Sunday, May 9, 2010

சிக்கன் விங்ஸ் & பொடட்டோ ரோஸ்ட்

தேவையான பொருட்கள் ; ஃப்ரெஷ் சிக்கன் விங்ஸ் - 1 கிலோ,சிக்கன் டிக்கா அல்லது சிக்கன் 65 மசாலா - 2 டீஸ்பூன்,எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,கார்ன்ஃப்ளோர் - 1-2 டேபிள்ஸ்பூன்,சோயா சாஸ் - ஒரு மேஜைக்கரண்டி(விரும்பினால்)உருளைக்கிழங்கு அல்லது ஃப்ரோசன் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் ,உப்பு- தேவைக்கு.


சிக்கன் விங்ஸ் சுத்தம் செய்து ,கட் செய்து கழுவி நீர் வடிகட்டவும். உருளைகிழங்கையும் கட் செய்து ரெடி செய்யவும்.சிக்கன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ,மசாலா,தயிர்,உப்பு,கார்ன்ஃப்ளோர், உருளைக்கிழங்கு போட்டு மிக்ஸ் செய்து குறைந்தது ஒரு மணிநேரமாவது வைக்கவும்.பின்பு நான்ஸ்டிக் பேகிங் ட்ரேயில் வைக்கவும்.ஓவனை முற்சூடு படுத்தவும்.



குக்கிங் ரேஞ்சில் 250 டிகிரி வெப்பம் செட் செய்து பேகிங் ட்ரேயை கிரில் ப்லேட்டின் மீது வைக்கவும்.கால் மணி நேரம் கழித்து சிக்கன்,உருளைக்கிழங்கை திருப்பி வைக்கவும்.


திரும்ப கால்மணி நேரம் கழித்து ஓவனை திறந்தால் சிக்கன் விங்ஸ், பொட்டட்டோ ரோஸ்ட் ரெடி.


இதனை அரைமணி நேரத்தில் செய்து விடலாம்.கிரிஸ்பி யம்மி சிக்கன் விங்ஸ் ரெடி.நம் இஷ்டத்திற்கு மசாலாவை மாற்றியும் செய்யலாம்,பார்ட்டியில் ஸ்டார்டராகவும் பரிமாறலாம்.

--ஆசியா உமர்.

12 comments:

Geetha Achal said...

சூப்பர்ப்..சிக்கன் விங்க்ஸ்...எனக்கு இது ரொம்ப பிடிக்கும்...அதுவும் எப்பொழுது பிஸ்ஸா வாங்கினாலும் சிக்கன்விங்க்ஸும் அத்துடன் ஆஜர்.....

ஆனால் இப்படி செய்தால் ஒரிஜினல் சிக்கன் விங்க்ஸ் டேஸ்ட் போல வருவதில்லை என்று எனக்கு சிலசமயம் தோனும்...அதனால கடைசியில் இப்படி பேக் செய்தவுடன் பட்டர்+ சிறிது சில்லி சாஸ் சேர்த்து சிக்கனை கலந்தால் சுவையாக இருக்கும்...

asiya omar said...

கீதா இது ஒரு முறை,இது சிக்கன் 65 போல் டேஸ்ட் இருக்கும்,நான் மசாலா,சாஸ் மாற்றி வேறு முறைகளிலும் செய்வதுண்டு.நான் எண்ணெய் சேர்த்து இருக்கிறேன்.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

Mrs.Menagasathia said...

படத்தை பார்த்ததும் அப்ப்டியே சாப்பிடனும் போல் இருக்கு,சூப்பரோ சூப்பர்ர்!!

Chitra said...

நாவில் மீண்டும் நீர் ஊற வச்சிட்டீங்களே....

ஸாதிகா said...

எண்ணெய் இல்லாமல் ..அவசியம் செய்துபார்த்துவிடுகின்றேன் தோழி.

asiya omar said...

மேனகா உங்களை மாதிரி வெரைட்டி செய்ய தெரியாதேமா,நன்றி.

சித்ரா கருத்திற்கு நன்றி,செய்து பாருங்க.

ஸாதிகா ஈசியாக செய்து விடலாம்.செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Cool Lassi(e) said...

A splendid combo! Dunno which I love more..the wings or the fries..Very american! Love it!

vanathy said...

ஆசியா அக்கா, நல்ல ரெசிப்பி. எனக்கு உருளைக் கிழங்கு மிகவும் பிடிக்கும். அழகா இருக்கு படங்கள்.

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு ,
நானும் அடிக்கடி செய்வதுதான்.
போட்டோ எடுத்து வைத்து நேரமில்லாமல் போட முடியாமல் போய் விட்டது.

என் பெரிய பையனுக்கு தான் ரொம்ப பிடிக்கும் குபூஸுடன் சேர்த்து செய்து கொடுப்பேன்.

சமைத்து அசத்தி கொண்டே இருக்கீஙக்

asiya omar said...

cool cool ,love your comments.

asiya omar said...

வானதி எனக்கும் உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும்.எல்லாவற்றிலும் உருளைக்கிழங்கு சேர்ப்பேன்.வெயிட் போடுமேன்னு பயந்து கொஞ்சமாக சாப்பிடுவேன்.

asiya omar said...

ஜலீலா ஊரில் இருந்து வந்து ஒரு மாதம் தானே ஆகிறது,பிடித்ததை செய்து கொடுக்க வேண்டாமா?கருத்திற்கு மகிழ்ச்சி.