Saturday, May 29, 2010

சிம்பிள் சிக்கன் சால்னா

தேவையான பொருட்கள்;

சிக்கன் - முக்கால் கிலோ

உருளை - 300கிராம் (விரும்பினால்)

தக்காளி - 200 கிராம்

வெங்காயம் - 200 கிராம்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு - 3 டீஸ்பூன்

கரம் மசாலா - அரைஸ்பூன்

சில்லிபவுடர் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -அரைஸ்பூன்

மல்லி இலை - சிறிது

தயிர் - 1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்

முந்திரி - 6 பருப்பு

உப்பு - தேவைக்கு.

6 நபர்களுக்கு

செய்முறை:


சிக்கனை சுத்தம் செய்து கட் செய்து கழுவி எடுத்து நீர் வடித்து கொள்ளவும்.பின்பு அத்துடன் தயிர்,மஞ்சள் தூள்,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,சிறிது சேர்த்து கலந்து வைக்கவும்.


குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம் வதக்கி சிவந்ததும்,இஞ்சி பூண்டு,கரம் மசாலா போட்டு வதக்கவும்,பின்பு மல்லி இலை ,மிளகாய்,தக்காளி ,மிள்காய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி சிறிது சிம்மில் மூடி வைக்கவும்.


தக்காளி மசிந்து இப்படி கூட்டு பதம் வரும்.

அத்துடன் ரெடி செய்து வைத்த சிக்கனை சேர்க்கவும்.

பின்பு நன்கு பிரட்டி விடவும்.கவனம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
அத்துடன் சிறிது நேரம் கழித்து நறுக்கிய உருளை சேர்க்கவும்.

ஒரு கப் தண்ணீர் சேர்த்து பிரட்டி குக்கரை மூடி இரண்டே விசில் வைக்கவும்.

ஆவியடங்கியதும் குக்கரை திறந்தால் பக்குவமாக சிக்கன்,உருளை வெந்து இருக்கும்.


பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.கொதி வரவும் சிம்மில் வைக்கவும்.


குழம்பு கெட்டிதன்மை ருசிக்கு தகுந்த படி இரண்டு கப் தண்ணீர் தேங்காயுடன் சேர்க்கலாம்.தேங்காய் வாடை மடங்கி எண்ணெய் மெலெழும்பி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான சிம்பிள் சிக்கன் சால்னா ரெடி.

குறிப்பு :

ஒன்லி சில்லி பவுடர்,இஞ்சி பூண்டு கரம்மசாலா தான்.காரம் அதிகம் வேண்டும் என்றால் சில்லி பவுடர் அரைஸ்பூன் கூட்டி கொள்ளவும்.ஆனால் ருசியோ சூப்பர்.புலாவ்,பரோட்டா,நாண்,சப்பாத்தி,இட்லி,தோசை,ஆப்பம்,ரொட்டி வகைகள் அனைத்திற்கும் பொருத்தமான ஒரே சால்னா.


--ஆசியா உமர்.

26 comments:

Kousalya said...

super taste....!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்

இளம் தூயவன் said...

எங்கள் ஊர் சுவை தெரியுதே... வாழ்த்துகள்.

athira said...

சூப்பர் அண்ட் சிம்பிள். இன்று சண்டேக்கு இதையே சமைத்துவிடுகிறேன்.

asiya omar said...

கௌசல்யா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

உலவு.காம்.உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

அதிரா மகிழ்ச்சி.நிச்சயம் செய்து விட்டு சொல்லுங்க.

அன்புடன் மலிக்கா said...

ஆகா வாசம் தூக்குதே!அசத்தல்தாங்கா...............

Anonymous said...

வணக்கம் ஆசியா...
நலம்... நலம் அறிய அவா....
ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்போ தான் பாக்குறேன்...
ரொம்ப நல்லா இருக்கு உங்க தளம்... :) அருமை
வாழ்த்துக்கள்
என்றும் உங்கள் அருண் பிரசங்கி

ஜெய்லானி said...

எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் ஆனா படத்தை பாக்கும் போது அரைலிட்டர் மாதிரி இருக்கே.
எண்ணெய்
என்னை
எனக்கு தாங்குமா ?
(ஒரு வேளை பிரேசில் சிக்கனோ )
:-))))

asiya omar said...

மலிக்கா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

அறுசுவையில் காணாமல் போன தம்பி அருண் பிரசங்கி தானா?நலமா?வாங்க வாங்க உங்கள் வரவு நல்வரவாகுக.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெய்லானி,சால்னாவை கிண்ணத்தில் வைக்கும் பொழுது மேலே இருந்து கொஞ்சம் எண்ணெயோடு எடுத்து வைத்தேன்,போட்டோவிற்கு அழகாக இருக்கட்டும் என்று,மற்றபடி அளவு சரியாகத்தான் இருந்தது.சிக்கனில் சாதியாவைத்தவிர எதுவும் வாங்குவதில்லை.

Mrs.Menagasathia said...

வாசனை கமகமக்குது..படங்கள் சூப்பர்ர்க்கா...

asiya omar said...

கருத்திற்கு மகிழ்ச்சி ,நன்றி மேனகா.

asiya omar said...

அப்துல காதர் உங்கள் கமென்டை மாடரேட் பண்ணமுடியலை.அதனால் காப்பி பேஸ்ட் செய்துவிட்டேன்.

நான் தான் லேட்டோ? இன்று இரவு சண்டே சமையலுக்கு பரோட்டவுடன் இது தான். சிக்கனில் "சாதியா" தான் எங்கள் சாய்ஸ்! மற்றதெல்லாம் என் மகளுக்கும் பிடிக்காது, வீட்டம்மாவுக்கும் தான்.

உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

//எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் ஆனா படத்தை பாக்கும் போது அரைலிட்டர் மாதிரி இருக்கே.
எண்ணெய்
என்னை
எனக்கு தாங்குமா ?//ஆசியாதோழி கைதவறுதலாக எண்ணெய் ஊற்றி விட்டீர்களா?டிபனுக்கெற்ற சால்னா.

asiya omar said...

ஸாதிகா,ரொம்ப நல்லதாக போச்சு,உங்க கண்ணிலும் பட்டு விட்டதா?உண்மையிலேயே ஊற்றிய எண்ணெய் நான் குறிப்பிட்டபடி தான்,கோழியிலும் கொழுப்பை முழுவதும் கழித்து தான் துண்டு போடுவேன்,எப்படி இப்படி நெலு நெலுப்பாக வந்தது,என் கைப்பக்குவமோ?
கருத்திற்கு மகிழ்ச்சி தோழி.

SathyaSridhar said...

Wooow!!! Chicku chalna romba nalla irukunga paakumpoedhe enakku echil ooruthu..Chicken naa romba pidikkum chicken kuruma n biryani na hmm oru pidi pidichuduven..

asiya omar said...

சத்யா ஸ்ரீதர் உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.செய்து பாருங்க.சிம்பிளாக சூப்பராக இருக்கும்.

Geetha Achal said...

அருமையாக இருக்கின்றது...சூப்பர்ப்...

asiya omar said...

கீதா ஆச்சல் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

saleemyousuf said...

I tried this in our room with dal pulav. It was awesome chachi.

Asiya Omar said...

சலீம் செய்து பார்த்து கருத்து சொன்னது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.ஹேப்பி குக்கிங்.

Unknown said...

I did it today... The taste is too good... Thank you...