Saturday, May 8, 2010

Prawn Briyani / இறால் பிரியாணி


தேவையான பொருட்கள் ; இறால் உரித்த பின்பு -அரைகிலோ ,
பாசுமதி அரிசி -அரைகிலோ,
எண்ணெய் - 100 மில்லி,நெய் - 50 மில்லி,
வெங்காயம்- 200 கிராம்,
தக்காளி -200 கிராம்,மிளகாய் -4,
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா (ஏலம் பட்டை கிராம்புத்தூள்)- அரைஸ்பூன் அதனுடன் சோம்புத்தூள் அரைஸ்பூன்,சீரகத்தூள் அரைஸ்பூன்,
மிள்காய்த்தூள் -1- 2 டீஸ்பூன்,
மல்லி,புதினா - கைபிடியளவு.
எலுமிச்சை-பாதி பழம்,
பிரியாணி இலை அல்லது ரம்பை இலை,
உப்பு- தேவைக்கு.
இறாலை சுத்தம் செய்து 5 தண்ணீர் விட்டு அலசி,உப்பு,மஞ்சள் போட்டு திரும்பவும் அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.பின்பு அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு,உப்பு,முக்கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து அரைமணி நேரம் வைக்கவும்.



மசாலா கலந்து வைத்த இறாலை ஒரு பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்.



பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்நது,வெங்காயம் சிவந்ததும்,இஞ்சிபூண்டு வதக்கி கரம்மசாலா,சீரகம்,சோம்பு பொடி சேர்த்து,வதக்கவும்.


வதங்கிய இஞ்சி பூண்டு கரம் மசாலா வகைகளுடன்,மல்லி புதினா ,மிள்காய் சேர்த்து வதக்கவும்.



பின்பு தக்காளி,முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி பின்பு சிறிது மூடி வைத்தால் தக்காளி மசிந்து எண்ணெய் மேலெழும்பி வரும்.




பிரியாணி மசாலா ரெடியானவுடன் ஊற வைத்த அரிசியை ஒன்றரை அளவு(காய்ந்த அரிசியாக இருந்தால் சிறிது தண்ணீர் அதிகம்


சேர்த்து )தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.



அடுப்பை மீடியமாக வைக்கவும்.பின்பு வதக்கி வைத்த இறாலை பாதி வெந்து வந்த பிரியாணி சாதத்துடன் கலந்து பிரட்டி விடவும்.எலுமிச்சை பிழியவும்.மூடி விடவும்.சாதம் முக்கால் பதம் வெந்ததும் அடுப்பை குறைக்கவும்.




பிரியாணி பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி தம் போடவும்.அடிகனமான பாத்திரமாக இருக்க வேண்டும்.15 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.


பிரியாணி பக்குவமாக வெந்து இருக்கும்.பிரட்டி சுடச்சுட பரிமாறவும்.சுவையான இறால் பிரியாணி ரெடி. விரும்பினால் ஸ்பிரிங் ஆனியன் கட் செய்து தூவியும் பரிமாறலாம்.

பின் குறிப்பு :இறாலுடன் தயிர்,எண்ணெய் ,மசாலா சேர்த்து பிரட்டி வைப்பதால் சஃப்டாக இருக்கும்.சில பேருக்கு இறால் ஒத்துக்கொள்ளாது அவ்ர்கள் இதில் சீரகம்,சோம்பு,தயிர்,எலுமிச்சை சேர்ப்பதால் தைரியாமாக சாப்பிடலாம்.வயிற்றுக்கு பிரச்சனை செய்யாது.இதுவே காரம் போதுமான அளவு இருக்கும்,விரும்பினால் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்.எப்பவும் இறால் வாங்கியதும் உரித்து உடனே சமைத்தால் ருசி அருமையாக இருக்கும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் வடித்து மிக்ஸ் செய்து தம் போட்டால் அதன் ருசியும் பிரமாதமாக இருக்கும்.நான் எப்பவும் வடித்து தான்
போடுவது வழக்கம்,சிலர் வடித்து செய்ய விரும்ப மாட்டார்கள்,அவர்களுக்காக இந்த முறையில் கொடுத்து இருக்கிறேன்.

-ஆசியா உமர்.

19 comments:

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
Chitra said...

Delicious!

அன்புடன் மலிக்கா said...

ஆகா மணமணக்குதே எனக்கும் ஒரு பிளேட் வெரும் பிளேட் அல்ல பிரியாணியோட பார்சல்..

athira said...

ஆ.... படமே சூப்பர், சுவை சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன்.

அன்னையர்தின வாழ்த்துக்கள் ஆசியா.

நாஸியா said...

ஆஹா! காலையிலயே இந்த பிரியாணிய பாத்துட்டு எனக்கு கண்ணுல தண்ணியே வந்துட்டு... இறால் சாப்பிடனும்னு ஆசையா இருக்கு.. ஆனா நானு பிரியாணி ட்ரை பண்ணினா முடிஞ்சுது கதை..

ஆளாளுக்கு வட்டலப்பம், பிரியாணின்னு பச்ச புள்ளைய வெறுப்பேத்துறீங்க...

ஹிஹி..

Mrs.Menagasathia said...

வாவ்வ் அருமையான இறால் பிரியாணி,அவருக்கு செய்து கொடுக்கனும்....

Devisri said...

Super a irruku neenga solum pothae..... i will try this

asiya omar said...

ஜெய்லானி தமிலிஷ் சப்மிட்டிற்கு மிக்க மகிழ்ச்சி.

சித்ரா,மலிக்கா,அதிரா,நாஸியா,மேனகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

தேவிஸ்ரீ உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

vanathy said...

ஆசியா அக்கா, மிகவும் அருமையாக இருக்கு. 4 வது படம் சூப்பரோ சூப்பர்.

Jaleela said...

இறால் போட்டு பிரியாணீ செய்தால் இந்த மணத்துக்கே சாப்பாடு உள்ளே போகும்..

எம் அப்துல் காதர் said...

இறால் இந்த சீசனில் கொள்ளை விலை சொல்றாங்க. கிலோ 30 /40 ரியால் ஆகுது. நீங்க போட்டிருக்கிற குறிப்பை பார்த்தா காசா பெரிசு, சாப்பாடு தான் ஹி..ஹி

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அசத்தல் . ஆஹா உடைகளில் தான் வண்ணங்கள் என்றிருந்தேன் உணவிலும் "Prawn Briyani" வண்ணம் அருமை . வாழ்த்துக்கள்

asiya omar said...

வானதி, ஜலீலா தங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

அப்துல்லா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.பிள்ளைகளுக்கு எல்லாம் செய்து கொடுக்கணும் தானே.விலை நீங்க சொன்ன அளவு இல்லை.இங்கே பரவாயில்லை.

asiya omar said...

பனித்துளி சங்கர் உங்கள் பாராட்டிற்கும்,வருகைக்கும் மிக்க நன்றி.

Mano Saminathan said...

ஆசியா!

இறால் பிரியாணி பார்க்கும்போதே சுவை அதிகம் என்று தெரிகிறது. புகைப்படங்களும் மிக அழகு!

மங்குனி அமைச்சர் said...

கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு , அது எப்படி மேடம் கரக்டா பொண்டாட்டி ஊருக்கு போயிருக்க நேரம் பாத்து கரக்ட்டா போட்ருக்கிங்க

எம் அப்துல் காதர் said...

ஒரு சின்ன திருத்தம் மேடம் : நான் அப்துல் காதர், (((அப்துல்லா))) என்று வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தெரிவித்திருக்கிறீர்கள்!!! முதல் வருகைக்கு நல்ல வரவேற்பு தான். ஹை..ஜாலி..

Kavitha said...

ஆசியா,

இறால் பிரியாணி செய்து பார்த்தேன்..
அனைவருக்கும் பிடித்து இருந்தது..நன்றி