Friday, April 9, 2010

மொஃதா (கேப்பை உருண்டை) / Mudde ( Ragi Balls)

ஒரு சிறிய போட்டி,மொஃதாவுடன் பரிமாறியிருக்கும் குழம்பு என்ன ? அசைவ வகை தான்,உடன் ஒரு காய் சேர்த்து செய்திருக்கேன்,கண்டு பிடியுங்களேன் அப்புறம் சொல்றேன் என்ன பரிசுன்னு ...... ?
தேவையான பொருட்கள் ; கேப்பை மாவு(ராகி மாவு) - 150கிராம் , அரிசி - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் அளவு - 2 + அரையளவு ,உப்பு - சிறிது ,நல்ல எண்ணெய் - சிறிது.
முதலில் அரிசியை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.


ராகி மாவை அளந்து எடுத்துக்கொள்ளவும்.

பொடித்த அரிசியை குக்கரில் வைத்து தண்ணீர் சேர்த்து வெந்து எடுத்தாலும் சரி,அல்லது வெறுமே பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெந்தாலும் சரி.வெந்த பின்பு தேவையான அளவு த்ண்ணீர் சேர்க்கவும்.நல்ல எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் விடவும்.

மாவை அப்படியே மொத்தமாக கொட்டவும்.தூவக்கூடாது.அது தயார் செய்த கஞ்சில் அமுங்கி போகும்.
கொதிக்க ஆரம்பித்ததும் கரண்டி கொண்டு பக்குமாக கிண்டவும்,இறுக இறுக கிண்டவும்.மாவு நன்றாக ஒரு சேர வேக வேண்டும்.


இறுக கிண்டிய பிறகு அடுப்பை அணைக்கவும்.சிறிது நேரம் மூடி வைக்கவும்.
கையில் தண்ணீர் அல்லது எண்ணெய் தொட்டு கொஞ்சம் மாவை எடுத்து பார்த்தால் ஒட்டாது.தண்ணீரில் போட்டால் அப்படியே இருக்கும். நன்றாக வெந்து விட்டதை அறியலாம்.


ஒரு கரண்டியில் மாவை எடுத்து எண்ணெய் தேய்த்த ஒரு பவுலில் போட்டு உருட்டவும்.கையாலும் சூடு பொறுக்கும் அளவு உருட்டி பிடிக்கலாம்.

இப்படி உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.


சுவையான ஆரோக்கியமான சத்தான கேப்பை உருண்டை ரெடி.சர்க்கரை நோயாளிகள் செய்து சைவ குழம்பு வகைகளோடு சாப்பிடலாம்.அரிசியை தவிர்த்தும் செய்யலாம்.
இதனை மீன்,கருவாடு,மட்டன்,சிக்கன் குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.இதனை கர்நாடக மாநிலத்தில் மொஃதான்னு சொல்றாங்க.அங்கு மலைவாழ் கிராமப்புறங்களில் நம்ம அரிசி உணவு மாதிரி இதனை அன்றாடம் சாப்பிட்டு வருகிறார்களாம்.இப்ப சிட்டி கேர்ள்ஸூம் மண்சட்டி வைத்துக்கொண்டு ஸ்டைலாக கிராமிய சமையல் என்று அசத்த ஆரம்பித்து விட்ட காலம் இது.வெளிநாடுகளுக்கு மண்சட்டியை சுமந்துகிட்டு போறாங்கன்னா பாருங்களேன்.சும்மா சொல்லக்கூடாது மிடியாக்களில் மண் பாத்திரத்திலும் சமையல் செய்து காட்டுவதால் இதன் விலையும் அதிகரித்து குயவர்களுக்கு ஒரு வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு ஒரு பெரிய சல்யூட்.

என் கணவருக்கும் மகனுக்கும் சமைத்து கொடுக்கும் குமார் என்பவர் ஒரு அழகான மண்சட்டியை கொண்டு வந்து எங்களுக்கு தந்தார். திருச்சி பக்கம் கிராமம் ஒன்றை சேர்ந்தவர்.குமார் அங்கிள் சமையல் சூப்பர் என்று என் மகன் அடிக்கடி சொல்வதுண்டு,நன்றி குமார்.எனக்கு ஒரே கவலை,இனி நம் சமையலை குறை சொல்ல ஆரம்பித்து விடக்கூடாதே என்று.
-ஆசியா உமர்.

13 comments:

ஜெய்லானி said...

பாத்தா குடல் குழம்பு மாதிரி இருக்கு அப்புறமென்ன கத்திரி காய்தாங்க!!!

Chitra said...

.வெளிநாடுகளுக்கு மண்சட்டியை சுமந்துகிட்டு போறாங்கன்னா பாருங்களேன்.

......நானு ....நானு...... கொண்டு வந்திருக்கேன். ஏர்போர்ட் செக்யூரிட்டி கெடுபிடி வேறு. ஆனால், பத்திரமாக கொண்டு வந்து, அதில் மீன் குழம்பு வைத்து சாப்பிடும் ருசி இருக்கிறதே........ ம்ம்மம்மம்ம்ம்ம்....... yummy! உடைந்து விடாமல், பொத்திக் காப்பாற்றுவது ஒரு challenge தான்.

Mrs.Menagasathia said...

அது போட்டி கறி குழம்புன்னு நினைக்கிறேன்.கேப்பை உருண்டையின் இன்னொரு பெயரும் இப்போதான் தெரிந்துக் கொண்டேன்.நல்லாயிருக்குக்கா...

ஜெய்லானி said...

//கண்டு பிடியுங்களேன் அப்புறம் சொல்றேன் என்ன பரிசுன்னு ...... ?//

இதுதாங்க கஷ்டம் என்ன பரிசுன்னு கண்டுபிடிக்கிறது. ஐயோ.. யாராவது சொல்லுங்களேன்..( ஒரு வேளை ஆல் இன் ஆல் கண்டுபிடிச்சுடுவாங்களா ? )

ஸாதிகா said...

அதே..ஜெய்லானி சொன்னதே.எனக்கு 2 ஆவது பரிசு.

ஸாதிகா said...

சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

asiya omar said...

போட்டி முடிவு அடுத்த இடுகை இடும்பொழுது அறிவிக்கப்படும்.ரொம்ப ஈசியான கேள்வியாக கேட்டுவிட்டேனோ?அச்சச்சோ !

asiya omar said...

ஜெய்லானி,சித்ரா,மேனு,ஸாதிகா கருத்திற்கும் பதிலிற்கும் மிக்க மகிழ்ச்சி.

Jaleela said...

இதென்னா ஆசியா அரிசிமாவு உருண்டை போலா,

அது மட்டன் அவரைக்காயா?

ராகியில் செய்தது வித்தியசமா நல்ல இருக்கு,

//உங்கள் நெய் காய்ச்சும் முறையை கொஞ்சம் மெயில் அனுப்புங்களேன். பாலடை சேர்த்து வைத்து உறைக்கு ஊற்றி செய்ய மறந்து விட்டது, இப்ப எடுத்து அதில் செய்தால் நல்ல இருக்குமா? //

ம்ம் அல் அயினில் குமார் அங்கிள்,நெல்லையில் அபி சமையலா. இது வரை சமையலுக்கு என்று யாரும் வேலையாள் வைத்ததில்லை
மண் பானை சமையல் எனக்கும் பிடிக்கும் ஆனால் செய்யும் போது உடைந்து விடுமோன்னு பயம்

asiya omar said...

இந்த ப்ளாக்கில் அறுசுவையில் நானை கிளிக் பண்ணுங்க,அதில் பாலாடை சேர்த்து நெய் தயாரிப்பது எப்படின்னு ஸ்டெப் பை ஸ்டெப் இருக்கு. மொஃதாவை எங்க அக்கா (ஜெய்லானி )செய்தால் அதன் ருசியே தனி.ஜலீலா எங்க ஊரில் ஒரு மாநாடு போட்டாங்க அபி அதோடு காணாமல் போய் விட்டான்,ஒரு மாதம் தான் இருந்தான் அந்த சோகக்கதை பெருசு,அப்புறம் ஆசியா கிச்சன் தான்.நான் இங்கு இருப்பதால் அங்கு சமையலிற்கு ஆள் எப்படியோ ஒரு வருடம் மகனும் வாப்பாவுமாய் சமாளித்து விட்டார்கள். மகன் +2 போய்கிட்டு இருக்கான்.

Jaleela said...

பாலடை சேர்த்து வைத்து உறைக்கு ஊற்றி செய்ய மறந்து விட்டது

டப்பாவில் ஃபிரிட்ஜில் வைத்தேன், இன்று தான் பார்த்தேன் அஹ்டில்செய்யலாமான்னு கேட்டேன்

Deivasuganthi said...

நானும் மண் சட்டி கொண்டு வந்திருக்கேன். எல்லா புளி குழம்பும் அதுலதான்.
அந்த குழம்பு கருவாடு கத்தரிக்காய் குழம்பா? எங்க ஊர் பக்கம் ராகிக்களிக்கு அதுதான் செய்வாங்க.

asiya omar said...

தெய்வசுகந்தி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.