Wednesday, May 19, 2010

ஃப்ரைட் சிக்கன் பிரியாணி

பிரியாணி தம் ஆனவுடன் ஒரு போல் நன்கு பிரட்டி அடியில் உள்ள சிக்கன்,பிரியாணி மசாலாவும் கலந்த பின்பு பரிமாறவும்.
தேவையான பொருட்கள் ;

கோழிக்கறி - முக்கால் கிலோ
பாசுமதி அரிசி - 600 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
சிக்கன் டிக்கா அல்லது சிக்கன் 65 மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
கரம்மசாலா - முக்கால் ஸ்பூன் (ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
மல்லி புதினா- தலா ஒரு கைபிடியளவு
எண்ணெய் - 150 மில்லி
நெய் - 50 மில்லி
எலுமிச்சை - 1
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
லெமன் யெல்லோ கலர் - பின்ச்
உப்பு - தேவைக்கு


900 கிராம் முழுச்சிக்கன் வாங்கினால் கழுவி சுத்தம் செய்யும் பொழுது முக்கால் கிலோ வரும்.அதனுடன் உப்பு,தயிர்,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ,சிக்கன் டிக்கா அல்லது சிக்கன் 65 மசாலா 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து சிக்கனை ஊறவைக்கவும்.நறுக்கவேண்டியவற்றை நறுக்கி வைக்கவும்.


கடாயில் 4 டேபிஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறிய சிக்கனை பொரித்து எண்ணையோடு வைக்கவும்.

பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் கலவை விட்டு காய்ந்ததும் வெங்காயம் முழுவதும் போட்டு வதக்கி,சிவந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மல்லி புதினா,மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.பின்பு தக்காளி ,உப்பு சேர்த்து சிறிது மசிந்ததும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி சிம்மில் வைக்கவும்.எண்ணெய் தெளிந்து மேலே வரும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிவந்ததும் ஊறிய அரிசி போட்டு முக்கால் பதத்தில் வெந்து வடித்து வைக்கவும்.ரெடியான ஃப்ரைட் சிக்கனை பிரியாணி மசாலாவில் சேர்க்கவும்.லெமனை பிழியவும்,தேவைப்பாட்டால் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.சிக்கனை சேர்த்த பின்பு ,வடித்த சாதம் சேர்த்து சஃப்ரான் அல்லது லெமன் கலர் கரைத்து ஊற்றவும் .அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி,அடுப்பை சிம்மில் 20 நிமிடம் வைக்கவும்.அடியில் பழைய தோசைக்கல் வைக்கவும்.


திறந்து ஒரு போல் பிரட்டி விடவும்.சுவையான ஃப்ரைட் சிக்கன் பிரியாணி ரெடி.


பிரியாணியை சூடாக, தால்ச்சா ,ரெய்தா,ஸ்வீட் உடன் பரிமாறவும்.

--ஆசியா உமர்.

22 comments:

LK said...

vote and escape

Geetha Achal said...

ஆஹா..மிகவும் அருமையாக இருக்கின்றது..முதலில் சிக்கனை ப்ரை செய்தபிறகு பிரியாணி செய்வது புதுசு...சூப்பர்ப்...

Chitra said...

...... நாவில் நீர் ஊறுது ...... அப்படியே ஒரு பார்சல்.....இந்த பக்கம் அனுப்பி வைங்க..... Yummmmmmmmmmmmyyyy!!!

ஸாதிகா said...

ஆஹா..மணம் இங்கு வரை வருகிறதே.ஆசியா தோழி,இது புது முயற்சிதான்.

Mrs.Menagasathia said...

சிக்கனை ப்ரை செய்து பிரியாணி செய்வது புதுசா இருக்கு..சூப்பர்ர்ர்!!

vanathy said...

ஆசியா அக்கா, நல்லா அருமையாக இருக்கு. அடுத்த வாரம் செய்து பார்க்கணும்.

மங்குனி அமைச்சர் said...

இனிமே போவேல்லாம் போடாதிக , அத பாத்தா ரொம்ப பசிக்குது

Kousalya said...

super biryani, parkkumpothey sapittuvitten.

asiya omar said...

LK,அதெப்படி எல்லாரையும் முதலில் விசிட் செய்றீங்க ,எப்படின்னு எனக்கும் சொல்லுங்களேன்.மிக்க நன்றி.

asiya omar said...

கீதா ஆச்சல,சித்ரா,ஸாதிகா,
மேனகா,வானதி வருகைக்கும்,கருத்திற்கும், மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மங்குனி அமைச்சர் தவறாமல் கருத்து தருவதற்கு மகிழ்ச்சி.சிலர் ஓட்டு மட்டும் போடறாங்க.
மகிழ்ச்சி.

asiya omar said...

கௌசல்யா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

இளம் தூயவன் said...

ஊர் பிரியாணி போல் வருமா ? இப்படி போட்டு காட்டி ஊர் பிரியாணியை நினைவு படுத்தி விட்டிர்கள்.

அன்புடன்
இளம் தூயவன்
http://ilamthooyavan.blogspot.com

ஜெய்லானி said...

:-))

asiya omar said...

இளம் தூயவன் உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.
ஜெய்லானி கொஞ்ச நாள் கழித்து வந்திருக்கீங்க.நல்லது.

நாஸியா said...

இன்ஷா அல்லாஹ் முயற்சி செஞ்சு பாக்குறேன்..

உங்க ரெசிபி எல்லாமே மாஷா அல்லாஹ் ஈசியா இருக்கே! :)

மனோ சாமிநாதன் said...

புதுவிதமான பிரியாணி! வழக்கம்போல செய்முறை விளக்கம் மிக அழகு!!

asiya omar said...

நாஸியா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

மனோ அக்கா மிக்க நன்றி.

Jaleela said...

சிக்கன் பிரைட் பிரியாணியா நல்ல இருக்கு.

நானும் போன வெள்ளி சிக்கன் பிரியாணி தான்.

asiya omar said...

ஜலீலா நீங்களும் நிறைய வெரைட்டி செய்வீங்களே.உங்க கைபக்குவம் தனி.

ஹாஜி முஹம்மது மஸ்தான் said...

Really superb... I can't belive this... Specially ur blog. Thank God

asiya omar said...

thanks haji,why you cant believe?chachi has 18 years experience in cooking,as a chef you have only few years.