Saturday, May 15, 2010

ஆப்பிள் கட்டர்

இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் வாங்கிய எல்லாவற்றையும் ஊர் எடுத்து செல்வது சிரமம்.1999-2000 துபாயில் இருந்துவிட்டு எல்லா சாமான்களையும் விட்டு விட்டு சென்றது அடிக்கடி நினைவு வரும்.ஆசை ஆசையாக
வாங்கியதை இப்படி அப்படியே விட்டு விட்டு சென்றதும் அதன் பின்பு நான் விருப்பப்பட்டு எந்த சாமானையும் அதிக விலை கொடுத்து வாங்குவது இல்லை.2004 -கில் திரும்ப அபுதாபி வந்த பொழுது தேவைக்கு மட்டுமே சாமான்கள் வாங்குவது வழக்கம். இந்த மாதிரி சமையல் சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் என்றால் எனக்கு விருப்பம் என்பதை தெரிந்து நாங்கள் வீட்டுக்கு வாங்கும் பொருட்களிற்கு உபயோகமான பொருட்கள் ஆஃபரில் இணைத்து போட்டிருந்தால் அதை வாங்குவோம் . அதில் ஒரு சந்தோஷம்.என் ப்ளாக்கில் இதற்கு ஒரு பகுதியை ஒதுக்க முடிவெடுத்து இந்த இடுகை.நேரம் கிடைக்கும் பொழுது என் பாத்திரங்கள் பற்றிய இடுகை இந்த பகுதியில் வரும்.

சமையலை பார்த்து கொஞ்சம் போரடித்து இருக்கும்.அதனால் இதை பாருங்களேன்.


நான் ஊரில் இருந்த சமயம் அவரும் மகனும் ஆப்பிள் சாப்பிட வாங்கிய கட்டர் இது.
ஒரு தட்டில் ஆப்பிளை வைத்து கட்டரை மேலே வைத்து அமுக்கினால் ஒரு நிமிடத்தில் கட் செய்த ஆப்பிள் ரெடி.படங்களை பார்த்தாலே விளங்கும்.


இறுதியில் நடு பகுத்தியை இவ்வாறு உருவ வேண்டும்.துண்டான ஆப்பிள் ரெடி.


அப்படியே எடுத்து சாப்பிடலாம்.என் கணவர் உபயோகிக்க நான் படம் எடுத்து போட்டிருக்கிறேன்.அவ்வளவே !
எப்பவும் என்னோட பழகிய தோழிகளுக்கு சிறியதாக கிஃப்ட் யாருக்கும் வாங்கணும் என்றால் கண்ணாடி,பீங்கான் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் தான் என் சாய்ஸ் .சில சமயம் என் கணவர்,குழந்தைகள் விருப்பமும் இருக்கும்.அப்ப இந்த பாத்திரங்கள் பக்கம் தலை காட்ட முடியாது.இப்படியான என்னுடைய பாத்திரங்கள் மீதான கிரேஸ் பற்றி எழுதணும் பார்ப்போம்.
--ஆசியா உமர்

12 comments:

vanathy said...

very cute. May be I should get one apple cutter.

Jaleela said...

ஹா ஹா ஆசியா நானும் இது போல் தான் சின்ன அயிட்டம் தேடி தேடி வாங்குவேன், அதில் இந்த ஆப்பில் கட்டரும் ஒன்றும்.

ஏன் கேட்கிறீங்க ஃபுல்லா என் அவசர எனர்ஜிய அதில் கான்பிக்க உடைந்தே போச்சு.

இப்ப புதுசா வாங்கி இருப்பது , குட்டி இரண்டே அங்குல அளவுள்ள தினம் டீக்கு இஞ்சி துருவ ஸ்ராப்பர் கம், பீலர்.

ரொம்ப வசதியா இருக்கு

asiya omar said...

vanathy thanks for your comment.

asiya omar said...

ஜலீலா நல்ல திடமாகத்தானே இருக்கு,எப்படி உடைந்தது.நான் எப்பவும் கட் செய்து கொடுப்பது தான் வழக்கம்.இது அவர்கள் உபயோகத்திற்கு.

எம் அப்துல் காதர் said...

அருமையான கட்டிங்கா இருக்கே என்று என் மனைவியிடம் கேட்டேன். அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஆப்பிள் கட்டர் வாங்கி இருப்பதாக சொன்னார்கள். அது எப்படி இருக்கு என்று நான் கேட்டு வாங்கி பார்க்கவுமில்லை. அவர்கள் காட்டவுமில்லை. இன்று உங்களிடம் பார்த்து விட்டேன். அருமை! இதில் இவ்வளவு விஷயமிருக்கா. பெண்களுக்கென்று சில அறிவார்ந்த ரசனைகளும், நுணுக்கங்களும் அலாதியானது. அதை தூர நின்று பார்த்தாலும் ரசித்தாலும் ஒரு தனி பரவசம் தான். இவை எல்லா பெண்களுக்குமே பொருந்தும்.

மகி said...

வாவ்..சூப்பரா இருக்கு ஆப்பிள் கட்டர்!

ஜீனோ said...

ஆசியா சிஸ்டேர்,ஆப்பிள் கட்டர் அயகா இருக்குது..ஜீனோக்கு ரெம்போ யூஸ் ஆவும்..உந்த தட்டோடு சேர்த்து கட்டரை அப்பூடியே ஜீனோஸ் கொர்னர் பக்கமா அனுப்பிடுங்கோ,ஓக்கை? டாங்ஸூ!

asiya omar said...

ஜீனோ வருகைக்கு மகிழ்ச்சி.ஆப்பிள்கட்டர் தானே அனுப்பிட்டாப்போச்சு.

Mrs.Menagasathia said...

சூப்பரான ஆப்பிள் கட்டர்!!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனுபவமும் . கடந்த நினைவுகளும் அழகாக தெரிகிறது உங்களின் இந்த ஆப்பிள் கத்தரிப்பில் .அனைத்தும் அழகான புகைப்படங்கள் . இவை அனைத்தும் நீங்களே எடுத்தவை என்று எண்ணுகிறேன் . பகிர்வுக்கு நன்றி !

asiya omar said...

மேனகா உங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.

பனித்துளி சங்கர் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

இமா said...

நானும் வைத்திருக்கிறேன் ஆசியா.
இன்னொருவிதமானது ஒரு தோழர் வீட்டில் பார்த்தேன். அதில் ஆப்பிளை மாட்டிவிட்டுச் சுற்றினால் தோலை எடுத்துவிடும்.