Friday, May 21, 2010

டொமட்டோ ஃபிஷ் ஃப்ரை

தேவையான பொருட்கள்;


மீன் - அரைகிலோ (கருவாவல்,பாறை,கொடுவா ஏதாவது ஒரு வகை மீன்)


எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்


மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்


மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்


சீரகத்தூள் - அரைஸ்பூன்


இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்


வெங்காயம் - 1


தக்காளி- 2


பச்சை மிள்காய் - 2


மல்லி,கருவேப்பிலை - சிறிது


உப்பு - தேவைக்கு


முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து அரைஸ்பூன் மிள்காய்த்தூள்,மிளகுத்தூள்,உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.அரை மணி கழிந்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனை பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்த பின்பு அதே பேனில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,இஞ்சி பூண்டு,மிள்காய்,மல்லி கருவேப்பிலை போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு சேர்த்து மசிய விடவும்,அத்துடன் மீதி உள்ள அரைஸ்பூன் மிளகாய்த்தூள்,மிளகுத்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பொரித்த மீனை சேர்த்து பிரட்டி சிம்மில் தக்காளி சுண்டும் வரை வைக்கவும்.

சுவையான டொமட்டோ ஃபிஷ் ஃப்ரை ரெடி.மல்லி இலை தூவி பரிமாறவும்.இது நான்,சப்பாத்தி,சாதம் வகைகளுடன் பரிமாறலாம்.
- ஆசியா உமர்.

15 comments:

LK said...

ஆஜர். நன்றி அப்புறம் வரேன் இப்போதைக்கு :)

Chitra said...

மீன்.......... மீன்....... மீன்........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... Thank you for the recipe.

ஜெய்லானி said...

:-))))

asiya omar said...

LK மிக்க நன்றி.எடுத்த போட்டோக்கள் போட்ட பின்பு வெஜ் செஸ்சன் ஆரம்பிக்கும்.

asiya omar said...

சித்ரா o.k.o.k.o.k ,thanks for your lovimg comments.

asiya omar said...

ஜெய்லானி ஏதோ பெரிய முடிவெடுத்தது போல் தெரிகிறது.

ஜெய்லானி said...

@@@ asiya omar--//ஜெய்லானி ஏதோ பெரிய முடிவெடுத்தது போல் தெரிகிறது.//

ஹி...ஹி... :-))))))))))))))))))

இளம் தூயவன் said...

என் ஊரில் இதற்கு பெயர் பாங்கான் என்று சொல்வார்கள் . நல்ல ருசியாக இருக்கும்.

Jaleela said...

ம்ம் டொமேட்டோ பிஷ் பிரை அசத்தலாக இருக்கு

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு நன்றி.பாங்கான் பெயர் புதுசாக இருக்கே நீங்க எந்த பக்கம்?

asiya omar said...

ஜலீலா வரவிற்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

அட..வித்தியாசமாக இருக்கு தோழி.

Geetha Achal said...

மிகவும் வித்தியசமாக இருக்கின்றது...சூப்பர்ப்...ஒருமுறை செய்து பார்க்கிறேன்...நன்றி...

இளம் தூயவன் said...

http://ilamthooyavan.blogspot.com

asiya omar said...

ஸாதிகா,கீதா ஆச்சல் மிக்க நன்றி.

இளம் தூயவன் உங்க ப்ளாக் பார்த்தேன்.மகிழ்ச்சி.