Wednesday, May 26, 2010

கார் முன் சீட்டில் பெண்கள்

ஆண்கள் மட்டுமே அதிகமாக கார் ஓட்டி வந்த காலம் மலை ஏறிவிட்டது.இப்ப பெண்க்ளும் கார் ஓட்டுறாங்க,இப்ப அது இல்லைங்க பிரச்சனை.பெண்கள் கார் ஓட்டினால் கூட காருக்கும்,யாருக்கும் ஒன்றும் ஆகாது.ஆனால் ஆண்கள் கார் ஓட்டும் பொழுது பக்கத்தில் முன் சீட்டில் இருக்கும் பெண்களால் ஏற்படும் பிரச்சனை சொல்லி முடியாது.

கணவரும் மனைவியும் பயணம் செய்தால் மனைவியின் பேச்சை காது கொடுத்து கேட்டே ஆகவேண்டும்,பேச்சு சுவாரசியத்தில் யூ டெர்ன் எடுக்க வேண்டிய இடத்தில் நேரே சென்று விடுவார் அப்புறமென்ன ஆராம்பண்ணை மாப்பிள்ளை ஊர்வலம் சுற்றின கதை தான்,கால் மணி நேரத்தில் போக வேண்டிய இடத்திற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும்.

அப்புறம் வேகம் குறைவாய் போனால் என்ன இவ்வளவு மெதுவா போறீங்கன்னு கேள்வி,இந்தம்மாக்கு அங்கு ஸ்பீட் லிமிட்டுன்னு தெரியாது,பாவம் அதற்கும் ஆண்கள் விளக்கம் சொல்லனும்,வேகமாக போனாலாவது சும்மா இருக்காங்களா?என்னங்க இவ்வளவு வேகமாக போறீங்கன்னு குடைசல்,அது ஹைவேயாக இருக்கும்,அங்கு மெதுவாப்போனால் என்ன ஆகும்,ஒன்று மேல் ஒன்று மோதவேண்டியது தான்,இதை கார் ஒட்டும்பொழுது எத்தனை முறை சொன்னாலும் திரும்ப திரும்ப கேள்வி கேட்டு பெரிய தொந்திரவாத்தான் இருக்கும்.பல வருஷமாக கார் ஓட்டுகிறவங்களுக்கு எது எப்படின்னு தெரியாதா? இந்தம்மா காரில் ஏறி உட்கார்ந்தால் அந்த வேலையாவது கணவனை நிம்மதியாக செய்ய விடுறாங்களா?சும்மா சும்மா கேள்வி கேட்டு அங்கேயே வாக்கு வாதம்,இனிமேல் தப்பித்தவறி கூட மனைவியை முன்னாடி ஆண்கள் உட்கார சொல்வார்களா என்ன?


சரி ஷாப்பிங் போறப்ப பார்க்கிங்காவது நிம்மதியாக செய்ய முடியுதா? கணவர் தேடி போடட்டுமேன்னு இருக்கிறது இல்லை,அங்கே பாருங்க,ஒரு இடம்,அட இங்கேயே இடம் இருக்கேன்னு சொல்லி அவனை ஒரு வழி பண்ணிடுவாங்க.கடைசியில் பார்த்தால் நோ பார்க்கிங் ஏரியா அல்லது ஊனமுற்றோர் பார்க்கிங் ஆக இருக்கும்,அதற்குள் இருந்த இடத்தில் மற்றொருவர் பார்க்கிங் செய்ய இருந்த இடமும் போய் மறுபடியும் தேடுதல் வேட்டை தான்.

இதெல்லாம் விடுங்க காரில் கொஞ்ச நேரம் பேசாம அவங்களால் வர முடியுமா?நீங்களே சொல்லுங்க,சந்தோஷமாக பேசிட்டு வந்தா பரவாயில்லை,வாக்குவாதம்,குடும்ப பிரச்சனை காரில் அரங்கேறினால் ஆண் எப்படிங்க நிம்மதியாக கார் ஓட்டுவான்.
சில பேர் குழந்தைகளை முன்னே வைத்துக்கொண்டு உட்கார்ந்து பண்ணுகிற அட்டகாசம தாங்கமுடியாது.விதிமுறைகளை யார் பின்பற்றுகிறார்கள்.அப்படி இல்லைன்னால் பின்னாடி பிள்ளைகளை உட்கார வச்சிட்டு பிள்ளைகளை கவனிக்கிறேன்னு திரும்பி திரும்பி பார்த்து அவங்களோட பேசி பேசியே ஆண்களின் கவனத்தை சிதற அடிப்பது,இது மட்டுமா சில வீடுகளில் ஆண்கள் இருந்தால் கூட அவ்ரகளை முன்னால் இருக்க விடுவது இல்லை.இந்த பெண்கள் ஏறி உட்கார்ந்து பண்ற அலப்பரை இருக்கே,அடேங்கப்பா தாங்க முடியாது.


எனக்கு ஒரு மெயில் வந்தது,அதில் உள்ள செய்தி சுருக்கம்.
ஒரு பெண் சமையலறையில் ஆம்லெட் போட்டு கிட்டு இருப்பா,அவள் கணவன் அருகே வந்து சட்டி காயலை அதற்குள் முட்டையை உடைத்து ஊற்றிவிட்டாய்,எண்ணெய் ஏன் இவ்வளவு அதிகம் ,உப்பு அதிகமாக போடலையே,நல்ல கலக்குனியா ?மிளகு போதுமா?சீக்கிரம் திருப்பி எடு,அடாடா நல்லா வெந்திடுச்சே,இன்னும் கொஞ்சம் சீக்கிரம் எடுத்து இருக்க்லாம் என்று கிட்டே நின்று தொணக்க, மனைவி கணவனிடம் நான் புதுசாவா ஆம்லெட் போடுறேன்,இவ்வளவு சொல்றீங்க என்பாள்..அதற்கு அந்த கணவன் ,இப்படி தான் நான் கார் ஓட்டும் பொழுது நீ தொண தொணக்கிறே அப்படின்னு சொல்லி சிரிப்பான்.உனக்கு எப்படி முட்டை போட தெரியுமோ அதைப்போல் எனக்கும் கார் ஓட்டத்தெரியும் என்று சொல்லாமல் சொல்லுவான்.எப்பவாவது நான் காரில் பேச ஆரம்பித்தால் என் கணவர் அந்த மெயில் நினைவு வந்தவராய் விளையாட்டாய் முட்டை பொரிக்கிற வேலை மட்டும் பாருடா என்பார்.இருவரும் ஹோவென்று சிரிப்போம்,பிள்ளைகள் ஒன்றும் தெரியாமல் விழிப்பார்கள்.


அதனால தாங்க சொல்றேன் முன்னாடி உட்காருகிற பெண்கள் நிம்மதியாக ஆண்களை கார் ஓட்ட விடுங்க,இல்லாட்டி வாயை மூடிகிட்டு பின்னாடி இருப்பது நலம்.பெண்கள் தொந்திரவு செய்யாமல் இருந்தால் 45 சதவீதம் விபத்துக்கள் குறைவதாய் ஒரு சர்வே சொல்லுது.
எனவே முன் சீட்டில் அமரும் பெண்கள் முடிந்த மட்டும் கார் ஓட்டுபவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் உதவியாக இருக்கலாம் தானே !
பின்குறிப்பு :டிஸ்கியோ டிஸ்கி என் கணவர் என்னையும் கார் ஓட்டக்கற்றுக்கொள் என்று பெண்கள் சொல்லி கொடுக்கும் இடம் தேடி சேர்த்து இந்தியாவில் 2003 -னில் கார் லைசன்ஸ் வாங்கி,நல்ல ஓட்ட படித்த பின்பு அவரை பக்கத்தில் வைத்து கொண்டு ஷாப்பிங் கூட்டிட்டு போனேன்,அப்ப ஒன்றரை வருடம் ஓட்டிய அனுபவம் வேற,இவர் பக்கத்தில் இருந்திட்டு ஸ்பீட் ப்ரேக்கர் வருது பர்ர்த்து,பள்ளம் வருது,தள்ளிப்போ,சைடுல கண்ணாடில பார்த்தியா?முன்னாடி கண்ணாடியை அட்ஜஸ்ட் பண்ணு,என்னடா செகண்ட் கியர்லயே ஓட்டுற,மூனு நாலுன்னு மாத்துன்னு ஒரே தொந்திரவு,கடைசில ஏதோ தருமத்திற்கு வண்டி ஓடுதுன்னு கமெண்ட் வேறு.இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா !

--ஆசியா உமர்

43 comments:

LK said...

whoever who sits in frontside along with driver better not to talk abt driving

asiya omar said...

yes lk you are right,so many friends asked me to write
about this.thats why.

Kousalya said...

நிறைய கணவர்கள் தங்கள் மனைவிடம் நேரடியாக எப்படி சொல்வது என்று முழிப்பார்கள். அவர்களை உங்கள் பதிவை படிக்க சொல்லவேண்டும் (ஹி.. ஹி... நானும் அந்த மனைவியரில் ஒருத்திதான், இனி திருந்தி விடுகிறேன்)

asiya omar said...

கௌசல்யா உங்கள் கருத்திற்கு,வருகைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.

எம் அப்துல் காதர் said...

பரவயில்லையே ரொம்ப நாசூக்கா சொல்லிவிடீர்களே மேடம்! ஆண்கள் சொல்லி புரிந்துகொள்ளதவர்கள் கூட, பெண்கள் சொன்னால் ஈசியாய் எடுத்துக்கொள்வார்கள் தானே! பிரமாதம்.

அக்பர் said...

அட இதுவேறயா. இதுக்குத்தான் நான் காரே வாங்கல.

asiya omar said...

அப்துல் காதர்,அக்பர் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

Geetha Achal said...

உண்மை தான்...ட்ரைவர் சீட்டில் உள்ளவரின் கவனத்தினை மறாமல் பார்த்து கொள்வது நல்லது...ஒட்டுவருக்கு தான் தெரியும்...நல்ல பகிர்வு...சூப்பர்ப்...

asiya omar said...

கீதா ஆச்சல் உண்மைதான் நானும் நிறைய தடவை அனுபவப்பட்டாலும் மறந்து சிலசமயம் பேச்சை ஆரம்பித்து விடுவேன்.கருத்திற்கு மிக்க நன்றி.

ஜெய்லானி said...

கேள்வியும் கேட்டு,
பதிலையும் போட்டு,

:-))))))))))))))))

Jaleela said...

நல்ல சப்ஜெக்ட் அனைவருக்கும் தேவையான பதிவு.

மங்குனி அமைச்சர் said...

உங்க நேர்மையா நான் பாராட்டுறேன் , பின்சீட்ட விட பேசாம டிக்கில போட்ரலாம் (ஹி,ஹி,ஹி சும்மா தமாசு )

asiya omar said...

ஜெய்லானி என்ன சொல்றீங்க.புரியலை.

asiya omar said...

அமைச்சரே எங்க காரில் அதான் டிக்கி இல்லை போல,சரி தான்.

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha....

Over here: they have a funny quip: "Beware of backseat drivers too...."


ha,ha,ha,ha,ha,ha...

மங்குனி அமைச்சர் said...

// asiya omar said...

ஜெய்லானி என்ன சொல்றீங்க.புரியலை.///


அது ஒன்னும் இல்லை மேடம் ,ஜெயலானிய காக்கா நாடு மண்டைல நச்சுன்னு கொத்திட்டு போயிடுச்சாம்

Mrs.Menagasathia said...

அனைவருக்கும் தேவையான பதிவு!!

நிலாமதி said...

பயனுள்ள் பதிவு..............அப்படியே நாசூக்காய் சொல்லி இருகிறீங்க. சில பெண்கள் உணர்வதில்லை.பாராடுக்கள்.

அன்னு said...

ஏனுங்கம்மணி, இதென்ன புது வேலை, நம்மளை நாமளே எறக்கி விடுற வேலை? நாம பேசாம உட்காந்தாலும் வண்டி நகராதுங்கம்மணி. அப்பப்ப நாம இருக்கோம்னு காட்டிகிட்டாதான் வண்டி அது இஷ்டத்ட்துக்கு போகாம நல்லபடியா போகும், என்ன சொல்றீங்க. அப்ப நான் அந்த சாதியான்னு கேக்காதீங். நானும் ஒமரும் பின்னாடி நாங்க உண்டு, எங்க வேலை உண்டுன்னு ஜாலியா இருப்போம். ஹ்ம்ம்...முன் சீட்டில் உக்காந்ததெல்லாம் ஒரு காலம்.

asiya omar said...

சித்ரா,மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

நிலாமதி உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

அன்னு வருகைக்கு மகிழ்ச்சி.கையில் சின்ன குழந்தை இருந்தால் பின்னால் தான் உட்காரனும்,நமக்கு டிரைவர் இருந்தால் கூட ஜாலியாக பின்னாடி இருக்கலாம்.சிலகணவர்கள் சொல்வதுண்டு உங்களுக்கெல்லாம் நாங்க டிரைவர் ,நேரம் தான் என்று.

Suresh said...

Arumaiya sonninga ponga....

asiya omar said...

சுரேஷ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

இளம் தூயவன் said...

நம்ம வீட்டுகாரம்மா ரொம்ப நல்லவங்க.....

vanathy said...

அக்கா, இதெல்லாம் சரிதான். நாங்கள் பக்கத்தில் இல்லாவிட்டாலும் ஆண்களுக்கு போர் அடித்து விடும். சே.. நீ பக்கத்தில் இருந்து ஏதாவது ஓதிக் கொண்டே வந்தால் தூக்கம் வராது என்று(ம் ) சொல்வார்கள்.

அதான் நான் எங்கையாவது போறது என்றால் என் கையே எனக்கு உதவி என்று நானே போய் விடுவேன். என் கணவரை எதிர்பார்ப்பது இல்லை.

நான் அமெரிக்கா வந்த புதிதில் கார் ஓட்ட பழகும் போது, ஒரு நண்பி சொன்னார், " ஐயோ, உன் புருஷன் தான் பழக்கப் போறாரா? பேசாமல் விவாகரத்து வாங்கலாம் என்று. அவ்வளவு கடுப்படிப்பார்கள் என்று. என் கணவர் என்னோடு பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. எங்க வீட்டில் இப்படி எல்லாமே எதிர் மறையாத்தான் நடக்கும் ஹிஹி..

athira said...

ஆசியா, அப்பவே பார்த்தேன், பதில் கொஞ்சம் பெரிதாக மனதில் எழுந்தது அதனால் நேரம் கிடைக்கட்டுமே என போய்விட்டேன்.

“பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்”

உங்கள் “முன் சீட்டைப்” படித்ததும், எனக்கு ரீவியில் எப்பவோ பார்த்து மனம்கொதித்த, ஆவ்கானிஸ்தான் புரோகிராம் நினைவுக்கு வந்தது. அந்நாட்டில் மனைவிமாரை பூட்டில்(டிக்கியில்) தான் ஏற்றிப்போவார்களாம், வாகனத்தினுள் பிள்ளைகள்தான் ஏறலாமாம்.

எங்கள் வீட்டில் மாறித்தான் நடக்கிறது, நான் முன்னுக்கு இருந்து கதைக்காவிடில் கணவருக்கு போறிங்காகிவிடும்... சுப்பமார்கட்டுக்கு ஒரு பொருள் வாங்கப்போவதாயினும், என்னையும் வரும்படி அடம்பிடிப்பார், கதைத்துக்கொண்டு ஓடினால் நேரம் போவது தெரியாதாம். இதுபற்றி அதிகம் என் புராணம் பாட விரும்பவில்லை. இங்கத்தைய நாடுகளில் மனைவிமார்(நம்மவர்கள்தான்) முன்சீட்டிலேதான் எல்லோரும் இருப்பார்கள்.(கதைக்கிறார்களா இல்லையா என்பதுதான் தெரியவில்லை:):)).

இதை ஒரு பட்டிமன்றமாக நடத்தினால் எவ்வளவு சூப்பராகப் போகும் என நினைக்கிறேன்.

ஆனால் நான் கொத்திப்படைந்த விடயம் ஒன்று(இது என் மனக்கருத்து மட்டுமே)..... முன்சீற் என்றதால் சொல்லிட வேணும் எனத் தோன்றுகிறது.

இங்கே எப்பவும் மனைவிமார் முன்சீற்றிலேயே இருக்கிறார்கள் கணவன் ஓடும்போது(அது ஓக்கை வேறு யார் இருப்பது?:)). ஆனால் எனக்குப் பிடிக்காத விஷயம். எம் வயதை ஒத்தவர்கள்:- எம் நண்பிகள், சகோதரிகள், மைத்துனிகள் யாராயினும் தனியே, எம்மோடு எங்காவது போக எம் காரில் வந்தால், அப்பகூட, என் முன் சீட்டை விடமாட்டேன் என்பதுபோல, வந்தவரை தனியே அல்லது பிள்ளைகளோடு பின்னே இருக்க விட்டுவிட்டு, தாம் ஏறி முன்னே இருப்பது. இது பல இடங்களில் பார்த்துக் கொதிப்படைந்திருக்கிறேன். நான் ஒருபோதும் அப்படி நடப்பதில்லை, நானும் அவர்களோடு சேர்ந்து பின்னுக்கு இருந்து கதைத்து வருவதைத்தான் விரும்புவேன்... அதுதானே அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை. வயதானவர்கள் குழந்தைகள் என்றால் பறவாயில்லை அவர்களும் பின்னுக்கு பிள்ளைகளோடு சேர்ந்திருப்பதையே விரும்புவர். எம் வயதை ஒத்த பெண்கள் எம்மோடு(நம் கணவன் காரோட) வரும்போது அப்படிச் செய்வது அழகல்ல எனக் கூறவந்தேன். உங்கள் இந்த புளொக் படிக்கும் யாராவது இப்படி நடந்திருந்தால் இனியாவது மனதைக் கொஞ்சம் மாற்றுவார்களே என நினைத்து.

மகி said...

கார்ல முன் ஸீட்ல உட்கார்ந்தா, டீபால்ட்டா இந்த 'புலம்பல்' வந்துரும் ஆசியாக்கா! இதில் ஆணென்ன,பெண்ணென்ன? எல்லாம் ஓரினந்தான்! ஹிஹி!

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

வானதி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
“என் கணவர் என்னோடு பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. எங்க வீட்டில் இப்படி எல்லாமே எதிர் மறையாத்தான் நடக்கும் ஹிஹி..”

இங்கே மட்டும் என்னவாம்.

asiya omar said...

அதிரா உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.நானும் இதை சொல்ல மறந்து விட்டேன்.

“எனக்குப் பிடிக்காத விஷயம். எம் வயதை ஒத்தவர்கள்:- எம் நண்பிகள், சகோதரிகள், மைத்துனிகள் யாராயினும் தனியே, எம்மோடு எங்காவது போக எம் காரில் வந்தால், அப்பகூட, என் முன் சீட்டை விடமாட்டேன் என்பதுபோல, வந்தவரை தனியே அல்லது பிள்ளைகளோடு பின்னே இருக்க விட்டுவிட்டு, தாம் ஏறி முன்னே இருப்பது. இது பல இடங்களில் பார்த்துக் கொதிப்படைந்திருக்கிறேன்.”

எங்கள் வீட்டில் இப்படி எதுவும் கிடையாது,உண்மையை சொல்ல்ப்போனால் டேடி பக்கத்தில் மகன் ஒரு தடவை,மகள் தடவை என்று turn போட்டு இருப்பார்கள்.நான் எப்பவும் பின்னாடிதான்.மகளோ மகனோ எப்பவாவது நீங்க உட்காருங்கள் என்று பெரிய மனது வைத்து சொல்லுவார்கள்.பின்னாடி ஏறினால் என்ன நடக்கும் ,சிலசமயம் தூங்கிவிடுவேன்,என்னமோ எனக்கு காரில் அவ்வளவு தூக்கம் வரும்.உங்கள் கருத்து அனைத்தும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

asiya omar said...

மகி வாங்க கருத்திற்கு மகிழ்ச்சி.சந்தோஷமாக ஜாலியாக அதே சமயம் கவனம் சிதறதபடி முன் சீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு சென்றால் எல்லோரும் எஞ்சாய் பண்ணலாம் தானே.

மனோ சாமிநாதன் said...

ஆசியா! நன்றாக இருக்கிறது இந்தப் பதிவு! முட்டை விளக்கம் ரொம்பவும் நன்றாக இருக்கிறது!

ஸாதிகா said...

ஹா..ஹா..தோழி அனுபவம் பேசுகின்றதா?

asiya omar said...

மனோ அக்கா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா பாதி அனுபவம்,பாதி படிப்பினை.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஜீனோ said...

ஆசியா சிஸ்டேர்!! ஜீனோஸ் ஹவுஸ்லே ஆம்லேட் போடறது,கார் ஓடறது அல்லாமே ஜீனோ தான்..ஜீனோ இஸ் ஆல்வேஸ் ஆன் இட்ஸ் ஓன் யூ நோ??!! ;)

இதெல்லாம் பழகிப் போச்சு..ஸோ, ஜீனோ காக்கா போயிடும் ஆசியா சிஸ்டர்..அதர்வைஸ் யூஸ் ஐ பாட் டச் வித் போஸ் இயர் போன்ஸ்!! பக்கத்துலை இருக்கரவங்கோ இன்னா பேசினாலும் 'ஊமைப் படம்':) தான்..நோ ப்ராப்ளம்! ஹா..ஹா..புவஹா..ஹா..ஹா!

Jaleela said...

//எம் வயதை ஒத்தவர்கள்:- எம் நண்பிகள், சகோதரிகள், மைத்துனிகள் யாராயினும் தனியே, எம்மோடு எங்காவது போக எம் காரில் வந்தால், அப்பகூட, என் முன் சீட்டை விடமாட்டேன் என்பதுபோல, வந்தவரை தனியே அல்லது பிள்ளைகளோடு பின்னே இருக்க விட்டுவிட்டு, தாம் ஏறி முன்னே இருப்பது. இது பல இடங்களில் பார்த்துக் கொதிப்படைந்திருக்கிறேன்.//எஅன்க்கும் இதே கொதிப்பு தான், கூட பின்னாடி உட்கார்ந்து வருகிறவர்களுக்கு எப்படி இருகும். உட்கார வைத்ததும் , அவர்கல் கணவர் கூட் போசி கொண்டு வருவார்களாம் இதை கேட்டு இன்னும் கொதிப்பு எனக்கு.

Jaleela said...

நேரமில்லாததால் இதை பற்றி நிறைய கதைக்க முடியல,

முடிந்தால் பின்பு, உங்கல் லிங்குடன் ஒரு பதிவே போடுகீறேன்.

asiya omar said...

ஜினோ கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.எங்கள் வீட்டில் அவரும் தன் கையே தனக்கு உதவி என்று இருப்பார்.நன்றி.

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.உங்கள் பிஸியிலும் வந்து செல்வதற்கு மிக்க நன்றி.

நாஸியா said...

appappaa indha maadhiri padhivum podunga! :)

asiya omar said...

கருத்திற்கு மகிழ்ச்சி,மிக்கநன்றி நாஸியா.