Friday, May 21, 2010

ஸவர்மா ஃபலாஃபில்.

என்னுடைய அரேபிய உணவுகள் அறிமுகத்தில் இதனை நிச்சயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.மத்திய கிழக்கு அரபு நாடுகளில் இந்த ஸவர்மா ஃபலாபில் ரொம்ப பிரசித்தம்.சிக்கனை பெரிய பெரிய ஸ்லைஸ் ஆக கட் செய்து பெரிய கம்பியில் அடுக்கி தணலில் வேக வைத்து, குபுசில் (அரபிக் ப்ரெட்)ஒயிட் ஸாஸ் தேய்த்து தணலில் வெந்த சிக்கனை செதுக்கி எடுத்து வைத்து ,அத்துடன் ஃப்ரென்ச் ஃப்ரைஸ்,சாலட் லீவ்ஸ்,உப்பில் ஊறிய (வினிகரில்)வெள்ளரி வைத்து ரோல் செய்து தருவதே சவர்மா .இது மட்டன் ,ஸ்பைசி சிக்கன் என்று வெரைட்டியாகவும் கிடைக்கும்.அப்புறம் இந்த சவர்மா ஷாப்பில் ஃபலாஃபில் -ன்னு வடை மாதிரி ஒண்ணு விற்பாங்க,அது கொண்டைக்கடலையை ஊறவைத்து அரைத்து,பார்ஸ்லி இலை,பூண்டு,வெங்காயம்,சீரகம்,உப்பு,வெள்ளை எல்லு எல்லாம் சேர்த்து ,வடை மாதிரி தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்திருப்பாங்க.அதற்கு பூண்டு சாஸ்,தஹினா(எள்ளு பேஸ்ட்)கலந்த மாதிரி தொட்டு சாப்பிட தருவாங்க.இது ஈவ்னிங் ஸ்னாக்காக நிறைய பேர் சாலட் லீவ்ஸ்,டொமட்டோவுடன் இங்கே சாப்பிடுவது வழக்கம்.

ஸவர்மாவாவை இப்படி தாங்க சாண்ட்விச் பேப்பரில் ரோல் செய்து தருவாங்க.
ஸவர்மாவுடன் வெஜ் பிக்கிள்(வினிகரில் ஊரிய கேரட்,வெள்ளரி,முள்ளங்கி,பச்சை மிள்காய்) தருவாங்க,இந்த ஸவர்மாவை கடித்து கொண்டு இந்த பிக்கிளையும் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.பின் குறிப்பு :வெஜ் பிரியர்களுக்கு ஃபலாபில் சண்ட்விச் கிடைக்கும்.அதுவும் ஸவர்மா டேஸ்டில் இருக்கும்.அரபு நாட்டில் வாழும் வெஜிடேரியன்ஸ் ஃபலாபில் சாண்ட்விச் வாங்கி சாப்பிடுங்க.மேலே இணைத்த படம் எங்கள் வீட்டுப்பக்கம் உள்ள லயாலி -என்கிற லெபனீஸ் ரெஸ்டாரண்ட் , என் மகன் கிளிக்கியது.
-ஆசியா உமர்.


26 comments:

ஜெய்லானி said...

ஹி..ஹி..:-)))))))))

LK said...

அடுத்து எப்ப சைவம்னு சொல்லுங்க அப்பா வரேன்...

டாடா

Chitra said...

over here, the Lebanese restaurants have those meals. they call that meat preparation as Gyros (pronounced as eeros) - served with pita bread (naan like ones) and Falafals.
I am sure that the taste may not be authentic as they might have adopted to the American flavor.
In Your post, the photos look very tempting. .... :-)

ஜெய்லானி said...

மலையாளி கடையில வாங்கினா முக்கால்வாசி இலை ,தக்காளி ,போட்டே ஏமாத்திடுவான் படுபாவி பசங்க. லெபனானி 100 % ஓக்கே!!

யாதவன் said...

நன்றாக இருக்கு

Kousalya said...

அதை taste பண்ணனும்னா ரொம்ப தூரம் வரணும், பார்த்தே திருப்தி பட்டுக்க வேண்டியதுதான். மகன் எடுத்த போட்டோ சூப்பர், லைட் effect நல்லா இருக்கு...

Jaleela said...

இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

என் பையனுக்ககாக அடிக்கடி வீட்டிலேயெ செய்வது.
அந்த ருசி வரலன்னாலும், ஓரளவிற்கு வரும்,

sandhya said...

ஆசிய உமர் ஜி குபூஸ் (khuboos ) எப்பிடி பண்ணனம் என்று சொல்லி தருவிங்களா ..

இளம் தூயவன் said...

ம் என் மகனாருக்கு பிடித்த சாவர்மா போட்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

ஐ..நாங்கள் உங்கள் வீட்டிற்கு பறிமாறிய உணவுவகைகள்.சவர்மாவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.கத்தார்,துபையில் விதவிதமான சுவைகளில் சவர்மாவை டேஸ்ட் பண்ணியாச்சு.இங்கும் கூட கடைகளில் கிடைக்கின்றது.விலைதான் அதிகம்.

asiya omar said...

ஜெய்லானி,LK கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

chitra,here in lebanese restaurant the taste is really delicious than other shops.thanks for your comment.

asiya omar said...

யாதவன் மிக்க நன்றி.

asiya omar said...

கௌசல்யா ஒரு விசிட் வாங்க.சாப்பிட்டு பார்க்கலாம்.

சந்தியா இதுவரை குபூஸ் கடையில் தான் வாங்கி இருக்கிறேன்,முயற்சி செய்யும் பொழுது நிச்சயம் சொல்லி தருகிறேன்.

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி,ஒரு காலத்தில் என் பிள்ளைங்க இரவு தினமும் ஸவர்மா சாப்பிட்ட காலம் தான் நினைவு வருது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

asiya omar said...

ஸாதிகா,நாங்கள் சென்னை வந்திருந்தபொழுது அபிராமி மாலில் ரூ 40 கொடுத்து வாங்கி சவர்மாவை டேஸ்ட் செய்தோம்,ஏண்டா வாங்கினோம்னு ஆகிவிட்டது.இங்கு சாப்பிட்ட ருசி வராது தான்.உம்ரா செய்ய சென்றிருந்த பொழுது மெக்கா சவர்மா ரொம்ப பெரிதாக அது வேறு டேஸ்ட்.இடத்திற்கு இடம் சுவை வேறுபடும்.

asiya omar said...

ஜலீலா நீங்க எல்லாமே வீட்டில் ட்ரை பண்ணிடுவீஙகப்பா.இப்ப ப்ளாக்கில் நான் ரெகுலராக மதியம் சமைப்பதை மட்டும் போட்டு வருகிறேன்,எனக்கும் innovative dishes கொடுக்க ஆசைதான்,ட்ரையல் பார்க்கணும்.

athira said...

ஆசியா புதுப்பெயரெல்லாம் சொல்லி நாவைத் தூண்டிவிடுறீங்கள்... பலாபில் என்பதுதான் இங்கே கெபாப் என்ற பெயரில் வாங்கிறனாங்கள் என நினைக்கிறேன், நிறைய சலாட் வகை சேர்த்து நாண் ரொட்டியோடு தருவார்கள்.

asiya omar said...

அதிரா,கருத்திற்கு மகிழ்ச்சி.கபாப் என்பது வேறு,அது சிக்கன்,மட்டன்,பீஃப் சேர்த்து செய்வது,இது ஒன்லி கொண்டைக்கடலை மட்டுமே,வடை மாதிரி.

Mano Saminathan said...

ஷவர்மா, ஃபலாஃபெல் பற்றிய விளக்கங்கள் நன்றாக இருக்கின்றன, ஆசியா!
சில வருடங்களுக்கு முன் இருந்த ருசி இப்போது அனேகமாக எங்கும் இல்லை என்றே சொல்லலாம். ஜெய்லானி சொன்னதுபோல காய்கறி வகைகளைத்தான் நிறைய வைத்துக்கொடுக்கிறார்கள். சாஸ் பெயருக்குத்தான் தடவித் தருவார்கள்!

Mrs.Menagasathia said...

ஸ்வர்மாவை இங்கு Grecன்னு சொல்லுவாங்க.சூடாக சாப்பிடும் போது நல்லாயிருக்கும்..

vanathy said...

ஆசியா அக்கா, ம்ம்... யம்மி. நல்லா இருக்கு. அருமையாக இருக்கு.

Geetha Achal said...

மிகவும் அருமையாக இருக்கின்றது..படங்கள் சூப்பர்ப்...

Mahi said...

நானும் இங்கே ஒரு லெபனீஸ் ரெஸ்டாரண்ட்லே ஃபலாஃபில் சாப்ட்டிருக்கேன் ஆசியாக்கா..காரசாரமா சாப்பிட்டே பழகியதால் எனக்கு அவ்வளவா பிடிக்கலை.:) :)

asiya omar said...

மனோ அக்கா கருத்திற்கு மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

கீதாஆச்சல் மிக்க நன்றி.

asiya omar said...

மகி,இங்கு மொறு மொறுன்னு சும்மா சூப்பராக இருக்கும்.இடத்தை பொறுத்து ருசி மாறுபடலாம்.