Monday, April 5, 2010

ஸ்பெஷல் ஆப்பம்

தேவையான பொருட்கள் ; பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், வெந்தயம் -அரை -1ஸ்பூன்,உளுந்து - ஒரு கை பிடி,சோறு -இரண்டு கைபிடி.
பச்சரிசி,புழுங்கலரிசி,வெந்தயம்,உளுந்து ஆகியவற்றை ஊறவைக்கவும்.விரும்பினால் தேங்காய்த்துருவல் அரை கப் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.

முதல் நாள் அரைத்து மறுநாள் காலை(சுமார் 10 -12 )மணி நேரம் கழித்து கால்ஸ்பூன் சோடா உப்பு, அரைஸ்பூன் சீனி, அரைஸ்பூன் உப்பு ,தேவைக்கு தண்ணீர் சேர்த்து தோசையை விட கொஞ்சம் இலப்பமாக கரைத்து வைக்கவும்.


நான்ஸ்டிக் ஆப்பச்சட்டியில் ஒரு குழிக்கரண்டி மாவை சட்டி சூடான பின்பு ஊற்றவும்.


ஆப்பசட்டியின் கைப்பிடியை பிடித்து சுழற்றி சட்டி முழுவதும் மாவு வட்டமாக பரவுமாறு செய்யவும்.

தீயை மிதமாக வைத்து மூடவும்.ஆப்பம் வெந்து மணம் வரும்,சுற்றி கிளம்பி வரும் மூடியை திறந்து ஆப்பத்தை பக்குமாக எடுக்கவும்.


நடுவில் மெத்தென்றும் சுற்றி மொறுமொறுப்பாகவும் உள்ள சுவையான ஆப்பம் ரெடி.இதனை தேங்காய்ப்பால்,தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
--ஆசியா உமர்.

40 comments:

பித்தனின் வாக்கு said...

ஆகா பார்க்க அட்டகாசமா இருக்கு. ஒரு ஆறு,ஏழு ஆப்பத்தை நைசா சுட்டு (இது நீங்க சமைக்கும் போது உங்களிடம் இருந்து சுடுவது) தொட்டு சாப்பிட்டு தூக்கம் போட்டா நல்லா இருக்குமுங்க. படத்தில் ஆப்பத்தில் ஏன் அத்தனை ஓட்டைகள். அனாலும் நல்லா மெல்லிசா இருக்கு. மாவு அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக இளனீரை விட்டு அரைத்தால் சுவை தூக்கலாக இருக்கும். முயற்சிக்கவும். நன்றி.

ஜெய்லானி said...

என்க்கு சட்னியை விட , தேங்காய் பால் +வெல்லம் காம்பினேஷன் ஓகே!!

ஜெய்லானி said...

//நடுவில் மெத்தென்றும் சுற்றி மொறுமொறுப்பாகவும் //

அப்டி இருந்தாதான் அது பேரு ஆப்பம் இல்லாட்டி அது பேரு அடை, இல்லை தோசை...

மங்குனி அமைச்சர் said...

வாடா எனக்கா ? சே .... ஆப்பம் எனக்கா ?

ஸாதிகா said...

வாவ்..அப்பம் எவ்வளவு நல்லா மெத்து,மெத்து என்று வந்துள்ளது.எதற்காக ஆசியா இரண்டு வித அரிசி சேர்க்கின்றீர்கள்?

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு ஆசியா ஆப்பம் மெத்துன்னு.. கூடவே, சிக்கன் கிரேவி இருந்தா, சிம்ரன் ஆப்பக்கடைதான்

Chitra said...

Thank you. :-)

மனோ சாமிநாதன் said...

ஆசியா!

ஆப்பம் ஓரங்களில் மொறு மொறுவென்றும் நடுவில் மிருதுவாகவும் அழகாக வந்திருக்கிறது! ஆப்பம் பல விதங்களில் செய்யும் பழக்கம் எனக்கு. உங்கள் பாணியும் நன்றாக இருக்கிறது. விரைவில் இந்த பாணியிலும் செய்யலாமென்று இருக்கிறேன். செய்து பார்த்து சொல்கிறேன்.

asiya omar said...

பித்தன்,உங்கள் கருத்திற்கும் டிப்ஸிற்கும் நன்றி.ஆப்பசட்டி நல்ல சூடாக இருக்கும் பொழுது வார்த்தால் இப்படி தான் கண் கண் ஆக வரும்.

asiya omar said...

ஜெய்லானி இனி நானும் சீனியில் இருந்து வெல்லதிற்கு மாறப்போறேன்.டேஸ்ட் பண்ணிடுவோம்.

asiya omar said...

ஸாதிகா,முதலில் பச்சரி சோறு தேங்காய் மட்டும் போட்டு அரைத்து தான் சுட்டுக்கொண்டிருந்தேன்,அப்படி சுட்ட ஆப்பம் ஆறினால் சுமாராக இருந்தது,இப்படி செய்து பார்த்தவுடன் ஆறினாலும் நல்ல சாஃப்டாக இருந்தது.இதை தோசை கலத்தில் கூட மூடி சுடலாம்,ஆப்பச்சட்டியில் தான் சுடனும்னு இல்லை,புழுங்கலரிசி சேர்ப்பதால் சோறு சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை.

asiya omar said...

ஜலீலா இதற்க்காக கராமா வரனும் போல,அபுதாபியில் எலக்ட்ராவில் தர்பார் ந்னு ஒரு ரெஸ்டாரண்ட் க்கு ஆப்பம் நண்டு சாப்பிடவே எங்க வீட்டு வாண்டு கூப்பிடுவான்.

asiya omar said...

மனோ அக்கா,சித்ரா மிக்க நன்றி.

asiya omar said...

அமைச்சரே வாடான்னால் ஆப்பமா?உங்களுக்கே தான்.

ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் said...

வாடா எனக்கா ? சே .... ஆப்பம் எனக்கா ?//

asiya omar said...

அமைச்சரே வாடான்னால் ஆப்பமா?//


மாவை , வடை மாதிரி வச்சி என்னையில பொரிச்சி எடுத்தா அதுக்கு பேரு ’வாடா’ அதுல (பொரிக்கும் முன் ) இறால் ஐ பிச்சி ரெண்டு பக்கமும் வச்சி பொரிக்கனும். சாப்பிட்டு பாருங்க. அதன் டேஸ்டே தனி!!

Geetha Achal said...

சூப்பர்ப்...ஊருக்கு சென்ற பொழுது, அம்மா இதனை அடிக்கடி எனக்காக இதனை செய்து கொடுத்தாங்க...எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...ஏனோ நான் தான் இங்கு இதனை அடிக்கடி செய்வதில்லை...எல்லாம் டயட் காரணமாக தான்....ஊரில் என்ன டயட் எல்லாம்...அதனால நல்லா சாப்பிடு சாப்பிட்டு குண்டாக ஆனது தான் லாபம்...என்னத செய்ய..ஊரில் ஒரே temptation தான்...

asiya omar said...

ஆமாம் கீதா ,ஊர் வரும் சமயம் எப்பவும் விருந்தா வேறு இருக்கும்,எல்லார் கதையும் அதுதான்.

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் said...

வாடா எனக்கா ? சே .... ஆப்பம் எனக்கா ?//

asiya omar said...

அமைச்சரே வாடான்னால் ஆப்பமா?//


மாவை , வடை மாதிரி வச்சி என்னையில பொரிச்சி எடுத்தா அதுக்கு பேரு ’வாடா’ அதுல (பொரிக்கும் முன் ) இறால் ஐ பிச்சி ரெண்டு பக்கமும் வச்சி பொரிக்கனும். சாப்பிட்டு பாருங்க. அதன் டேஸ்டே தனி!!///


ஜெய்லானி மானத்த காபாத்திட்ட

sarusriraj said...

ஜெய்லானி சொன்ன மாதிரி தேங்காய் பால்+வெள்ளம்+ஏலக்காய் தூள் சிறிது
சூப்பரா இருக்கும். பசியை தூண்டி விட்டுடீங்க இந்த வார இறுதியில் செய்திட வேண்டியது தான்.

Mrs.Menagasathia said...

ஆப்பம் பார்க்கவே சாப்பிடத்தோனுது.தே.பாலுடன் தான் சாப்பிட்டிருக்கேன்.சட்னி தொட்டு சாப்பிட்டதில்லை..எனக்கு 2 ஆப்பம் பார்சல் அனுப்புங்க அக்கா...

மங்குனி அமைச்சர் said...

// பித்தனின் வாக்கு said...

ஆகா பார்க்க அட்டகாசமா இருக்கு. ஒரு ஆறு,ஏழு ஆப்பத்தை நைசா சுட்டு (இது நீங்க சமைக்கும் போது உங்களிடம் இருந்து சுடுவது) தொட்டு சாப்பிட்டு தூக்கம் போட்டா நல்லா இருக்குமுங்க. படத்தில் ஆப்பத்தில் ஏன் அத்தனை ஓட்டைகள். அனாலும் நல்லா மெல்லிசா இருக்கு. மாவு அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக இளனீரை விட்டு அரைத்தால் சுவை தூக்கலாக இருக்கும். முயற்சிக்கவும். நன்றி.///


மாவு அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக கொஞ்சம் பெனாயில் ஊத்தி அரைத்து நம்ம பித்தன் சாருக்கு ஒரு 10 சுட்டு குடுங்க
(மேடம் பித்தன் சார் ஒன்னும் சொல்ல மாட்டார் )

மங்குனி அமைச்சர் said...

////ஜெய்லானி said...

என்க்கு சட்னியை விட , தேங்காய் பால் +வெல்லம் காம்பினேஷன் ஓகே!!///


ஜெய்லானி ஆப்பத்துக்கு ஆட்டு கால் பாயா தான் பெஸ்டு சைடிஸ்

asiya omar said...

மேனகா ,சாரு கருத்திற்கு நன்றி.பார்சல் தானே,அனுப்பிட்டாப்போச்சு.

asiya omar said...

மங்குனி நீங்க வந்து வாடான்னா தெரியாதான்னு கேட்டால் மானம் போயிருக்கும்,ஜெய்லானியா ... ?

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் said...

////ஜெய்லானி said...

என்க்கு சட்னியை விட , தேங்காய் பால் +வெல்லம் காம்பினேஷன் ஓகே!!///


ஜெய்லானி ஆப்பத்துக்கு ஆட்டு கால் பாயா தான் பெஸ்டு சைடிஸ்//


பாயான்னு சொன்னாலே அது ஆட்டு கால்தான்யா!! அப்புறமென்ன ஆட்டுகால் பாயா?

குரங்கு குட்டி கால்ல யெல்லாம் பாயா பண்ண முடியாது.

ஜெய்லானி said...

// asiya omar said...

மங்குனி நீங்க வந்து வாடான்னா தெரியாதான்னு கேட்டால் மானம் போயிருக்கும்,ஜெய்லானியா ... ?//

ஆஸியாக்காவ்!! நீங்களும் என்னை கேள்வி குறியோட தொங்க விட்டுடீங்களே இது நியாயமா !!

Sashi said...

Tamila type panna try panninen, really kastamnu ninaikiren. google transliterate use panna try paninen but How to do it ?
Coming to the point, Appam really looks tempting !! regular dosa kal usepani pana mudiyuma ? coz appakal enkita illa? Suggestions kudunga.

Malar Gandhi said...

Wow, paarkave romba supera irrukku. Its been ages, I have eaten our appam, miss my Mom's food so much...this post is stirring up so many memories. I am planning to try this appam coming weekend.:)

athira said...

ஆசியா சூப்பராக வந்திருக்கு அப்பம். நான் பலமுறை முயற்சித்து பலமுறையும் தோத்தேன். இருப்பினும் பாழாய்ப்போன ஆப்பம் ஆசைமட்டும் போகவேயில்லை. உங்கள் இதே அளவைப் பயன்படுத்திப் பார்ப்போம்.

//சட்னியை விட , தேங்காய் பால் +வெல்லம் காம்பினேஷன் ஓகே!!// எனக்கும் டபிள் ஓகே.. நான் அப்பத்தைச் சொன்னேன்.

asiya omar said...

sashi,for tamil typing down load nhm writer.it will be very easy for you.of course you can do this appam in dosai kalam also..dont turn the appam,put lid and after done you simply take it.thats all.

asiya omar said...

malar gandhi thanks for your comments.
athira ,try once you will get it this time perfect.

malar said...

தேங்காய் பாலுடன் பழமும் பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்..

இதை குழந்தைகளும் விரும்பி சாபிடுவார்கள்....

ruthuthanu said...

வாடா எனக்கா ? சே .... ஆப்பம் எனக்கா ?
ok Superrrrrrrrrrrrrrrrrrrrrrr

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பார்க்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு அருமை . பகிர்வுக்கு நன்றி !

Sashi said...

Thanks for the clarification. I Was having this doubt for longtime. Will try that next time by following this recipe.

அன்னு said...

ஆஸியாக்கா,

நான் இன்று இந்த ஆப்பம் செய்தேன். ரெம்ப நாள் கழித்து ஆப்பம் செய்தது. ஆனால் பச்சரிசிக்கு பிரவுன் ரைஸ் உபயோகித்தேன். அதனாலோ என்னவோ சிறிது முரடாக இருந்தது ஆப்பம். பஞ்சு போலில்லை. இன்னொரு தடவை இந்த மாதிரியே செய்யும்போது பஞ்சு மாதிரி வர என்ன செய்ய வேண்டும்? நான் மற்றதெல்லாம் சரியான அளவில்தான் போட்டேன். அடுத்த தடவைக்கான் குறிப்பை இப்பொழுதே சொல்லிருங்க...Please :)

அன்னு said...

ஆஹா...மறந்துட்டேன்....இங்கே குளிர் ஜாஸ்தியா இருப்பதனால் மாவு சரியா பொங்கலை. அதனால் இருக்குமோ?

asiya omar said...

annu nan ippadi thaan seyreen,enakku nalla varuthu,kaalai araiththu iravu suttaal kuuda nallaa varum,soda uppu seerthiirkaLaa?uLuwthu soru serththiirkaLaa?ithu thaan en murai.oru silar theengkai serthu araippaangka.

mymoon said...

asiyaka aapam enaku rompa pudikum..apdiye verum aapam sugar thottu saapduven.intha time vaccation poitu varumbothu veetlae sudanumnu thonichu aapa satti venumae puthusa kalyanam aana ponnula so aapa satti thana tedi vanthuduchu(ilana atha epd vaanganum nu teriyama mulchrpen)....sudanum sudanum nu ninaikrathu ippo taan receipe paarthachu...senjranum soon

akka ellathaium evlo neram oora vaikanum?
iniku arathu vacha 12 hrs kalichu taan sudanuma?

kindly clear my doubts akka


regards,
mymoonmohideen

Asiya Omar said...

மைமூன் கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.4-6 மணி நேரம் ஊறவைக்கலாம்.ஆப்ப மாவு பொங்கி வர வேண்டும்.காலையில் அரைத்து இரவு சுட்டால் சரியாக இருக்கும்.அல்லது இரவு அரைத்து காலை சுடலாம்.மாவு பக்குவமாக பொங்கவில்லை என்றால் ஆப்பம் சாஃப்டாக இருக்காது.