Wednesday, May 19, 2010

வெஜ் தால்ச்சா

தேவையான பொருட்கள் ;

துவரம் பருப்பு - 100 கிராம்

கடலை பருப்பு - 50 கிராம்

கத்திரிக்காய் - 150 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி -2

மிளகாய் - 2

மாங்காய் -சிறியது 1

மல்லி கருவேப்பிலை - சிறிது.

எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்

கடுகு ,உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2

புளி- நெல்லி அளவு

செய்முறை:

குறிப்பிட்டபடி நறுக்கி வைக்கவும்.

மசாலா - மிளகாய்த்தூள் - அரைஸ்பூன்

சீரகத்தூள் - அரைஸ்பூன்

பெருங்சீரகத்தூள் -அரைஸ்பூன்

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா -அரைஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 + அரைஸ்பூன்


துவரம் பருப்பு,கடலை பருப்பு,மஞ்சள்,சிறிது எண்ணெய் சேர்த்து மூன்று விசில் வைத்து இறக்கவும்,துவரம் பருப்பு மசிந்தும் கடலை பருப்பு வெந்தும் ஒன்று ஒன்றாக இருக்கும்.

வெந்த பருப்புடன் கத்திரிக்காய்,மாங்காய்,வெங்காயம்,தக்காளி,மிளகாய்,மசாலா வகைகள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்,கரம் மசாலா சேர்த்து ,புளித்தண்ணீர் ,மல்லி இலை சேர்த்து உப்பு பார்த்து கலந்து குக்கரை மூடவும்.இரண்டு விசில் வைக்கவும்.


தாளிப்பு சட்டியை வைத்து எண்ணெய் காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு போட்டு வெடித்ததும்,வற்றல்,கருவேப்பிலை சேர்க்கவும்,வெடிக்கவும் வெங்காயம் சேர்த்து அரைஸ்பூன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு சிவற இஞ்சி பூண்டு வாடை மடங்கும் வரை வதக்கவும்.


வதக்கியவற்றை வெந்த பருப்பு,கத்திரிக்காய்,மாங்காய் கலவையில் கொட்டவும்.


சூப்பரான கமகம மனமும்,சுவையும் உள்ள வெஜ் தால்ச்சா ரெடி.




இதனை பிரியாணி,நெய்சோறு ,ப்லைன் ரைஸ் உடனும் பரிமாறலாம்.இட்லி,தோசை,சப்பாத்தி,பரோட்டா,அரிசிமாவு ரொட்டி எல்லாவற்றிருக்கும் பொருத்தமாக இருக்கும்.விரும்பினால் தாளிசத்தில் தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.

---ஆசியா உமர்.

18 comments:

LK said...

வித்தியாசமா இருக்கு .. தங்க்ஸ் வந்தப்புறம் செய்ய சொல்லனும்

மகி said...

nallaa irukku asiya akka!

Chitra said...

veg. லேயும் நிறைய ரெசிபீஸ் போட்டு அசத்துறீங்க. :-)

athira said...

ஆசியா இது நிட்சயம் சுவையாகவேதான் இருக்கும். மாங்காய், தக்காழி, புளி மூன்றும் சேர்ந்து போடும்விதம் நன்றாக இருக்கு.

Mrs.Menagasathia said...

சூப்பராயிருக்கு,செய்து பார்க்கனும்....

Geetha Achal said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்...சூப்பர்ப்....

vanathy said...

ஆசியா அக்கா, மிகவும் அருமையாக இருக்கு.
கடவுளே அதிராவின் தக்கா"ழி " இன்னும் ஆசியா அக்காவின் கண்ணிலை படவில்லை போல இருக்கு.

//தங்க்ஸ் வந்தப்புறம் செய்ய சொல்லனும் //
எல்கே, எப்போதும் மற்றவர்களின் கையை எதிர்பாராமல் நீங்களே செய்து சாப்பிடோணும்.

மங்குனி அமைச்சர் said...

ஆகா எனக்கு தாளிச்சா ரொம்ப புடிக்கும் , ஆனா பாருங்க எனக்கு கத்திரிக்காய் அலர்ஜி

sandhya said...

பார்த்த உடன் பசியே தூண்டுடிறது ..நானும் செய்து பார்கிறேன் ...பழம் பொறி செய்வதற்கு மைதா அல்லது அரிசி மாவு எடுத்தா போதும் .உங்க வருகைக்கு நன்றி ..

எம் அப்துல் காதர் said...

இன்று உம்ரா போகிறோம். திங்கள் தான் திரும்ப வருவோம். துவா செய்யுங்கள். எல்லோருக்கும் நாங்களும் துவா செய்கின்றோம்.

Cool Lassi(e) said...

Umm..yummy dish. Never heard of this dish before. It looks very versatile too. :)

asiya omar said...

LK,மகி,சித்ரா,அதிரா,மேனகா,கீதா ஆச்சல்,வானதி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மங்குனி அமைச்சருக்கு கத்திரிக்காய் அலர்ஜி என்றால் அதனை நீக்கிவிட்டு சாப்பிட்டால் போச்சு.

asiya omar said...

இன்ஷா அல்லாஹ் !சிறப்பாக உம்ராவை நிறைவேற்றிவிட்டு வர துவாச்செய்கிறேன்,நாங்கள் உம்ரா செய்திருக்கிறோம்,ஹஜ் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

asiya omar said...

சந்தியா முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
cool lassie thanks for your comment.

யாதவன் said...

அருமை...அருமை...வாழ்த்துகள்!

asiya omar said...

யாதவன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

LK said...

//எல்கே, எப்போதும் மற்றவர்களின் கையை எதிர்பாராமல் நீங்களே செய்து சாப்பிடோணும்./

eppavum seyven naan. aana ippa koncham sombala iruku athan matter