Sunday, May 23, 2010

மங்களூர் விமான விபத்து


மங்களூர் விமான விபத்து
மனதை உளுக்கி எடுக்கிறது,
வேதனையை போக்க
ப்ளாக் ப்ளாக்காய் போய்
அனுதாபம் தெரிவித்தும்
என் நெஞ்சம் வெடிக்கிறது
என் மனபாரத்தை
எங்கனம் இறக்குவது
நான்கு வரிகளாவது
நானும் எழுதினால்
ஆறுதல் கிடைக்குமா?
மக்கள் யாராயினும்
எம் மனித குலமல்லோ !
மருகி விம்முகிறது மனம்
மருந்திட யாரால் முடியும்?
இனி இந்நிலை வராமல் காக்க
இறைவா நீ அருள்புரிவாயா?
--ஆசியா உமர்.

9 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மிகுந்த வருத்தத்தை தந்த சம்பவம். நேற்று செய்திக் கேட்டு அதிர்ச்சியானது.., ஒரு வேலையும் ஓடவில்லை. இப்ப வரைக்கும் அதே நினைப்பாகவே இருக்கிறது. என்ன செய்ய இதுமாதிரி விபத்துக்கள் ஏற்படாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக.. இறந்தவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தை கொடுப்பானாக.. அவர்களின் குடும்பங்களின் இன்னல்களை காத்துஅருள்வானாக... ஆமீன்.

ஜெய்லானி said...

:-((((((((((

சுந்தரா said...

//இனி இந்நிலை வராமல் காக்க
இறைவா நீ அருள்புரிவாயா//

இந்த வேண்டுதலைத்தவிர நம்மால் வேறென்ன செய்யமுடியும்? :(

இளம் தூயவன் said...

என் தாயகத்தை சோகத்திற்கு உள்ளாகிய விமான விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

LK said...

:(((

மின்மினி said...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.

மங்குனி அமைச்சர் said...

:-((((((

vanathy said...

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஸாதிகா said...

இறைவா அனைத்தும்மKஅலையும் இப்படிப்பட்ட கொடூர மரணங்களில் இருந்து காப்பாறு என்று மனம் அலைபாய்கின்றது ஆசியா.