த்தும் செய்வேன். இனி உங்கள் method படி தான் பண்ண போகிறேன். ஆனா பாருங்க எங்கள் வீட்டு முருங்கை மரம் இப்பதான் காய்த்து முடித்து ரெஸ்ட் எடுக்கிறது! கடைலதான் வாங்கணும்!

பெண்களுக்குள்ளும் நகைசுவை உணர்வு அதிகம் இருக்கிறது என்பதற்கு உதாரணம் வாட்டசாட்டமான முருங்கைக்காய்!

asiya omar said...

ஜலீலா.சித்ரா,மனோ அக்கா,அருணா,மேனகா,கௌசல்யா உங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

அனு உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி,நிச்சயம் செய்து பாருங்க.எனக்கு தெரிந்தது ஒரு அனு தான்,அவங்களா நீங்கன்னு தெரியலை.பார்த்தும் பேசியும் நாளாகிறது.

asiya omar said...

ஜெய்லானி,அமைச்சர் நான்வெஜ் செய்யாமல் இல்லை,நான் அதனை முன்பே பிறதளத்தில் கொடுத்ததாக இருந்தால் இங்கு போடுவது இல்லை.கொடுக்காத ரெசிப்பியாக பார்த்து போட வேண்டியது உள்ளது.வேறொன்றும் இல்லை.

அனு said...

நீங்க நினைக்கிற அனு நான் இல்லைங்க.. நான் இங்க ரொம்ப புதுசு..

முருங்கைக்காய் பொரியல் செஞ்சு பாத்தாச்சு.. தயிர்சாதத்துக்கு செம காம்பினேஷன்.. சிம்பிள் அண்ட் (ரொம்ப) சூப்பர்ப்...

asiya omar said...

நன்றி அனு,நீங்கள் எனக்கு தெரிந்த மதுரை அனுவோ என்று நினைத்தேன்.தொடர்ந்து வந்து கருத்தை தெரிவிப்பதற்கு மகிழ்ச்சி.

Geetha Achal said...

எனக்கு மிகவும் பிடித்த முருங்கைக்காய் பொரியல்..இந்த பொரியலும், கீரை குழம்பும் தான் நான் முதன்முதலில் கற்று கொண்ட சமையல்...முருங்கைக்காய் எங்கள் வீட்டிலேயே காய்க்கும் என்பதால், இதனை தான் அடிக்கடி வீட்டில் செய்வாங்க...இங்கு வந்த பிறகு முருங்கைகாயே மறந்து போச்சு...நீங்க சொல்வது போல வாட்டசாட்டமான காய் கிடைக்காததால் இந்த பொரியல் நியாபகமே வரவில்லை...எனக்கு எப்பொழுது மிகவு பிடித்த உணவு இது...(நான் முதலில் கற்று கொண்டது என்றால் சும்மாவா என்ன...)

nidurali said...

சமைப்பது ஒரு கலை அது சிலருக்கு கை வந்த கலை . சுவையுடன் சமைத்து கொடுக்கும் மனைவி கிடைத்தவர் கொடுத்து வைத்தவர்.
தான் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர் உங்களில் உயர்ந்தோர்- நபி மொழி
அறிவை தந்த இறைவன் தனக்குள் அடைத்து வைக்காமல் மற்றவருக்கும் பகிர்ந்தளிப்பதையே விரும்புவான். அந்த அறிவு வெளிபடுத்தப்பட்ட பின் அதனைப் பெற தன்னிடமே வரவேண்டும் என சொல்வது நல்லதல்ல . இறைவன் தந்த அறிவு இறைவனுக்கே சொந்தம்.

Asiya Omar said...

சகோ.நீடூர் அலி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ravi said...

படங்களைப் பார்த்தாலே செய்யும் ஆவலாக உள்ளது.விரைவில் செய்ய விருப்பம்.
வெங்காயம்,தக்காளி போன்றவை கிராம் அளவில் தாருங்கள் அக்கா.
சீரகம் ஸ்பூன் அளவில் குறிப்பிட்டுள்ளீர்கள்,டீஸ்பூனா டேபிள்ஸ்பூனா.
உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.நன்றி.

Asiya Omar said...

ரவி,தக்காளி,வெங்காயம் அளவு பெரியது என்றால் 100கிராம் தான்,கடுகு,உ.பருப்பு,சீரகம் அளவு டீஸ்பூன் தான்.இதோ எடிட் செய்து விடுகிறேன்.நன்றி.

mani kandan said...

என் வீட்டுக்காரருக்கு முருங்கக்காய் பொரியல்நா அம்புட்டு ஆசை