Monday, May 31, 2010

டிவி பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார் ஜாஸ்மின்




ஏகஇறைவனின் திருப்பெயரால்...

நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த ஜாஸ்மின்
டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்

பணம் இருந்தால்தான் படிக்க முடியும். தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது.

அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி ஜாஸ்மின்.

படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.

இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.

மாணவி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.

அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத்தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் கூறியதாவது:-

மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.

பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கடவுளின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.

10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-

நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம்.

தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்
http://www.maalaimalar.com/2010/05/26161455/sslc-exam-results.html


--இது எனக்கு மெயிலில் வந்தது.


--ஆசியா உமர்.

28 comments:

அன்னு said...

யாருமே நான் 10வது படிக்கறப்ப இப்படியெல்லாம் சொல்லவே இல்லை.....ப்ச்ச்..

ஜெய்லானி said...

@@@அன்னு--//யாருமே நான் 10வது படிக்கறப்ப இப்படியெல்லாம் சொல்லவே இல்லை.....ப்ச்ச்..//

எனக்கும்தான் இல்லாட்டி நானும் இந்தியா ஃபஸ்ட் வந்திருப்பேன். வடைப்போச்சே !!!.

ஜாஸ்மின் ஐ.ஏ.எஸ் . அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !!!

vanathy said...

அக்கா, படிக்கிற பிள்ளைகள் எங்கிருந்தாலும் படிப்பார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு. இதை படித்த பிறகு யாராவது திருந்துவார்களா? அதிக பணம் செலவு செய்து தனியார் பள்ளிக்கு தான் பிள்ளைகளை அனுப்புவார்கள்.

ஜாஸ்மினுக்கு வாழ்த்துக்கள்.

asiya omar said...

அன்னு உங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.

ஜெய்லானி உங்கள் வாழ்த்திற்கு மகிழ்ச்சி.ஜாஸ்மின் நினைத்ததை சாதிக்க ஏக வல்லோன் அருள்புரிவானாக.

வானதி படிக்கிற பிள்ளைகள் எங்கிருந்தாலும் படிப்பார்கள் என்பதற்கு ஜாஸ்மினே பெரிய உதாரணம்.அழகாக சொல்லிட்டீங்க.எழுத்தாளரல்லோ.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அக்கா, ஜாஸ்மீனின் கடின முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. தன்னம்பிக்கைதான் முக்கியம்; அப்போதுதான் எதனையும் சாதிக்க வேண்டும். அல்லாஹ் நாம் நாடிய காரியங்களுக்கு நல்லருள் புரிவானாக. ஆமீன்.

ஜாஸ்மீனுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகள். மேலும் சாதனைகள் தொடர என் வாழ்த்துகள். நம்ம ஊர் பொண்ணு மாநிலத்தில் முதலிடம் பிடித்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

asiya omar said...

ஸ்டார்ஜன் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.ஆமாம் நம்ம ஊர் பொண்ணு ,எனக்கு அத்துனை மகிழ்ச்சி.தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் இருந்தால் நிச்சயம் முன்னேறலாம்,அழகாக சொல்லிட்டீங்க.

எம் அப்துல் காதர் said...

படிப்பதற்கும் சாதனை புரிவதற்கும் வறுமை ஒரு தடை இல்லை டி.வி தான் என்பதை அழகாக சொல்லிவிட்டார் ஜாஸ்மின்! வாழ்த்துகள்..

ஆஹா ஊர் காரங்க ஒன்னு கூடியாச்சா..எஸ்கேப் ....

athira said...

பொறுப்பான பிள்ளை ஜாஸ்மின். எந்த ஒரு விஷயமும் அடுத்தவரால் சொல்லத்தான் முடியும்(தாய்,தந்தை), தானாகத்தான் மனம் வைத்து செயலில் இறங்க வேண்டும். நினைத்தால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை எனக் காட்டிவிட்டார்.

///எனக்கும்தான் இல்லாட்டி நானும் இந்தியா ஃபஸ்ட் வந்திருப்பேன். வடைப்போச்சே !!!./// பறவாயில்லை ஜெய்..லானி, அழுவாதீங்க.... ஆணிபிடுங்குவதிலயாவது ஃபெஸ்ட்டா வாங்கோ.

ஆ... ஆசியா... ஜாஸ்மின் உங்க ஊர்ப் பிள்ளையா? நம்பவேஏஏஏ முடியேல்லை.... கடவுளே என்னைக் காப்பாத்துங்கோஓஓஓஓ..

asiya omar said...

அப்துல் காதர் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

அதிரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. கரெக்டாக சொன்னீங்க.எங்க ஊர் ஆட்களைக்கண்டு பயப்படாதேயுங்கோ.நாங்க பாசக்காரபயபிள்ளங்களாக்கும்.

மங்குனி அமைச்சர் said...

பெரும் சாதனை , இதை தொடர வாழ்த்துவோம்

ஸாதிகா said...

கடினமுயற்சி,தன்னம்பிக்கை,இதர பொழுதுபோக்கிற்குஇடம் கொடாமல் படித்து உயர்மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற வைராக்கியம் அனைத்தும் சேர்ந்துதான் ஜாஸ்மினை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.மகிழ்வாக உள்ளது தோழி.

asiya omar said...

மங்குனி அமைச்சர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஸாதிகா பிள்ளைகளிடம் படித்து முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் நிச்ச்யம் இருந்தால் எப்படியும் தான் நினைத்த நிலையை அடைந்தே தீருவார்கள்.முடிந்தால் கல்லணை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஜாஸ்மினை சந்தித்து வர நாடியுள்ளேன்,இன்ஷா அல்லாஹ !

Riyas said...

நாங்களும்தான் விழுந்து விழுந்து படிச்சு படிச்சு ஏறவேயில்லயே..

நாஸியா said...

மாஷா அல்லாஹ்! ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு.. அல்லாஹ் அந்த பிள்ளைக்கும், அதோட குடும்பத்திற்கும் அருள் புரிவானாக!

:)

நம்மூரு புள்ளைங்கல்லாம் மாஷா அல்லாஹ் சூப்பரா படிக்கிறாங்கப்பா. இன்னும் சொல்லப்போனா மெட்ராஸ விட ஊரு பக்கம் தான் படிப்புக்கு நல்ல மரியாதை. இது என் அனுபவத்துல நான் கண்டது

asiya omar said...

ரியாஸ் உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கு எந்த துறையில் விருப்பமோ அந்த துறையில் உங்கள் விருப்பப்படி முன்னேறலாம்.

asiya omar said...

நாஸியா ஆமாம் அந்த காலம் மாதிரி இல்லை,இப்ப எல்லோருக்குமே படிக்கணும்ங்கிற உத்வேகம் இருக்கு.மதிப்பெண் அவங்க அவங்க கடின உழைப்பிற்கு தகுந்தபடி எடுக்கிறாங்க.வருகைக்கு மகிழ்ச்சி.

Kousalya said...

லேட்டா வந்துவிட்டேன் தோழி. பதிவு அருமை. ஜாஸ்மின் இருக்கும் ஊரில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு சந்தோசம்.

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி கௌசல்யா.

Malar Gandhi said...

I think intelligence does have some influence with environment/school, but not completely, it comes from within oneself...all it takes is, to put effort and perseverance.

Jaleela said...

இத படிக்கும் போது ரொம்ப சந்தோஷம்மாய் இருக்கு, ஜாஸ்மீன் அவர்கள் என்னபடி படிக்க வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும்.

பகிர்வுக்கு நன்றி

asiya omar said...

மலர் காந்தி வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஜலீலா பிஸியிலும் எப்படியாவது வந்து செல்வது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

மின்மினி said...

ஜாஸ்மீன் மேலும்மேலும் சாதனை புரியவேண்டும் அதுவே அனைவரின் விருப்பமும்கூட. அக்கா, ஜாஸ்மீன் வீட்டுக்குபோன அனுபவத்தை எழுதுங்க.

Mrs.Menagasathia said...

ஜாஸ்மினுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்...

asiya omar said...

மின்மினி வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்ச்சி.நான் இப்ப இருப்பது யு.ஏ.இ -யில்.இன்ஷா அல்லாஹ் !ஊர் சென்றால் வாய்ப்பு கிடைத்தால் பள்ளியில் சென்று சந்தித்துவிட்டு எழுதுகிறேன்.

asiya omar said...

மேனகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.