Monday, May 3, 2010

சிம்பிள் சிக்கன் பாஸ்தாதேவையான பொருட்கள் ;
சிக்கன் - 200 கிராம்,
பாஸ்தா - 200 கிராம்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கொடைமிள்காய் - 1,
வெங்காயம் - 1,
அஜினோமோட்டோ - கால்ஸ்பூன் (விரும்பினால்)அல்லது சிக்கன் சூப் கியுப் - 1 ,
தக்காளி சாஸ் - 1டீஸ்பூன்,
சோயா சாஸ் - அரைஸ்பூன்,
ஹாட் சாஸ் - 1டீஸ்பூன்,
மிளகுத்தூள் -அரைஸ்பூன்,
உப்பு -சிறிது.

சிக்கனை வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்,வெங்காயம்,கொடை மிளகாய் கட் செய்து கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம்,கொடைமிளகாய் வதக்கி அஜினோமோட்டோ சேர்த்து (விரும்பினால்)வெந்த சிக்கனையும் சேர்த்து பிரட்டவும்,சிக்கன் சூப் கியுபை பொடித்து போடவும்,பின்பு தக்காளி சாஸ்,சோயா சாஸ்,ஹாட்சாஸ் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் தெளிக்கவும்.உப்பு சரி பார்க்கவும்,சூப் கியுபில் உப்பு இருக்கும்.மிளகுத்தூள் தூவவும்.

இப்பொழுது சிக்கன் ரெடி செய்தாச்சு,இனி அத்துடன் பாஸ்தா சேர்க்க வேண்டும்.

பாஸ்தாவை பக்குவமாக வேகவைத்து வடித்து வைக்கவும்.ரெடி செய்த சிக்கனுடன் பாஸ்தாவை சேர்த்து பிரட்டவும்.

சுவையான சிக்கன் பாஸ்தா ரெடி.சிக்கன் பதிலாக சிக்கன் ஃப்ராங்க்ஸ் (சாசேஜ் -அவித்து கட் செய்து போடவும்)உபயோகிக்கலாம்,விரும்பினால் மல்லி இலை அல்லது ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.அப்படியே கொஞ்சம் சீஸ் தூவிக்கோங்க.


-ஆசியா உமர்.

22 comments:

LK said...

enga vote panna pona athu vera engayo pothu ???

Chitra said...

ஆஹா, இத்தாலிய உணவு வகை கூட, இந்திய வகையில் செய்தால் நல்லா வரும் போல. :-)

asiya omar said...

எல்.கே இப்பதாங்க நானும் கவனிச்சேன்.பெயரை எடிட் செய்து விட்டேன்.

asiya omar said...

சித்ரா நான் அடிக்கடி இப்படி வெஜ் அல்லது சிக்கன் சாசேஜ் போட்டு செய்வேன்.எப்பவாவது சிக்கன் சேர்த்து செய்வேன்.நல்லா இருக்கும்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாவ் ரொம்ப சூப்பராஇருக்கு ஆசியாக்கா..

ஸாதிகா said...

பாஸ்தா பார்க்கவே அழகாக இருக்கின்றது.அங்குதான் விதவிதமான வடிவங்களில் பாஸ்தா கிடைக்கின்றதே.உட்னே செய்து பார்த்து விடுகிறேன்.

asiya omar said...

ஸ்டார்ஜன் உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

ஸாதிகா பார்க்க அழகாக இருந்தால் தானே குழந்தைங்க சாப்பிடுறாங்க.வருகைக்கு மகிழ்ச்சி.

Mrs.Menagasathia said...

பார்க்கும்போதே சாப்பிடத்தோனுது,அருமை!!

அஹமது இர்ஷாத் said...

சிக்கனில் வித்தியாச வகை.. அருமை.. ஊருக்கு போனதும் சாப்பிடனும்...

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி எங்க இருக்க? உடனே என் ப்ளாக் வா ,

ஒன்னு கூடிடான்கப்பா , ஒன்னுகூடிட்டாங்க , ஜெய்லானி நம்மக்கு தெரியாம , மகளிர் பிரிவு தனி ஆலோசனை நடத்தி உள்ளது , நாம சீக்கிரம் ஆலோசனை செய்து அவர்களை நம்மிடம் சரணடைய செய்வோம் .

வெற்றி வேல் , வீர வேல்
................................................
..............................................\

இல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்
(சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா)

மேடம்ஸ் , வாழ்த்துக்கள் , எல்லாரும் ஒன்றாக சந்தித்து இருக்கிறீர்கள் , மீண்டும் வாழ்த்துக்கள்

Geetha Achal said...

மிகவும் சூப்பரான சிக்கன் பாஸ்தா...அருமை...இந்த bowtieபாஸ்தாவினை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க...

asiya omar said...

மேனகா,கீதா ஆச்சல் கருத்திற்கு மகிழ்ச்சி.உங்கள் இருவரின் சமையல் அழகே தனி.

asiya omar said...

அஹமத் இர்ஷாத் நீங்களே செய்து சாப்பிடலாம். ஈசி தான்.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

vanathy said...

ஆசியா அக்கா, பார்க்கவே சாப்பிட வேணும் போல இருக்கு. அசத்தலான படங்கள்.

asiya omar said...

வானதி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

நாஸியா said...

ok right right! senju paathudalam!

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Mano Saminathan said...

ஆசியா!

இதுபோல நானும் செய்வதுண்டு. செய்முறை விளக்கப் படங்கள் மிக அழகாக இருக்கின்றன! சிக்கன் மாகி க்யூப் சேர்த்து செய்வதால் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்!

கடந்த வியாழனன்று நடந்த நம் சந்திப்பை மிக அழகாக கவிதை போல விவரித்திருக்கிறீர்கள்! உங்களுக்கு என் நன்றி!!

asiya omar said...

மனோ அக்கா உங்கள் வருகை,கருத்து மிக்க நன்றி.உங்களை எல்லாம் பார்க்கப்போகிறோம்னு ரொம்ப ஆவலாய் வந்தேன்,நீங்களும் உங்களின் டைட் செடுயுலிலும் வந்து சந்தோஷப்படுத்தியது மிக்க மகிழ்ச்சி.

Jaleela said...

பாஸ்தாவில் சாசேஜ் போட்டு செய்ததில்லை

Jaleela said...

பாஸ்தா நானும் வித விதமான ஷேப்பில், இறால், சிக்கன், மட்டன், பிளெயின் பாஸ்தா,ஸ்வீட் பாஸ்தா என்று செய்வதுண்டு