Wednesday, May 5, 2010

பேக்ட் ஃபிஷ் & வெஜிடபிள்

மீனை குழம்பு வைத்து அல்லது பொரித்து சாப்பிடுவதை விட இப்படி பேக் அல்லது கிரில் செய்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.
தேவையான பொருட்கள் ;மீன் அரைகிலோவில் - 4 துண்டு ,காய்கறிகள் - உருளை - 1,கொடைமிள்காய் - 2 கேரட் - 2 எடுத்துக்கொள்ளவும்.மீனை சுத்தம் செய்து மஞ்சள் உப்பு போட்டு கழுவி நீர் வடிய வைத்து லைட்டாக தேவைக்கு ஒருடீஸ்பூன் மிளகாய்த்தூள்,அரைஸ்பூன் - மிளகுத்தூள்,லைம் ஒன்று,இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒருடீஸ்பூன் அல்லது பூண்டு பவுடர் அரைஸ்பூன்,தேவைக்கு உப்பு,ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நல்ல கலந்து மீனை ஃப்ரிட்ஜில் அல்லது வெளியில் வைத்து குறைந்தது 1-2 மணி நேரம் ஊற வைக்கவும்.காய்கறிகளை கட் செய்து உப்பு,மிளகுத்தூள்,ஆலிவ் ஆயில் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்.எலெக்ட்ரிக் ஓவனை 5-10 நிமிடம் முற்சூடு படுத்தவும்.வெப்பம் 250 டிகிரி செட் செய்யவும்.,மேலும் கீழும் தனல் வருவது போல் செட் செய்யவும்.கீழ் உள்ள ட்ரேயில் அலுமினியம் ஃபாயில் போட்டு அதில் ரெடி செய்த வெஜிடபிளை வைக்கவும்,மேலே கிரில் தட்டில் மீனை அடுக்கவும்.ஒரு மணி நேரம் டைம் செட் செய்யவும்.


அரைமணி நேரம் கழித்து மீனை திருப்பி வைக்கவும்,திரும்ப அரைமணி நேரம் கழித்து ஓவன் டைம் செட் செய்தால் ஆட்டோமெடிக்காக ஆஃப் ஆகிவிடும்.இப்ப சுவையான பேக்ட் ஃபிஷ் & வெஜிடபிள் ரெடி.
இதனை ரொட்டி,நான்,குபூஸ்,டோஸ்டட்ப்ரெட் இப்படி ஏதாவது ஒன்றுடன் ஹமூஸ்,முத்தபல்,வெங்காயம்,
தக்காளி கட் செய்து உடன் பரிமாறவும்.ஆரோக்கியமான அருமையான உணவு.

--ஆசியா உமர்.

16 comments:

Chitra said...

மீன் ரோஸ்ட் தான் பழக்கம். baked ..........ம்ம்ம்ம்......!

Jaleela said...

பெரிய பையன் ஊரிலிருந்து இந்த மாதம் வருவான்,அப்ப எல்லா ரெசிபியும் கிரில் தான்/

Jaleela said...

ரொம்ப இருக்கு, முன்பு அடிக்கடி செய்வேன், இப்ப நேரம்அவசர சமையல் இல்லாத் தால் , செய்ய முடியல.

ஜெய்லானி said...

:-))

Mrs.Menagasathia said...

பார்க்கவே அருமையாக இருக்கு!!

ஸாதிகா said...

நாண்குகிலோ சேரி மீன் வாங்கி அன்னிக்கு குழம்பு இன்னிக்கு அரேபியன் ஸ்டைலில் பேக்ட் பிஷ்ஷா?ம்ம்..சமைத்து அசத்துங்கள் தோழி

vanathy said...

ஆசியா அக்கா, மிக அருமை & ஆரோக்கியமான உணவு. மீனிலிருந்து எண்ணெய், தண்ணீர் கீழே காய்கறியில் ஊறி சுவையை மாற்றி விடாதா?

asiya omar said...

சித்ரா,ஜலீலா,ஜெய்லானி,மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.

ஸாதிகா உங்களிற்கு நினைவாற்றல் அதிகம் நாம் சிறிது நேரம் பேசியதும் நினைவு வைத்து இருக்கிறீர்களே.

வானதி மீனில் இருந்து வடியும் நீர் ஆவியாகி சுண்டிவிடும்,அதில் இருந்து வடியும் எண்ணெய் வாடை இருக்காது.காய் வேகும் பொழுது சுவையை கூட்டும்.வெஜிடபிளில் ஃபிஷ் ஓடர் இருக்காது.ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

Deivasuganthi said...

Good!!! Healthy!!!!!!

Geetha Achal said...

சூப்பரான பேக்ட் பிஷ்...எங்கள் வீட்டில் பெரும்பாலும் பேக்ட் பிஷ் தான்...தோசை கல்லில் வறுத்த மாதிரியும் இருக்கும்...நெடியும் வெளியில் வராது...அதனால இப்படி தான் அடிக்கடி செய்வோம்...மிகவும் அருமையான குறிப்பு...

செந்தமிழ் செல்வி said...

நல்லா இருக்கு ஆசியா,
டைம் தான் ரொம்ப எடுக்கும் போல். நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.

asiya omar said...

தெய்வ சுகந்தி கருத்திற்கு நன்றி.

கீதா ஆச்சல் உங்கள் பேக்கிங் திறமையை அறுசுவையிலேயே பார்த்து வியந்திருக்கிறேன்.

asiya omar said...

செல்விக்கா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.இரவு 7 மணிக்கு ஆரம்பித்தால் 8.30 மணியாகிடும் எல்லாம் முடிய.gas oven (cooking range) செய்தால் சீக்கிரம் ஆகிவிடும்.உங்க கிரில்டு ஃபிஷ் ஒரு தடவை செய்து படம் அனுப்பினேனே நினைவு இருக்கா அக்கா?

Malar Gandhi said...

Wow, baked fish looks awesome, well roasted..looks crispy to me, so, let me know...when can I stop by, hehe.:)

Cool Lassi(e) said...

Lovely dish Asiya. I never used the grill sheet in the oven directly like you did in this recipe..always use a seperate grill sheet..Interesting!And yes, very interesting recipe too.

asiya omar said...

malar gandhi,you are most welcome at any time.

cool lassie thanks pa.