Sunday, May 2, 2010

சந்திப்போமா அனைவரும் சந்திப்போமா

பிரபல பதிவர் ஸாதிகாவின் அமீரக வருகையையொட்டி ஏற்பாடு செய்த பெண் பதிவர்கள் சந்திப்பு :
சந்திப்போமா சந்திப்போமா என்றது
ஜலீலா ஹுஸைனம்மா மெயில்.
சந்திக்க ஆசை சிந்தித்தேன்
அவரிடம் கேட்டேன்
அழைத்து செல்வீர்களா?என்று
அவரும் பார்ப்போம் என்றார்.
பார்ப்போம் என்றால்
அழைத்து செல்வதாய் அர்த்தம்,
எப்படியும் வருவதாய் பதில் கொடுத்தேன்.
நேரம் நெருங்கியது
தூக்கம் தொழுகை மறந்தேன்.
புதிதாய் பார்க்கப் போகும் பரவசம்
ஆனாலும் போவோமோ என்ற
நம்பிக்கை முழுதாய் வரவில்லை
ஹுஸைனம்மாவை தவிர யாரையும்
பார்த்ததில்லை
யார் யார் வருவார்கள் என்றும்
தெரியாது.
இடம் முடிவானது.வியாழன் இரவு
ஏழு முப்பது மணிக்கு
நாங்களும் சரியாய் ஆஜராகிவிட்டோம்.
லாலா பாடும் லூலூ உள்ளே
ஓரமாய் மூன்று பெண்கள்

ஹுஸைனம்மா இருந்ததால் இலகுவாக
கண்டு கொண்டேன்
ரம்யமாய் மலர்
துறு துறுப்பாய் ஜலீலா
அடுத்து வந்தது சாட்சாத் என் சினேகிதி
ஸாதிகாவே தான் உடன் அவரின் தங்கை
அன்புத்தழுவல்,ஆர்ப்பரிப்பு
அடங்க சிறிது நேரம் ஆனது..
மெதுவாய் நகர்ந்தோம் அருகில்
உள்ள சிறிய பார்க்கிற்கு.
அங்கே எங்களை அன்போடு
எதிர்கொண்டு அழைத்தார் கவிதாயினி மலிக்கா.
அடுத்து வந்தது நம்ம
ப்ரிய பிரியாணி நாஸியா
அப்புறம்
மகா சுறுசுறுப்பாய் வந்தார்
அநன்யா மஹாதேவன்

ஆமாம் இன்னும் வருவதாய் சொன்ன
அந்த ஒருவர் யார்?
நம்ம மனோ அக்கா
மென்மையான மனோ அக்காவும் வந்து சேர்ந்தார்.
அறிமுகம் தொடர்ந்தது அன்பு விசாரிப்பு முடிந்தது
சமையல் ராணி ஜலீலாவும்,மலிக்காவும்
அமர்க்களமாய்,அட்டகாசமாய்
சமைத்த்தை அசத்தலாய் பரிமாற
மன நிறைவாய் ருசியாய் சாப்பிட்டோம்.
ஜலீலாவின் டாப் முர்தபா,பருப்பு வடை,அவித்த வேர்க்கடலை
மலிக்காவின் சூப்பர் ஸ்டஃப்ட் முட்டை மக்ரோனி ஆப்பம்.
எல்லாம் ருசியோ ருசி
.
என் மகனை அல் ஐனில் விட்டு வந்ததால்
என் கணவர் அவசரப்படுத்தியதால்
அன்பாய் ஜலீலா கொடுத்த முர்தபா,கடலை பார்சலுடன்
ஒன்பதரை மணிக்கு கிளம்பி விட்டோம்.
இனியும் சந்திப்போம்
இன்ஷா அல்லாஹ் !

--ஆசியா உமர்.

மகிழ்வான குறிப்பு : என் அன்பான அழைப்பிற்கிணங்கி சினேகிதி ஸாதிகா அல் ஐன் வருகையின் போது குடும்பத்துடன் எங்கள் வீடு வந்து சிறப்பித்தார்.வருகை அனைவருக்கும் மிக்க மகிழ்வை தந்தது.

26 comments:

ஹுஸைனம்மா said...

கவிதையாவே வடிச்சிட்டீங்களே, அழகாருக்குக்கா.

Aruna Manikandan said...

Sounds great!!!!!!
Hope U people had a wonderful time
Upload photos if possible :-)

Chitra said...

oooohhhhh!!! I missed being there....... Enjoy......!!!

Jaleela said...

ஆசியா அழகான தொரு வர்ணனை யுடன் அட போட்டோ உடன் போட்டு விட்டீர்களா?

இருந்த பிஸியில் போட்டோ எடுக்க மற்ந்துட்டேன்.
நீங்கள் அங்கிருந்து தோழிகளை தேடி வந்து சேர்ந்தது மிக ஆச்சரியம்.

vanathy said...

நல்லாயிருக்கு கெட்டு கெதர். சாப்பாடு பார்க்கவே அருமையாக இருக்கு.

அநன்யா மஹாதேவன் said...

கலக்கிட்டீங்க ஆசியா.. இவ்ளோ அழகா எழுதி இருக்கீங்களே? ரொம்ப ரசித்தேன்.

நாஸியா said...

அட கவிதையா!! ஹிஹி...

அந்த வடையும், முர்தபாவும், கோதுமை தோசை ஸ்டஃபிங்கும் நாக்குலயே இருக்குங்க!! ஹிஹி

ஸாதிகா said...

ஆசியா இன்னும் அந்த இனிய நினைவலைகளில் இருந்து மீள இயலவில்லை.கவிதையை அழகுற வடித்து கலக்கி விட்டீர்கள்.நட்ந்தவைகளை மீண்டும் கண்முன் கொணர்ந்து நிறுத்திவிட்டீர்கள் தோழி.

ஜெய்லானி said...

விவரித்த விதம் அழகா இருக்கு!!. :-)))))))))))))
:-)))))))))))))
:-)))))))))))))

மகி said...

பதிவர் சந்திப்பா? கலக்குங்கோ..கலக்குங்கோ! :)

athira said...

ஆ.. இப்படியெல்லாம் நடக்குதோ??? கண்பட்டுவிடும் என்பதால், எல்லாம் நல்லபடி முடிந்தபின் தானே சொல்கிறீங்க எல்லோரும் வெளியே.... மகிழ்ச்சியாக இருக்கு...


Jaleela said...
ஆசியா அழகான தொரு வர்ணனை யுடன் அட போட்டோ உடன் போட்டு விட்டீர்களா?

இருந்த பிஸியில் போட்டோ எடுக்க மற்ந்துட்டேன்// நல்ல வேளை இல்லையெண்டால் நீங்கள் எனக்கு மோர் தரவேண்டிவந்திருக்கும்...


ஸாதிகா said...
ஆசியா இன்னும் அந்த இனிய நினைவலைகளில் இருந்து மீள இயலவில்லை/// ஆ.... ஸாதிகா அக்கா வெந்த புண்ணில வேலைப்பாய்ச்சாதீங்கோ... நான் என்னைச் சொன்னேன்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான ஒரு சந்திப்பு.., தோழிகளுக்கு ரொம்ப மகிழ்ச்சியான அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா ஆசியா.. கவிதையாக வடித்தது அருமையிலும் அருமை.

asiya omar said...

ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

Aruna and Chitra ,of corse it was really a great pleasure.

asiya omar said...

ஜலீலா ,அநன்யா உங்கள் பாராட்டிற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

வானதி நிஜமாகவே அபிப்பிராய பேதமில்லாத மகிழ்ச்சியான கெட்டுகெதர்.நல்ல இதமான ரெசிப்பிக்களும் கூட.

asiya omar said...

நாஸியா உங்கள் குழந்தைதனத்தையும் மொக்கையையும் ரசித்தேன்.

asiya omar said...

ஸாதிகா உங்கள் வருகையையொட்டி அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொண்டமைக்கு முதலில் உங்களிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.எத்தனை மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெய்லானி ,ஸ்டார்ஜன் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

மகி வாங்க கருத்திற்கு மகிழ்ச்சி.

அதிரா நான் உண்மையாக உங்களை வடை சாப்பிடும் பொழுது நினைத்தேன்,வடை உங்களிற்காக தான் ஜலீலா செய்திருப்பாங்களோ!வந்து கருத்து சொன்னதே சந்திப்பில் கலந்து கொண்ட எஃப்க்ட்.

அன்புடன் மலிக்கா said...

கவிதையில் கலக்கிட்டீங்க. சந்திப்பின் குளீர் ஜுரம் இன்னும் விடலை.
நாங்களும் போட்டுயிருக்கோமுல்ல..

asiya omar said...

அருமையாக போட்டு அசத்திருக்கீங்க.வருகைக்கு மகிழ்ச்சி.

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள்!! நல்லா எஞ்சாய் பண்ணிருக்கிங்கன்னு உங்க பதிவிலே தெரியுது..

ஹரீகா said...

பதிவு மிக அருமை!! கலர்புஃல் எழுத்தில் கவிதையாய் எழுதிய நிகழ்வுகள்.. கண்ணுபட போகுது சுற்றி போடுங்க...

Ammu Madhu said...

புகைப்படம் எடுத்திருந்தால் பகிர்ந்துகொள்ளலாமே..நல்லா ஜாலியா இருந்திருக்கும் போல?

asiya omar said...

மேனகா உங்கள் கருத்து எனக்கு மிக்க ஊட்டத்தை தருகிறது.மகிழ்ச்சி.
ஹரீகா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.
அம்மு எல்லோரையும் பார்த்ததே மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.