Saturday, May 1, 2010

பூண்டு மீன் குழம்பு

தேவையான பொருட்கள் ;
ஏதாவது ஆற்று மீன் அல்லது கடல் மீன் - அரை கிலோ.
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் -100 கிராம்,
பூண்டு - 50 அல்லது 75 கிராம் (சுவைக்கு ஏற்ப)
தக்காளி - 200 கிராம்,
மிளகாய் - 4,
மல்லி கருவேப்பிலை -சிறிது,
புளி - எலுமிச்சை அளவு,
மிளகாய்த்தூள் - 3டீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரைஸ்பூன்,
சீரகத்தூள் -அரைஸ்பூன்,
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


வெங்காயம்,தக்காளி,பூண்டு நறுக்கி எடுத்து வைக்கவும்,மீனையும் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

ஒரு பெரிய மண்சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,வெந்தயம் சேர்க்கவும். வெந்தயம் முழுதாக போட விரும்பாதவர்கள் வறுத்து பொடித்தும் போடலாம்.


பின்பு கருவேப்பிலை,மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும்.

தக்காளி சேர்க்கவும்,உப்பு சேர்க்கவும்,பிரட்டி விட்டு சிறிது நேரம் வைக்கவும்,தக்காளி நன்கு மசிந்து விடும்.


மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

மசாலா வெந்து இப்படி தளதளன்னு வரும்.


புளித்தண்ணீர் சேர்த்து,நன்கு கொதி வந்ததும் மீனை போடவும்.

5 நிமிடத்தில் மீன் வெந்து விடும்,சிம்மில் வைக்கவும்,எண்ணெய் மேலே வரும்.மல்லி இலை தூவி இறக்கவும்.


சுவையான பூண்டு மீன் குழம்பு ரெடி.
தேங்காய் சேர்க்காமலே மீன் குழம்பு தூள் ஆக இருக்கும்.மீனும்,பூண்டும்,மசாலாவும் சேர்ந்து வீடே மணக்கும்.அதில் இருக்கும் பூண்டை சாததுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.விரும்பினால் குழம்பு கெட்டியாக இருக்க ஒரு டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றி சிம்மில் சிறிது நேரம் வைத்து இறக்கவும்.


--ஆசியா உமர்.

13 comments:

LK said...

present madam

Chitra said...

பூண்டு சேர்த்து செய்ததில்லை. Thank you for the tip.

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
Mrs.Menagasathia said...

மீன் குழம்பு வாசனை கமகமக்குது...அருமையக்கா!!

ஸாதிகா said...

ஹை ..அதே மண் சட்டி..அதே நிறைய பூண்டு போட்ட மீன் குழம்பு..ஆசியா..உங்கள் வீட்டு குமார் வைத்த அதே மீன் குழம்புதானா?இது வேறா?அவ்வளோவ் பெரிய சட்டிய அவர் எங்கிருந்து பிதுக்கொண்டு வந்தார்?

Geetha Achal said...

பொதுவாக எங்கள் வீட்டில் எப்பொழுதும் மீன் குழம்பில் தேங்காயினை சேர்க்க மாட்டாங்க...எங்க மாமியார் வீட்டில் தேங்காய் இல்லாமல் மீன் குழம்பே கிடையாது...ஆனால் இரண்டுமே மிகவும் விரும்பும்...சூப்பார்ப்ப் மீன் குழம்பு...

asiya omar said...

எல்.கே வருகைக்கு மகிழ்ச்சி.நீங்க பூண்டாவது சாப்பிடுவீங்களா?ஒட்டிற்கு நன்றி.
வருகைக்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

சித்ரா செய்து பாருங்க.நல்லாதான் இருக்கும்.

asiya omar said...

ஜெய்லானி நீங்க பேசாமல் ஏதாவது கடல் மீனிலேயே செய்து பாருங்க.

asiya omar said...
This comment has been removed by the author.
asiya omar said...

ஸாதிகா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நீங்க பார்த்த அதே பெரிய மண்சட்டி தான்.குமார் பக்குவத்தில் நான் வைத்த மீன் குழம்பு தான்.

asiya omar said...

கீதா ஆச்சல் நாங்களும் எங்க ஊரில் தேங்காய் விட்டு செய்வது வழக்கம்,ஆற்று மீனான தேழி,கெழுத்தி,வெளிச்சி மீனை புளி விட்டு ,தேங்காய் விடாமல் சுண்ட வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Unknown said...

Sema