Wednesday, May 5, 2010

ஐடியா குழிப்பணியாரம்


பணியாரச்சட்டி சும்மாவே இருந்துச்சு, இட்லி மாவு மீதியாச்சு,உடனே உபயோகிச்சாச்சு.

தேவையான பொருட்கள்;

2 கப் இட்லி மாவுடன், பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது,தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,இஞ்சி மெல்லிய துருவல் - 1 டீஸ்பூன்,பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது,மல்லி கருவேப்பிலை - சிறிது நறுக்கியது,சோடா உப்பு - பின்ச்,முட்டை - 1,உப்பு -தேவைக்கு.




இட்லி மாவுடன் எல்லாம் சேர்த்து கரைத்து எடுத்து கொள்ளவும்.


குழிப்பணியாரச்சட்டியில் சிறிது எண்ணெய் தடவி ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வெந்து எடுக்கவும்.


சூப்பர் சாஃப்டான இட்லி மாவு குழிப்பணியாரம் ரெடி.இதனை தேங்காய் சட்னி,குருமா,குழம்பு வகைகளுடன் பரிமாறலாம்.

-ஆசியா உமர்.
குறிப்பு : எல் .கே வேறு முட்டை சேர்க்காமல் எதுவும் செய்யமாட்டீங்களான்னு கேட்பாரேன்னு யோசித்தேன்,ஆனாலும் மனசு கேட்கலை,சேர்த்து விட்டேன்,சேர்த்ததே தெரியாது.அவ்வளவு ருசியாக இருக்கும்.


14 comments:

LK said...

நல்ல இருக்குங்க. இதை முட்டை சேர்க்காமலும் செய்யலாம் ..
//சேர்த்ததே தெரியாது.அவ்வளவு ருசியாக இருக்கும்.//

இருந்தாலும் முட்டை சேர்க்காமதான் நான் செய்வேன் ...
நம்ம வீட்டு பக்கமும் வாங்க. ரொம்ப நாள் ஆச்சு உங்களை அங்க பார்த்து

மகி said...

நல்லாருக்கு ஆசியாக்கா..நான் முட்டை சேர்க்காமல் இதே மாதிரி செய்வேன்.

நாஸியா said...

Super super!! I am coming to your hosue some day! insha ALlah

Chitra said...

இனிப்பு குழி பணியாரத்துக்கு முட்டை சேர்ப்பேன். காரத்துக்கும் முட்டை சேர்த்து செய்வது புதுசு. செய்து பார்க்கிறேன். நன்றி.

Jaleela said...

ஹை குட்டி பந்து போல் சூப்பராக இருக்கு

ஸாதிகா said...

குட்டிகுட்டியாக குழிப்பணியாரம்.பார்க்கவே அழகாக இருக்கு தோழி.அதிலும் தேங்கயெல்லாம் போட்டு..கண்டிப்பா டேஸ்ட்டுக்கு குறைச்சல் இருக்காது.

vanathy said...

ஆசியா அக்கா, நல்லா இருக்கு. என்னிடம் இந்த குழிப்பணியாரம் செய்யும் தட்டு இல்லை.

asiya omar said...

எல்.கே ,மகி நானும் தனியாக் செய்திருக்கேன்,அருமையாக இருக்கும்.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

நாஸியா,சித்ரா,ஜலீலா,ஸாதிகா கருத்திற்கு மகிழ்ச்சி.
வானதி ஒரு நான்ஸ்டிக் சட்டி வாங்கிக்கோங்க.குழிப்பணியாரம் வித விதமாக செய்யலாம்.

Ammu Madhu said...

ஆசியா பணியாரம் சூப்பர்.நானும் இதே முறையில் தான் செய்வேன் ஒரு வித்யாசம் நான் முட்டை சர மாட்டேன்.
தொட்டுக்க தங்கை சட்டினி,கார சட்டினி கலக்கலா இருக்கும்.

Deivasuganthi said...

சூப்பர்!!!!!!!நான் இதில முட்டைக்கு பதிலா, கேரட் துருவி சேர்ப்பேன். அதுவும் நல்லா இருக்கும்.

asiya omar said...

அம்மு,தெய்வ சுகந்தி கருத்திற்கு மகிழ்ச்சி.இன்னும் விதம் விதமாக செய்யலாம்.

இமா said...

ஆவலைத் தூண்டுறீங்க ஆஸியா. குழிப்பணியாரச்சட்டி வாங்கிவிடத் தான் வேண்டும் போலிருக்கிறதே! ;)

asiya omar said...

வாங்கி விடுங்கள் இமா,செய்து தான் பாருங்களேன்,இன்னும் புதுசு புதுசாக உங்க கற்பனையில் செய்ய ஆரம்பித்து விடுவீங்க.