Monday, May 10, 2010

பேசன் கீர்

முதலில் 100 கிராம் கடலை பருப்பை நன்கு ஊறவைத்து குக்கரில் மூன்று விசில் வைத்து இறக்கவும்.

நன்கு பருப்பு வெந்த பின்பு மசித்து விடவும்.கெட்டியாக இருந்தால் ஒரு கப் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.வெந்த கடலை பருப்பு,பால் ,தட்டிய 4 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.அதனுடன் மில்க் மெய்ட் (sweetened condensed milk) இனிப்பிற்கு தேவைக்கு சேர்க்கவும்.
2 டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரி,பாதாம்,பிஸ்தா,கிஸ்மிஸ் வறுத்து நெய்யுடன் ரெடி செய்த கீரில் விடவும்.சாஃப்ரான் பிரியப்பட்டால் 2 இழை சேர்க்கலாம்.
தித்திப்பான பேசன் கீர் ரெடி.விஷேச நாட்கள்,விருந்தினர் வரும் சமயம் விருந்து சாப்பாட்டிற்கு பின்பு கொடுத்து அசத்தலாம்.

அதனை அழகாக பவுலில் ஸ்பூன் போட்டு பரிமாற மனசெல்லாம் இனிப்பு தான்.இந்த தித்திப்பான ஸ்வீட் என் வெட்டிங் அனிவர்சரி ஸ்பெஷல்.


--ஆசியா உமர்.


24 comments:

Mrs.Menagasathia said...

ம்ம்ம் அனிவெர்சரி ஸ்பெஷல் ரொம்ப இனிப்பாக இருக்குக்கா,அருமை!!

vanathy said...

ஆசியா அக்கா, எப்படி இப்படி புதுசு புதுசா அசத்துறீங்கள். பார்க்கவே ஆசையாக இருக்கு. நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் கொடுக்கிறேன்.

Chitra said...

///இந்த தித்திப்பான ஸ்வீட் என் வெட்டிங் அனிவர்சரி ஸ்பெஷல்.///


super. appuram, main menu??? mmmm.....

மங்குனி அமைச்சர் said...

கல்யாண நாள் சுவீட் சூப்பர் , சாப்பிட்டேன்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப அருமையா இருக்கு..

எம் அப்துல் காதர் said...

"கை பிடித்த நாளை" ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய உங்களுக்கும் உங்களவர்க்கும் மற்றும் பிள்ளைகளுக்கும்-- வாழ்த்தை தவிர இங்கிருந்து கொண்டு நான் வேறு என்ன சொல்ல முடியும் மேடம்.

asiya omar said...

மேனகா முதல் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.
வானதி மிக்க மகிழ்ச்சி.எங்க அக்கா வீட்டு கிரகப்பிரவேஷத்தில் இந்த கடலைபருப்பை வைத்து வெல்லம் சேர்த்து ஒரு ஸ்வீட் செய்திருந்தார் பெங்களூர் சமையற்காரர்,நான் அதனை கொஞ்சம் மாடரேட் பண்ணி இந்த ஸ்வீட் உருவாச்சு.

asiya omar said...

நன்றி சித்ரா,அப்புறம் இன்னும் ஒன்னொன்னாக வரும்.

asiya omar said...

அமைச்சர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ஸ்டார்ஜன் உங்கள் பாராட்டிற்கு மகிழ்ச்சி.
அப்துல் காதர் உங்கள் நிறைவான வாழ்த்து ஒன்றே போதும்,நீங்க யாருன்னு தெரியலையே.

Geetha Achal said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...இதுநாள் வரை பாசிபருப்பில் தான் பாயசம் செய்து இருக்கின்றேன்...கடலைபருப்பு பாயசம் மிகவும் அருமையாக இருக்கின்றது...

உங்களுடைய ஸ்வீட்டினை சாப்பிட்டாச்சு....தங்கஸ்...

Jaleela said...

கல்யாண நாள் வாழ்த்துகக்ள் ஆசியா.
கொஞ்சம் பிஸியாகிட்டேன்.
இல்லைன்னா காலையிலேயே பார்ர்த்து இருப்பேன்.

இந்த தித்திப்பூ போல் என்றும் சந்தோஷமாய் வாழ்ந்திட வாழ்த்துகக்ள்.

asiya omar said...

ஜலீலா நான் இன்று மாலை தான் போஸ்ட் செய்தேன்.வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.
கீதாஆச்சல் கருத்திற்கும்,வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Mahi said...

பேசன் கீர் அருமை. கடலை மாவுல பாயசமான்னு நினைச்சிட்டேன்,ஒரு நிமிஷம்!

Wish You a very happy Anniversary!

asiya omar said...

thanks for your comments and wishes mahi.

மனோ சாமிநாதன் said...

ஆசியா!

நேற்று மாலை நான் உங்கள் தளத்தைப் பார்க்கவில்லை. இப்போது பார்த்த பிறகு தான் விபரம் அறிந்தேன்.

திருமணத்தின் மிகப்பெரிய பேறே வருடங்கள் செல்லச் செல்ல, அன்பும் இருவருக்கிடையே அதிகமாகிக்கொண்டே போவதுதான். இதுதான் இல்லறத்தின் மிகப் பெரிய செல்வம். இந்த பாக்கியம் அமையப்பெற்ற உங்கள் இருவருக்கும் இந்த திருமண நாளுக்காக என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

நீங்கள் செய்திருக்கும் பாயசம் போல உங்கள் வாழ்வில் என்றும் இனிமையும் அன்பும் தொடரட்டும்!

ஸாதிகா said...

என் பையனுக்கு மிகவும் பிடித்த கீர்.அழகாக சமைத்து அழகாக படம் எடுத்துபோட்டு உள்ளீர்கள்

asiya omar said...

மனோ அக்கா உங்களைப்போன்ற அனுபவசாலிகள் சொல்லும் பொழுது மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

தோழி ஸாதிகா ஆமாம் இந்த கீர் நல்ல டேஸ்டாக இருக்கும்.உங்கள் பாராட்டிற்கு மகிழ்ச்சி.

Deivasuganthi said...

வித்தியாசமா இருக்குதுங்க!!!!!
வாழ்த்துக்கள்!!!!!!!!!

asiya omar said...

மிக்க மகிழ்ச்சி ,நன்றி .தெய்வசுகந்தி.

Kanchana Radhakrishnan said...

அருமையா இருக்கு.

asiya omar said...

காஞ்சனா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

MaryamFathima said...

Assalamu alaikum Asiya Akka. I read your blog. Many returns for your anniversary. All of your recipes look so yummy.!!!!!

asiya omar said...

thanks for your comments mariyam fathima.