Wednesday, May 12, 2010

ஈசி மீன் குழம்பு & ரோஸ்ட்

இந்த மாதிரி ஈசியாக செய்கிற குழம்பு தாங்க செம டேஸ்ட்.

இந்த ரோஸ்ட் அதை விட ருசி அருமையாக இருக்கும்.

சாளை மீன் வாங்கி நல்ல செதில் எடுத்து தலை,வயிறு பகுதி கழித்து விட்டு சுத்தமாக இப்படி கழுவி எடுத்துக்கோங்க.ஒரு கிலோவிற்கு பெரிய மீன் என்றால் 16 -20 மீன் இருக்கும், இன்னுமொரு சைஸ் 40-50 எண்ணிக்கை ஒரு கிலோவிற்கு இருக்கும். சிறிய மீன் மிக ருசியாக இருக்கும்.சைஸ் பார்த்து வாங்கிக்கோங்க.

குழம்பிற்கு தேவையான பொருட்கள் ;
சாளை (மத்தி)மீன் - அரைகிலோ,
சின்ன வெங்காயம் - 100 கிராம் அல்லது பெரிய வெங்காயம்- 1,
தக்காளி - 100கிராம்,
புளி - எலுமிச்சை அளவு,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் ,
கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம் தலா - அரைடீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் குவியலாக,
மஞ்சள் தூள் -அரைடீஸ்பூன்,
இஞ்சி நறுக்கியது - ஒருடீஸ்பூன்,
பூண்டு பல் நறுக்கியது - 2 டீஸ்பூன் ,
மிளகாய் - 3,
மல்லி கருவேப்பிலை - சிறிது.
உப்பு - தேவைக்கு.


வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம்,போடவும்,சிவந்ததும்,வெங்காயம்,இஞ்சி நறுக்கியது,பூண்டு நறுக்கியது,மிளகாய்,கருவேப்பிலை போட்டு வதக்கவும்.


சிறிது வதங்கியதும்,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு போட்டு பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும்.தக்காளி,வெங்காயம் மசிந்து எண்ணெய் மேலெழும்பி வரும்.
புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.புளி மசாலா வாடை அடங்கி வரும்.


சுத்தம் செய்த மீனை ரெடியான குழம்பில் போடவும்.


தீயை மிதமாக வைக்கவும்,பத்து நிமிடத்தில் மீன் வெந்து தயார் ஆகிவிடும்,மல்லி இலை நறுக்கி விரும்பினால் தூவவும்.

சுவையான சூப்பர் ஈசி மீன் குழம்பு ரெடி.ஒயிட்ரைஸ்,பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.
சாளை மீன் ரோஸ்ட்:

தேவையான பொருட்கள்;

சாளை (மத்தி) மீன் - அரைகிலோ,
சிறிய வெங்காயம்,
தக்காளி - 1 அரைத்து கொள்ளவும் ,
மிளகாய்த்தூள் - 1 -2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரைஸ்பூன்,
சீரகத்தூள் -அரைஸ்பூன்,
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன் ,
கடலை மாவு - 1டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
இவை அனைத்து சேர்த்து மீனுடன் வைக்கவும்.கடலை மாவு சேர்ப்பதால் மீனுடன் மசாலா சேர்ந்து மீனும் பொரிக்கும் பொழுது உடையாது.

மசாலா மீன் வயிறு மற்றும் எல்லா இடமும் படுமாறு கலந்து வைக்கவும்.


கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ,கருவேப்பிலை இரண்டு இணுக்கு போடவும்,வெடித்ததும் மசாலா கலந்து வைத்த மீனை போடவும்.சிவந்ததும் பிரட்டி ,இருபுறமும் சிவந்து மசாலாவும் வெந்து ரோஸ்ட் ஆனவுன் எடுக்கவும்.சுவையான சாளை மீன் ரோஸ்ட் ரெடி.


பின் குறிப்பு : மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் தவிர குழம்பில் எதுவும் சேர்க்கலை,ஆனாலும் இந்த மீனின் ருசியில் குழம்பு அபாரமாக இருக்கும்.குழம்பு கெட்டித்தன்மை பிடித்த மாதிரி வைத்துக்கொள்ளவும்.இஞ்சி பூண்டை நறுக்கி தான் போடவேண்டும்.தேங்காயும் சேர்க்க தேவையில்லை,விரும்பினால் சேர்க்கலாம்.இது இங்கு மிகவும் விலை குறைவாக ஈசியாகக் கிடைக்கக்கூடிய மீன் (dhs 2.50/kg).வாயு தொந்திரவு உள்ளவர்கள் அளவாக சாப்பிடவும்.


--ஆசியா உமர்.

29 comments:

Jaleela said...

ப்டி மீன்பார்த்ததும் வாய் ஊறுகிறது, நான் மட்டும் தான் சாப்பிடுவேன்,, முள்ளு மீன் வீட்டில் யாரும் சாப்பிட மாட்டாங்க, அபப்டியே செய்தாலும் ம்ள்ளு பிச்சி கொடுக்கனும்,

ஆசியா எனக்கு செய்து தருவீஙக்ளா?

எம் அப்துல் காதர் said...

"சிவந்ததும் பிரட்டி ,இருபுறமும் சிவந்து மசாலாவும் வெந்து ரோஸ்ட் ஆனவுன்"-- கொஞ்சம் எலுமிச்சை சாரும், தேங்காய் பாலும் ஊற்றினால் இன்னும் டேஸ்ட் அதிகமா இருக்குமோ மேடம்!!

asiya omar said...

ஜலீலா செய்து தந்துவிட்டால் போச்சு,கொஞ்சம் மசுமையாக சாதம் வடித்து இந்த குழம்புடன் சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.எங்க வீட்டில் எல்லோரும் இந்த மீன் சாப்பிடுவாங்க,அவர் தூத்துக்குடி தெர்மலில் வேலை பார்த்த சமயம் முதல் இந்த மீனை சாப்பிட ஆரம்பித்தது,விட மனசு வரலை.இந்த மாதிரி சின்ன மீனில் நிறைய கால்சியம் இருக்கு ஜலீலா.

asiya omar said...

அப்துல் காதர் நீங்கள் சொன்னபடி செய்தால் நிச்சயம் அருமையாக இருக்கும்.இனி அவ்வாறு ஒரு முறை செய்து பார்க்கிறேன்.ஆனால் இது முள் மீனாக இருக்கே.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி உலவு.காம்.

Geetha Achal said...

சூப்பர்ப் மீன் குழம்பு...எதுவுமே அவசர அவசரமாக செய்யும் பொழுது பல சமயம் அதிகசுவையுடன் இருக்கும்...மிகவும் அருமையான மீன் வருவல்...மத்திமீனை இங்கிலிஷில் என்ன சொல்லுவாங்க...இதே மாதிரி இங்கு மீனை பார்த்து இருக்கின்றேன்...ஆனால் வாங்கியதில்லை..அடுத்த முறை வாங்கி பார்கிறேன்...

asiya omar said...

மத்தி மீனை sardines -என்று ஆங்கிலத்தில் சொல்வாங்க கீதா.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

நாஸியா said...

ஆசியாக்கா உங்க வீட்டு கதவை யாரோ தட்டுறாங்க, பாருங்க..

(ஹலோ அது நாந்தான் .. சைக்கிள் கேப்புல உங்க மீன் ஆனத்த உசார் பண்ணிட்டோம்ல)

எனக்கும் சங்கரா மீன தவிர முள்ளு மீனே இறங்காது.. ஆனா உங்க ரெசிபிய பார்த்ததும் வாய் ஊருது!

malar said...

இந்த் மீனை எங்க ஊரில் பொடித்து அதாவ்து மல்லி ,மிளகு,சீரகம்,வ மிளகு,பொடி உள்ளி 20,பூண்டு பல்,தக்காளி போன்ற மீனுக்கு தேவயான அத்தனையும் முளுதாக போட்டு வறுத்து நல்ல அறைத்து தேங்கானாமும் வைது சாப்பிடால் ரொம்ப நல்ல இருக்கும்..

உங்க மீன் ரோஸ்டை பார்தாலே சாபிடனும் போல் இருக்கு...

asiya omar said...

நாஸியா முள்ளீல்லாத இன்னும் எத்தனையோ மீன் இருக்கே.அதை எல்லாம் சாப்பிட்டு பாருங்க.கொஞ்சமா இதை செய்து பாருங்க.

asiya omar said...

மலர் கருத்திற்கு மகிழ்ச்சி.உங்கள் ப்ளாக்கில் குறிப்பாக கொடுத்தால் நானும் செய்து பார்ப்பேன்,எனக்கு யாராவது வித்தியாசமாக சொன்னால் செய்து பார்க்கணும் போல இருக்கும்.இது சும்மா சோம்பேறிங்க செய்கிற ஆனம்.

Ann said...

Wow.. Pakka vea aasaiya irukku. Romba authentic -ka seithirukinga.

அனு said...

மீன் எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம்.. குழம்பு , ரோஸ்ட் ரெண்டும் பார்த்தாலே சாப்பிடனும்னு ஆர்வமா இருக்கு.. இந்த வீக் எண்ட், இது தான் பண்ண போறேன்..

என் பிரண்டு வீட்டுல மாங்காய் மீன் குழம்பு செய்து குடுத்தாங்க.. செம்ம டேஸ்ட்.. அது எப்படி செய்யுறதுன்னு சொல்ல முடியுமா?? அதே போல், எந்தெந்த மீன் எதுக்கு (குழம்பு / ரோஸ்ட்) நல்லா இருக்கும்னு சொல்ல முடியுமா? இதுல நான் ரொம்ப வீக்.. நன்றி..

athira said...

ஆசியா மிக அருமையாக இருக்கு. சாளை மீன் ரோஸ்ட் தான் அதிகம் எனக்கு பிடித்திருக்கு. குழம்பு சூப்பராகத்தான் இருக்கும் என தெரியுது. ஆனால் சிறிய மீன் என்றால் முள் எடுத்துச் சாப்பிடுவது பெரும் பாடாக இருக்கும்.

vanathy said...

ஆசியா அக்கா, மிகவும் அருமை. இங்கே இந்த மீன் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் செய்து பார்க்க வேண்டும். மீன் ரோஸ்ட் என்றால் என் பிள்ளைகளின் ஃபேவரைட்.

Mano Saminathan said...

மீன் குழம்பு பிரமாதம் ஆசியா!

எப்போதுமே செய்முறையை விளக்கமாக, படிக்கத் தூண்டுவதாய் கொடுப்பது உங்கள் சிறப்பு!

மங்குனி அமைச்சர் said...

நான் பஸ்ட்டு மீனு பேரு தான் "ஈசி" ன்னு நினைச்சிட்டேன் மேடம்

அன்னு said...

யக்கா,

எந்த ஊர்லக்கா இருக்கீங்க? நானும் போன வாரம் நடந்தே உக்கடம் வரை போயி மீன் வாங்கிக்கலாம்னு நினச்சேன். போயி அந்தம்மாகிட்ட பேரம் பேசி நல்ல புது மீனா பாத்து வாங்கி சுத்தம் பண்ணி எடையும் போட்டாச்சு, என் பையன் தூக்கத்துல இருந்து எழுப்பிட்டான். ஆஹா நமக்கு கனவுல கூட மத்தி மீன் சாப்பிட கொடுத்து வெக்கலையான்னு அங்கலாய்ப்பு. அமெரிக்காவில் ஜம்பமாய் வாழ்ந்து என்ன பிரயோஜினம், ஒரு மத்தி மீன் கூட freshஆய் வாங்கி சாப்பிட முடியாத நிலை. நீங்க சாப்பிடுங்க்கா...முடிஞ்சா அடுத்த நாள் இட்லியோட மிச்ச மீன் குழம்பையும் டேஸ்ட் பண்ணிக்குங்க. ஹ்ம்ம்...

asiya omar said...

thanks for your loving comments ann.

asiya omar said...

அனு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது மாங்காய் மீன் குழம்பு நிச்சயம் போடுகிறேன் நீங்க கேட்ட கேள்விக்கும் பதில் எழுதுகிறேன்.

asiya omar said...

அதிரா ,வானதி உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

மனோ அக்கா உங்க பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மங்குனி வருகைக்கு நன்றி.இது மற்ற மசாலா,தேங்காய் எல்லாம் சேர்க்காமல் குவிக்காக செய்வதால் ஈசி மீன் குழம்பு.

asiya omar said...

அன்னு உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.இரண்டு நாளாய் பிஸி.பதில் போட முடியலை.உக்கடம் என்றால் கோவைதானே,நானும் 4 வருடம் அங்கு குப்பை கொட்டியதால்(TNAU) உக்கடம் தெரியும்.ஊர் போகும் சமயம் வாங்கி சாப்பிடுங்க.

Priya said...

thangal blog mega arumaiyaga ullathu....

sam said...

உங்க மீன் குழம்பு செய்தாச்சு.நீங்க உங்க கேரளத்து மீன்குழம்பு குறிப்பில் குறிப்பிட்டிருந்தபடி மிளகாய்தூளுக்கு பதிலாக மீன்மசாலாபொடியும்,மேலும் தேங்காய்பாலும் உபயோகித்துக்கொண்டோம்.தேங்காய் எண்ணெய்,கொடம்புளி சேர்த்துக்கொண்டோம்.அதே ரெஸ்டாரெண்ட் சுவை கிடைத்தது.மிகவும் அருமை.இனி வாரத்திற்கு எப்படியும் ஒன்றிரண்டு நாட்கள் செய்வோம்.ரொம்ப நன்றி.

உங்க தயவால ரெஸ்டாரெண்டிற்கு செல்லும் அலைச்சலும்,செலவும் மிச்சம்.நாங்களே சமைத்து சாப்பிடலாம்.நன்றி.

Asiya Omar said...

பின்னூட்டதிற்கு நன்றி.சாம் இனி போட்டோ எடுத்து அனுப்பிடுங்க :)))).நீங்களும் ஒரு ப்ளாக் பொதுவாக எழுத ஆரம்பிக்க்லாமே.

Jayaseelan V said...

Good taste

chikkus Kitchen said...

supera iruku ...apdiyea sapduven :)