Saturday, May 15, 2010

வெஜ் தயிர் பச்சடி

இது என் மகள் ருமானாவே அழகாக கட் செய்து,மிக்ஸ் செய்து ரெடி செய்த பச்சடி.நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள் ;
தயிர் - 400 மில்லி,
வெங்காயம் -1
கேரட் - 1
வெள்ளரிக்காய் - 1
ஃப்ரோசன் கார்ன் - அரை கப்
மிளகாய் - 1
மல்லி இலை - சிறிது
தேவைக்கு - உப்பு


இப்படி அழகாக கட் பண்ணிக்கோங்க.

தயிர் சேருங்க,மிளகாய்,மல்லி இலை சேருங்க,உப்பு சேருங்க,மிக்ஸ் செய்துக்கோங்க.



சூப்பர் வெஜ் தயிர் பச்சடி ரெடி.
குறிப்பு : எனக்கு காய்கறி கட் செய்வது ரொம்ப பிடிக்கும்,ஆனால் இந்த தக்காளி மட்டும் கட் பண்ணமாட்டேன்.எனக்கு பிடிக்கவே பிடிக்காது(தண்ணீர் வடியும்)உம்மாக்கு எப்பவும் சமைக்கும் பொழுது நான் நேரம் கிடைத்தால் கட் செய்து கொடுப்பேன்,இந்த வீக்கெண்டில் உம்மா பிஸியாக ஸ்பெஷலாக சமைச்சுகிட்டு இருந்தாங்க,அதனால் நான் பச்சடியை செய்துட்டேன்.எப்படி இருக்குன்னு செய்து பார்த்திட்டு சொல்லுங்க.


16 comments:

மகி said...

அருமையாக இருக்கு ருமானா! ஆசியாக்கா,அப்போ தக்காளி-ரோஸ் உங்கள் கைவண்ணமா? அழகா இருக்கு!

asiya omar said...

ஆமாம் மகி ருமானா பவுலில் எல்லாம் மிக்ஸ் செய்து வச்சிட்டு போய்ட்டா.நான் தான் கார்னிஷ் பண்ணினேன்.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

மகள்களின் கைவண்ணம் எல்லாமே, எப்பவுமே சுவை அலாதி தான். அது தப்பாவே இருந்தாலும் ரைட் ரைட் தான். எங்கள் ருமானாக்கு ஜே! ஜே!!

asiya omar said...

அப்துல்காதர் உங்கள் மனைவியை இந்த பச்சடி நிச்சயம் செய்து பார்க்க சொல்லுங்க.அருமையாக இருக்கும்.

அன்னு said...

ருமானா. அழகிய பெயர். 'மாதுளை"ன்னு அர்த்தமோ? தெரியலை.

அழகான, நேர்த்தியான செய்முறை. வாழ்த்துக்கள்.

athira said...

ஈசி பச்சடி, அதை அலங்கரித்துள்ள விதம் மிக அருமை.

asiya omar said...

அதிரா கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.நான் அனுப்பியதில் ஒரு கருப்பு பூஸார் படம் இருந்ததே கவனித்தீர்களா?

Jaleela said...

ஆசியா நீங்கள் கொடுத்து வைத்தவங்க,
ஒரு பொம்பள பிள்ளை இல்ல்லையேன்ன் ரொம்ப வருத்தமா இருக்கு,.

வாழ்த்துக்கள் ருமானாவிற்கு,

அழகாக கார்னிஷிங் செய்து வைத்து இருக்கீஙக.

எனக்கு சமைப்பது ஈசி ஆனால் அந்த கார்னிஷிங்குக்கு தான் பொருமை இல்லை.

Jaleela said...

அன்று சந்திப்பில், ருமானாவை அவங்க டாடி கூட அனுப்பிட்டீங்க, ஒரு வார்த்தை கூட் அவ கிட்ட பேசல. கை கொடுத்து கண்ணத்தில் கிள்ளனும் போல் இருந்தது,

நாஸியா said...

Wow this is nice ! :)

LK said...

@சகோதரி

உங்களை போலவே உங்கள் மகளும் சமையலில் வித்தகி போல இருக்கே..

asiya omar said...

ஜலீலா உங்கள் வாழ்த்தை ருமானவிற்கு தெரிவித்து விடுகிறேன்,கெட்டுகெதரில் எல்லாரையும் கிளம்பியது கூட மண்டைக்கு எட்டலை.நானும் கவனிக்காமல் விட்டு விட்டேன்.

asiya omar said...

அன்னு கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.


நாஸியா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

LK கருத்திற்கு மகிழ்ச்சி.ஏதோ அவளுக்கும் கொஞ்சம் இண்ட்ரெஸ்ட் உண்டு.

அஹமது இர்ஷாத் said...

Nice Receipe... i Talk to My Wife.. she Like this Defenatly... Thanks For Sharing...

Mrs.Menagasathia said...

ருமானா அருமையாக செய்திருக்காங்க,பாராட்டுக்கள்!!கார்னிஷிங் சூப்பர்ர்...