Saturday, May 1, 2010

சிக்கன் சுக்கா


தேவையான பொருட்கள் ;சிக்கன் - 1கிலோ ,வெங்காயம் - 4, இஞ்சி பூண்டு விழுது -3 டீஸ்பூன்,பச்சை மிளகாய் - 3 ,கரம் மசாலா - அரைடீஸ்பூன்.மஞ்சள் தூள் - அரைஸ்பூன்,மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்,மிளகுத்தூள் -1 டீஸ்பூன்,சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,மல்லித்தூள் - 3 டீஸ்பூன்,எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,உப்பு - தேவைக்கு,மல்லிக்கீரை ,கருவேப்பிலை- ஒரு கைபிடியளவு.

6-8 Serves
சிக்கனை சுத்தம் செய்து இப்படி சிறிய துண்டுகளாக போட்டு கழுவி நீர் வடிகட்டிக்கொள்ளவும்.


மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,நறுக்கிய வெங்காயம்,வதக்கி,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,இஞ்சி பூண்டு,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு வதக்கியவுடன் சிக்கன் சேர்த்து பிரட்டவும்,அதிலேயே தண்ணீர் விடும்.மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு மீடியம் தீயில் 20 நிமிடம் வேக விடவும்.இடையில் பிரட்டி விடவும்.


நன்றாக சுண்டி சிக்கன் வெந்து வந்ததும் நறுக்கிய மல்லி இலை தூவவும்.


சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.இது எல்லாவகையான சாதம் வகைகளுக்கும்,சப்பாத்தி,நான் உடனும் தொட்டு சாப்பிடலாம்.
பின் குறிப்பு ; இதில் தக்காளி,தயிர் சேர்க்கவில்லை,சிலருக்கு தக்காளி தயிர் ஆகாது,அவர்கள் இப்படி செய்து சாப்பிடலாம்.மல்லிக்கீரை கடைசியில் இப்படி சேர்ப்பது தான் அதன் மணத்தையும் ருசியையே தூக்கும்.வாரம் ஒரு முறை செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் காய்கறி சமைக்கும் பொழுது கூட தேவைக்கு அப்ப அப்ப எடுத்து சைடுக்கு சாப்பிடலாம்.சீக்கிரம் கெட்டுப்போகாது.

--ஆசியா உமர்.

15 comments:

LK said...

ஒரு வணக்கம் ஒரு ஓட்டு .அப்புறம் எஸ்கேப்

அன்புடன் மலிக்கா said...

நான் தான் ஃபஸ்ட் ஆசியாக்கா. எப்படிகீறீங்க. சிக்க சுக்காவெல்லாம் சமைச்சு ஜமாய்கிறீங்க! சூப்பரப்பூ..

Geetha Achal said...

சூப்பராக் இருக்கின்றது...அருமை....

ஜெய்லானி said...

:-))

ஹரீகா said...

இன்னக்கி பகல் இதுதான் ஸ்பெஷல் மெனு - ரசம் துணையுடன், எப்ப சாப்பாட்டு நேரம் வரும், i am waiting

அக்பர் said...

அட இது நல்லாயிருக்கே.

செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்.

மின்மினி said...

சூப்பரப்பூ..சூப்பரப்பூ..

malar said...

இது காரம் அதிகாமாக இருகுமா?குறைவாக வேண்டும் என்றால் நீங்கள் சொல்லிய அளவில் இருந்து மாசாலாவின் அளவை குறைக்க வேண்டுமா?

எப்படி இருகீங்க ஆசியா?நலமா?

Mrs.Menagasathia said...

ஐய்யோ எச்சில் ஊறுதே...அருமை!!

asiya omar said...

எல்.கே,மலிக்கா,கீதாஆச்சல்,ஜெய்லானி,ஹரீகா,மின்மினி,மேனகா அனைவரின் கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

அக்பர் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மலர் உங்கள் கனிவான விசாரிப்பு மிக்க மகிழ்வை தந்தது. நான் மிக்க நலம்.நீங்கள் நலமா?எனக்கு கொஞ்சம் காரம் அதிகமாகத் தெரிந்தது.உங்கள் காரத்திற்கு தகுந்தபடி குறைத்தோ கூட்டியோ கொள்ளலாம்.

vanathy said...

ஆசியா அக்கா, பார்க்கவே சாப்பிட வேணும் போல இருக்கு. செய்து பார்த்திட்டு சொல்றேன். படங்கள் & ப்ரசன்டேஷன் அழகு.

Chitra said...

I was looking for mutton sukka recipe. Maybe I will try this with mutton. :-) Thank you.

நாஸியா said...

நேத்து டின்னருக்கு செஞ்சேன்.. எங்க மாப்பு இது ரொம்ப டாப்புன்னு சொல்லிட்டாங்க...

இப்படியே போனா நானும் ஒரு நாள் சமையல் ராணி ஆகிடுவேன்... இன்ஷா அல்லாஹ்..