Monday, May 24, 2010

ஈஸி இன்ஸ்டன்ட் கபாப்

அரேபியர்கள் இங்கு பார்க்கில் அமர்ந்து பார்பிக்கியுவ் செய்து சாப்பிடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.கபாப்பிற்கு தேவையானவற்றை ரெடி செய்து வந்து கபாப் ஸ்டிக்கில் கையால் பிடித்து வைத்து சுட்டு எடுப்பது வழக்கம்.நான் இங்கு உபயோகித்து இருப்பது இன்ஸ்டண்ட் கபாப்.

தேவையான பொருட்கள்;

இன்ஸ்டண்ட் கபாப் பாக்கெட் - 1 (8 இருக்கும்)
கொடைமிள்காய் - 2
வெங்காயம் - 2
ஆலிவ் ஆயில் அல்லது உபயோகிக்கும் எண்ணெய்- 2 டீஸ்பூன்


பார்பிகியூவ் அடுப்பில் அல்லது ஒவனில் பேக் கூட பண்ணலாம்,நான் இங்கு ஈசியாக இப்படி செய்திருக்கேன்.சாலோ ஃப்ரை பேனில் ஆலிவ் ஆயில் 2 டீஸ்பூன் விட்டு அதில் டீஃப்ராஸ்ட் பண்ணாமல் அப்படியே ரெடி மேட் கபாபை போட்டு மீடியம் தீயில் வைத்து மூடி வைத்தால் வெந்து வரும்.

திருப்பி போடவும்,எல்லாப்பக்கமும் வெந்து வரும்.அத்துடன் பெரிதாக கட் செய்த வெங்காயம்,கொடைமிளகாய் சேர்க்கவும்.சிறிது நேரத்தில் ஆகி விடும்.

கபாப் நாலு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்தால் ரெடியாகிவிடும்.சிறிது நேரம் மூடி வைத்தால் விரைவில் ஆகி விடும்.பக்குவமாய் சமைப்பதில் தான் இதன் ருசி இருக்கிறது.

சுவையான மட்டன் ஷீஸ் கபாப் ரெடி.முழுதாகவும் வைக்கலாம்,கட் செய்தும் பரிமாறலாம்.இதனை சைட் டிஷ் ஆகவும்,ஸ்டார்ட்டராகவும் பரிமாறலாம்.

குழந்தைகளுக்கு இப்படி கட் செய்து கபாப் ஸ்டிக்கில் அடுக்கி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.வெள்ளரி ,கேரட்,தக்காளி பச்சையாக கட் செய்து உடன் பரிமாறலாம்.பூண்டு சாஸ்,ஹமூஸ்,முத்தப்பல்,குபூஸுடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.

பின் குறிப்பு :

பாக்கெட்டில் வாங்காமல் நாமே வீட்டில் ரெடி செய்யலாம் ,மட்டன் கீமா,ஆனியன்,பெப்பர் பவுடர்,கார்லிக் பவுடர்,தனியா பவுடர்,பச்சை மிளகாய்,பார்ஸ்லி இலை,உப்பு ,ப்ரெட் க்ரெம்ஸ் மிக்ஸ் செய்து கபாப் ஷேப் செய்தும் சுடலாம்.

--ஆசியா உமர்

21 comments:

Chitra said...

mouth watering.... :-)

நாஸியா said...

அடடே.. நாங்களும் க்ரீன் முபஸ்ஸராவில் அடிக்கடி பார்பிகியூ போட்டிருக்கோம்.. அதுல என்ன ஸ்பெஷல்னா, நாம அரட்டை அடிக்க ஆம்பிளைங்க கறிய சுட்டெடுக்கனும்.. ஹிஹி

asiya omar said...

thanks chitra.

asiya omar said...

நாஸியா கருத்திற்கு மகிழ்ச்சி.நாங்களும் எப்பவாவது பார்பிகியூ போடறதுண்டு,இரண்டு ஃபேமிலிக்கே நான்கு கிலோ வேண்டும்,சுவையில் எவ்வளவு சாப்பிடுறோம்னே தெரியாது.வீட்டில இப்ப அடுப்பெல்லாம் தூங்குது,விண்டரில் தான் எழுப்பணும்.

Kousalya said...

நல்லா இருக்கு ஆனா இப்பவே டேஸ்ட் பார்த்ததாக வேண்டுமே என்ன செய்வது?

அக்பர் said...

நல்ல ரெஸிப்பி மேடம்.

//அடடே.. நாங்களும் க்ரீன் முபஸ்ஸராவில் அடிக்கடி பார்பிகியூ போட்டிருக்கோம்.. அதுல என்ன ஸ்பெஷல்னா, நாம அரட்டை அடிக்க ஆம்பிளைங்க கறிய சுட்டெடுக்கனும்.. ஹிஹி//

ஹா...ஹா..ஹா...

Mrs.Menagasathia said...

good,mouth watering recipe!!

எம் அப்துல் காதர் said...

ஆசியா மேடம் இத இத தான் எதிர் பார்த்தேன்! நீங்க போட்டுடீங்க. இன்ஷா அல்லாஹ் நாளை மாலை பீச்சுக்கு போய் சுட்டுட வேண்டியதுதான். நன்றி!!

//நாம அரட்டை அடிக்க ஆம்பிளைங்க கறிய சுட்டெடுக்கனும்.. ஹிஹி//

நாஸியா மேடம் இது ரொம்ப ஓவரா தெரியல! எவ்வளவு ஹதீஸ் விசயங்களை எடுத்து போடுறீங்க. இப்படி ஆம்பிளைங்களை போட்டு படுத்தாதீங்க! எங்க வீட்டு காரம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க. உஷாரா இருக்கணும் (என்னை நானே சொல்லிக்கிறேன்) இந்த இடுகையை அவர்கள் படிக்காம உஷாரா பார்த்துக்கணும். ஹி ஹி

இளம் தூயவன் said...

அது எப்படி ,கலக்கிட்டிங்க...சும்மா சொல்லகூடாது அருமை.

asiya omar said...

கௌசல்யா வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மேனகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

அக்பர் உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.

இளம்தூயவன் இது ரொம்ப ஈசியாக செய்து விடலாம்.கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

அப்துல் காதர் உம்ரா நிறைவேற்றிவிட்டு வந்தாச்சா? செய்து பாருங்க.அருமையாக வரும்.

ஜெய்லானி said...

:-)))))

asiya omar said...

ஷார்ஜாவில் கரெண்ட் கட் அதனால தம்பியைக் காணோம்னு நினைச்சேன்,சிரிப்பை பார்த்தால் தெரியுதே,அங்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை போல.

Geetha Achal said...

மிகவும் அருமையாக இருக்கிண்றது...சூப்பர்ப்..நாங்களும் இந்த வாரம் க்ரில் செய்யலாம் என்று நினைத்து உள்ளோம்...பார்க்கலாம்...

vanathy said...

அக்கா, நல்லா இருக்கு. எனக்கு இந்த் டிஷ் மிகவும் பிடிக்கும். அருமையா இருக்கு.

மகி said...

ஆசியாக்கா,இவரும் இங்கே க்ரில் வாங்கனும்னு சொல்லிட்டே இருக்கார்..சிக்கன் கிரில் பண்ணிருக்கோம்,பழைய வீட்டுல..உங்க ஊர்ல ரெடிமேட் கபாப் கிடைக்குதா? அது ரொம்ப ஈசி தானே?என்ஜாய்!

asiya omar said...

கீதா ஆச்சல்,வானதி,மகி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

அரேபியா உணவு வகைகள் உங்களிடம் இருந்து நிறைய எதிர் பார்கிறேன் தோழி.

asiya omar said...

நிச்சயம் ஸாதிகா,கருத்திற்கு நன்றி.