Sunday, May 30, 2010

ஐடியா பராசப்பம்

தேவையான பொருட்கள் ;


மீதமான பிரியாணி அல்லது கீரைஸ்,மருந்து சோறு,புலாவ்,ஃப்ரைட் ரைஸ் எதுவானாலும் - ஒரு கப்


முட்டை - 1


தேங்காய்ப்பால் - ஒருகப்


மைதா அல்லது கோதுமை மாவு - அரை கப்


ரவை - அரை கப்


வெங்காயம் - 2


மிளகாய் - 2


மல்லி கருவேப்பிலை - சிறிது


இஞ்சி பூண்டு - அரை டீஸ்பூன்


கரம் மசாலா - கால்ஸ்பூன்


சோம்பு - கால்ஸ்பூன்


மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்


எண்ணெய் - தேவைக்கு


உப்பு - தேவைக்கு





செய்முறை :


முதலில் ஒரு கப் சாதத்தை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.க்றி இருந்தால் அதையும் சேர்த்து அரைக்கலாம்.அத்துடன்,மைதா,ரவை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.


முட்டை உடைத்து அதையும் சேர்க்கவும்.தேங்காய்ப்பால் சேர்க்கவும்.


பின்பு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி,அத்துடன் இஞ்சி பூண்டு,கரம் மசாலா,சோம்புத்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.


மிளகாய், மல்லி கருவேப்பிலை கட் செய்து தயார் செய்த மாவுக்கரைசலில் போடவும், வதக்கிய வெங்காயத்தை ஆறியவுடன் போட்டு,உப்பு சரிபார்த்து அடை பதத்தில் கரைத்து கொள்ளவும்.


தோசைக்கலத்தில் எண்ணெய் தடவி மெல்லிதாக அடை போல் சுட்டு எடுக்கவும்.


சுவையான ஐடியா பராசப்பம் ரெடி.




குறிப்பு : இது எங்க மாமா சொல்லி தந்தது.அந்தக்காலத்தில் அவங்க உம்மா அவர்களுக்கு இப்படி சுட்டு கொடுப்பார்களாம்.மணமும் ருசியும் சும்மா சூப்பராக இருக்கும்.ஏதாவது சால்னா அல்லது தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அமர்க்களமாக இருக்கும்.அப்படியே சும்மாவே சாப்பிடலாம்.




--ஆசியா உமர்.

11 comments:

LK said...

we also do this with the left over rice but without adding egg

ஜெய்லானி said...

ஊருல இருக்கும் போது இந்த பேர கேட்டது. இப்ப இங்க கேக்குரேன்.
:-)

Lenin P said...

நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்,
www.narumugai.com

Jaleela said...

ரொமப் நல்ல இருக்கு ஆசியா இது என் அம்மாவின் ஸ்பெஷ்ல் டிபன்,

உங்கள் மாமனார் சொல்லி ஐடியாவும் சூப்பர்

asiya omar said...

எல்.கே கருத்திற்கு மகிழ்ச்சி.

ஜெய்லானி இது சும்மா ஐடியா,ஒரிஜினல் ரெசிபி ஜலீலா கொடுத்து இருக்காங்க ,பாருங்க.

asiya omar said...

லெனின் உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஜலீலா,கருத்திற்கு மகிழ்ச்சி.உங்கள் பராசப்பம் ரொம்ப ஃபேமஸ் ஆச்சே ,அது சூப்பர்.

vanathy said...

ஆசியா அக்கா, மிகவும் அருமையாக இருக்கு. படங்கள் அழகா இருக்கு.

asiya omar said...

வானதி,கருத்திற்கு மகிழ்ச்சி.

மகி said...

இந்தப் பெயர்,ரெசிப்பி எல்லாம் இப்பொழுதுதான் எனக்கு தெரியுது ஆசியாக்கா..நல்லா இருக்கு!

asiya omar said...

செய்து பார்க்கவும்.கருத்திற்கு மகிழ்ச்சி மகி.