Tuesday, June 1, 2010

கேரட் பீன்ஸ் புட்டு

தேவையான பொருட்கள் ;

கேரட் - கால் கிலோ
பீன்ஸ் - 50 கிராம்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - அரைஸ்பூன்
உ.பருப்பு - அரைஸ்பூன்
மஞ்சள் தூள்- கால்ஸ்பூன்
சீரகத்தூள் -கால்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் துருவல் - 2டேபிள்ஸ்பூன்
லைம் - பாதி
மல்லி கருவேப்பிலை - சிறிது



கேரட்டை துருவிக்கொள்ளவும்,பீன்ஸை மிகப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு,வற்றல்,மிளகாய்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.


பின்பு பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.



துருவிய கேரட் சேர்த்து திரும்பவும் வதக்கவும்.

வதக்கிய கேரட் பீன்ஸ் உடன் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சீரகத்தூள் ,உப்பு சேர்த்து பிரட்டவும்.




கேரட்,பீன்ஸ் வெந்து வதங்கிய பின்பு தேங்காய்ப்பூ,நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.



பாதி லைம் ஜூஸ் பிழியவும்.திரும்ப நன்கு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.


சுவையான சத்தான கேரட் பீன்ஸ் புட்டு ரெடி.
குறிப்பு : விருப்பப்பட்டால் ஒரு வெங்காயம் தாளிக்க சேர்க்கலாம்.இந்த எளிய சமையலை கூட ஸ்டெப் பை ஸ்டெப் படமாக போட காரணம் புதிதாக சமைக்க ஆரம்பிப்பவர்கள்,பேச்சிலர்களூக்கு இலகுவாக இருக்கவே.
--ஆசியா உமர்.

15 comments:

athira said...

ஓ...ஆசியா, இது கறியோ? சூப்பர். புட்டு என்றதும் நான் எங்கள் புட்டை நினைத்திட்டேன்:). புட்டுப்போட்டுப் பிரட்டுவதாக்கும் என நினைத்தேன்.

asiya omar said...

அதிரா, பார்க்க புட்டு போல் இருப்பதால் அந்த பெயரிட்டேன்.சுறாப்புட்டு என்று சொல்வதில்லையா ?அது போல் தான்.இதனை புட்டோடு சேர்த்து பிரட்டியும் சாப்பிடலாம்.தோசைமாவோடு கலந்து சுட்டாலும் அருமை,இட்லிமாவோடு சேர்த்தும் அவிக்கலாம்.இன்னும் இது மீதீயானால் ஒரு ரெசிப்பி கூட்டமே செய்யலாம்.

ஜெய்லானி said...

:-))

Mrs.Menagasathia said...

அருமையாக இருக்கு!!

asiya omar said...

ஜெய்லானி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

மேனு நன்றி,மிக்க மகிழ்ச்சி.

vanathy said...

akkaa, en ammaavum ippati thaan cheyvaarkaL. wallaa irukku.

asiya omar said...

vanathy,thanks for your comments.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பார்க்க அருமையா இருக்கு கேரட்

மகி said...

/இந்த எளிய சமையலை கூட ஸ்டெப் பை ஸ்டெப் படமாக போட காரணம் புதிதாக சமைக்க ஆரம்பிப்பவர்கள்,பேச்சிலர்களூக்கு இலகுவாக இருக்கவே./அவ்வ்வ்வவ்வ்வ்...நான் எல்லா ரெசிப்பியையுமே ஸ்டெப்-பை-ஸ்டெப்பா போட்டுட்டு இருக்கேனே ஆசியாக்கா??!! (சும்மா, தமாஷுக்கு!! :) :))

கேரட் பீன்ஸ் பொரியல்:) நல்லா இருக்கு!!

asiya omar said...

ஸ்டார்ஜன் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

மகி வருகைக்கு மகிழ்ச்சி.இந்த கேரட் பொரியல் கூட வைக்க தெரியாதான்னு உன்னைப்போல் எக்ஸ்பெர்ட் எல்லாம் கேட்டுவிடக்கூடாது பார்,அதனால் தான் அப்படி சொன்னது,நானும் ஸ்டெப் பை ஸ்டெப் தான் முக்கியமாக கொடுப்பேன்,படம் ஒழுங்கா வரலைன்னால் மட்டும் தான் ஒரிரு படங்களுடன் முடித்து கொள்வதுண்டு.

Jaleela said...

பீன்ஸ நல்ல அழகா கட் பண்ணிகோரட் துருவி செய்து இருக்கீஙக்.

asiya omar said...

நன்றி ஜலீலா.வெஜ் கொடுக்கணும் என்று வீட்டில் செய்யும் இந்த பொரியலையும் போட்டேன்.

Riyas said...

என்னம்மா சமைக்கிறிங்க.. இங்க அபுதாபியில மலயாளி கடயில சாப்பிட்டு நாக்கே செத்துபோச்சுக்கா..