Wednesday, May 26, 2010

சிம்பிள் வெஜ் வெள்ளை புலாவ்

தேவையான பொருட்கள் ;


சீரக சம்பா பச்சை அல்லது பாசுமதி அரிசி - 2 கப்


எண்ணெய் - 50- மில்லி


நெய் - 50 மில்லி


இஞ்சிபூண்டு பேஸ்ட் - 3 - 4 டீஸ்பூன்


ஏலம் - 2


கிராம்பு - 2


பட்டை - 2 சிறியதுண்டு


பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது


புளிக்காத மோர் - ஒரு கப்


வெங்காயம் - 1


தக்காளி - சிறியது-1


மிளகாய் -2


கேரட்,உருளை,பீன்ஸ்,பச்சை பட்டாணி - சேர்ந்து கால் கிலோ


மல்லி புதினா - சிறிது


உப்பு - தேவைக்கு


விரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.காய்கறிகளை நறுக்கி வைக்கவும்,அரிசியை அலசி குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

முதலில் புலாவ் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் காயவிட்டு ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்க்கவும்.வெங்காயம் சிவறாமல் நன்கு வதக்கி,இஞ்சி பூண்டு தக்காளி,மிளகாய்,சிறிது மல்லி,புதினா வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.


நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.எண்ணெயில் விரைவில் வதங்கி வெந்து விடும்.


மோர் ஒரு கப் சேர்க்கவும், தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்க்கவும்.அரிசியின் அளவிற்கு ஒன்றுக்கு ஒன்றே முக்கால் தண்ணீர் வைக்கவும்.


இப்படி கொதிவரும் பொழுது ஊறிய அரிசியை தட்டவும்.உப்பு சரி பார்க்கவும்.


மீடியமாக தீயை வைத்து மூடி வைக்கவும்.புலாவ் வெந்து மேல் வரும்.புலாவை பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும்.


மூடி பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.


புலாவ் பாத்திரத்தை திறந்து ஒரு போல் பிரட்டி விடவும்,ஏலம் பட்டை கிராம்பு கண்ணில் பட்டால் எடுத்து விடவும்.மோர் சேர்ப்பதால் வெள்ளையாக சஃப்டாக உதிரியாக வரும்.மோர் இல்லையெனில் தயிர் சிறிது சேர்க்கவும்.


சுவையான சிம்பிள் வெஜ் புலாவ் ரெடி.


இதனை மட்டன்,சிக்கன் கிரேவி,தால்ச்சாவுடன்,பச்சடி,ஃப்ரை ,ஸ்வீட் அயிட்டமுடன் பரிமாறலாம்.வெஜ் பிரியர்கள் சாம்பார்,குருமா,புதினா துவையல்,வெஜ் கட்லெட்,சிப்ஸ்,காலிப்ளவர் ஃப்ரை உடன் செய்தும் அசத்தலாம்.நிஜமாகவே சாம்பாருக்கு இந்த புலாவ் அருமையாக இருக்கும்.


குறிப்பு : இஞ்சி பூண்டை சிவறாமல் வதக்கவேண்டும்,கரம்மசாலா தூள் சேர்க்காமல் தனித்தனியாக போடுவதால் புலாவ் பார்க்க வெள்ளையாக அழகாக தெவிட்டாத ருசியுடன் இருக்கும்.எங்கள் ஊரில் நேர்ச்சை சோறு இப்படி தான் ஆக்குவார்கள்.இஞ்சி சேர்க்காமல் வெறும் பூண்டு தயிர் சேர்த்தும் ஆக்கினாலும் வெள்ளை வெளேர்னு அருமையாக இருக்கும்.


--ஆசியா உமர்

30 comments:

LK said...

as usual looks yummy. (sory for posting comment in enlgish. some problem in NHM in office)

Mahi said...

Nice Pulav!

Kousalya said...

உடனே செய்து பார்க்க வேண்டும் போல இருக்கிறது. good one

ஜெய்லானி said...

:-)))

எம் அப்துல் காதர் said...

எல்லா பதிவர்களும் நாலு வரி திறந்த மனதாக சொல்லாமல் (ஹி ஹி-, ஹா ஹா-, ஹூ ஹூ :-))) என்று சொல்லிவிட்டு) போனால் என்ன அர்த்தம் மேடம்!. ஜெய்லானி, மங்கு முதற்கொண்டு அனைவருமே இப்படி வந்துவிட்டு போவதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்! ஹி ஹி. (ஏதோ நம்மால் முடிந்தது..)

அப்புறம் - சிம்பிள் வெஜ் புலாவக்கு சைடு டிஷ், சிக்கன் ப்ரை நல்ல இருக்குமா மேடம்? அல்லது வேறு?

asiya omar said...

thanks lk.english or tamil your presence is really a award for me.

asiya omar said...

mahi ,thanks for your lovely comment.

asiya omar said...

கௌசல்யா உடனே செய்து பாருங்க,அதற்கு நான் கேரண்டி.

asiya omar said...

ஜெ வருகைக்கு மகிழ்ச்சி.

ஸாதிகா said...

மசாலாவெல்லாம அதிகம் இல்லாமல் வித்தியாசமாகத்தான் இருக்கின்றது ஆசியா

asiya omar said...

அப்துல் காதர் எது எது பொருத்தமாக இருக்கும்னு ஏற்கனவே குறிப்பில் சொல்லிருக்கேன்.அடுத்த ரெசிப்பி இதற்கு அக்கம்பெனியாகத்தான் இருக்கும்.சரியா?கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

Anonymous said...

செய்து பார்த்து ஒரு வெட்டு வெட்ட வேண்டியது தான் .போடோஸ் எல்லாம் நல்லா இருக்கு .நன்றி

asiya omar said...

ஸாதிகா நான் நான்வெஜ் பிரியாணி பண்ணும் பொழுது யாராவது வெஜிடேரியன்ஸ் வந்தால் இப்படி புலாவ் செய்து குருமா வைப்பேன்.கட்லெட் தால்ச்சா,பச்சடி ஸ்வீட் பொது,அவ்ர்களும் திருப்தியாக சாப்பிட்ட மாதிரி இருக்கும்.

asiya omar said...

சந்தியா நிச்சயம் செய்து பாருங்க.மிக்க மகிழ்ச்சி.

Mrs.Menagasathia said...

படத்தில் இப்போ பெயர் போட தெரிந்து கொண்டீர்களாக்கா??

Mrs.Menagasathia said...

புலாவ் மிக அருமையாக இருக்கு, உடனே செய்யனும்போல் இருக்கு...

asiya omar said...

மேனு அதற்காகவே விளக்கமாக ஒரு தனி பதிவு போட எண்ணியிருந்தேன்.மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று.முதலில் எனக்கு புரியலை,நீ சொல்லியபடி நானே உட்கார்ந்து பொறுமையாக பார்த்த பின்பு ஈசியாக இருந்தது.மிக்க நன்றி.

asiya omar said...

மேனகா செய்து பார்க்கவும்.நீ ரொம்ப வெரைட்டி செய்வாய்,சும்மா வீட்டில் சமைப்பதை தான் நான் போடுவேன்.அவ்வளவே.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.பேர் போட்டதை யாராவது நோட்டிஸ் பண்ணி கேட்பாங்கன்னு பார்த்தேன்,சின்ன சின்னதை புதியதாக தெரிந்து கொள்ளும் பொழுது எனக்கு அவ்வளவு சந்தோஷம்.

இளம் தூயவன் said...

சுவையை ரசனையுடன் செய்து காட்டியுள்ளீர்கள் அருமை.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

தலைவன்.காம் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

vanathy said...

Akka, very nice recipe. My husband loves veg pulav. I will try this very soon & let you know.

asiya omar said...

thanks vanathy for your frequent visit &comments.

தக்குடுபாண்டி said...

veg pulaavku mattum thakkudu oru present miss! poodarthukku vanthurukku..;)

asiya omar said...

தக்குடு எங்காத்துக்கு வந்ததுக்கு மகிழ்ச்சி.நாங்கள் திருச்சியில் குடி இருந்தபோ உங்களவா தான் எதிர் வீடும் பக்கத்து வீடும்.அதைப்பற்றி எழுத ஒரு இடுகை வேணும்.

Geetha Achal said...

புலாவ் பார்க்கும் பொழுதே சாப்பிட தோனுது..அருமை...

asiya omar said...

கீதா ஆச்சல் கருத்திற்கு மகிழ்ச்சி.

அன்னு said...

ஆஸியாக்கா,

இன்னிக்கு இதுதேன் லஞ்ச். ரொம்ப அருமையா இருந்தது. நான் எல்லாம் தாளிச்சு பின் ரைஸ் குக்கர்ல போட்டுட்டேன். இருந்தும் அருமையா வந்தது. எனக்கு புலாவ் வெள்ளையா இருக்கணும் அதே போல சாப்பிட்டபின் ஹெவியா தோணக்கூடாது. அப்படி பார்த்தா இது டாப். நெஞ்செரிச்சலோ, ஹெவி மாதிரியோ இல்ல, வெள்ளையாகவௌம் அழகா இருந்துச்சு. ஒரியாக்காரரும் விரும்பி சாப்பிட்டார். ரொம்ப தேன்க்ஸ் :))

asiya omar said...

அன்னு,அருமையான பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.நன்றி.