Monday, May 10, 2010

மட்டன் கீமா கட்லெட் / Mutton Keema Cutlet

தேவையான பொருட்கள்
மட்டன் கீமா - 400 கிராம்
உருளைகிழங்கு - 200 கிராம்
எண்ணெய் - 100 - 150 மில்லி
பெரிய வெங்காயம்- 1
,பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது- 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
கரம் மசாலா - அரைஸ்பூன்
மிளகுத்தூள் - அரைஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள்- அரைஸ்பூன்
முட்டை -1
மல்லி,புதினா- சிறிது
1 டேபிஸ்பூன் - ப்ரெட் க்ரெம்ஸ்
உப்பு - தேவைக்கு .


கறியை கழுவி நீர் வடிகட்டி குக்கரில் எடுத்து முதலில் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,இஞ்சி பூண்டு தேவைக்கு உப்பு சேர்க்கவும்.



பின்பு கீமா மசாலாவுடன் உருளையை தோல் நீக்கி கட் செய்து அதனுடன் போடவும்.


ஐந்து விசில் வைத்து இறக்கவும்.உருளையை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மசித்து கொள்ளவும். வெந்த கீமாவை தண்ணீர் சுண்ட வைக்கவும்.

மசித்த உருளையுடன்,வேகவைத்த கீமா,கட் செய்த வெங்காயம்,மல்லி,புதினா,மிளகாய்,மிளகுத்தூள்,சீரகத்தூள்,பெருஞ்சீரகத்தூள்,
கரம் மசாலா,ஒரு முட்டை, ப்ரெட்க்ரெம்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


மசாலா பொருட்கள் கலந்த கீமாவை சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.

அந்த கீமா உருண்டைகளை விரும்பிய வடிவில் தட்டி கொள்ளவும்.நான் ஹாட் சேப்பில் தட்டி இருக்கிறேன்.



சாலோ ஃப்ரை பேனில் எண்ணெய் சூடானதும் கட்லெட்டை தட்டி போட்டு சிவந்து பொரித்து எடுக்கவும்.இந்த அளவிற்கு 20 மட்டன் கீமா கட்லெட் வரும்.



சுவையான சூடான மட்டன் கீமா கட்லெட் ரெடி.இது ஃப்ரைட் ரைஸ்,பிரியாணி மற்றும் எல்லாவகையான சாதம் வகைக்கும் பொருத்தமாக இருக்கும்.



மாலை நேர ஸ்நாக்காக டொமட்டோ சாஸ் வைத்தும் பரிமாறலாம்.பொரித்தவுடன் தட்டு காலியாகிவிடும்.


-ஆசியா உமர்.

பின்குறிப்பு : நான் கட்லெட்டை முட்டை டிப் செய்து ,ப்ரெட்கிரெம்சில் ரோல் பண்ணாமல் எல்லாம் சேர்த்து கலந்து தட்டி போட்டு விட்டேன்,முட்டை,ப்ரெட் க்ரெம்ஸ் தனியாக வைத்து டிப் செய்து பின்பு ப்ரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் பொரித்தாலும் அருமையாக இருக்கும்.நேரம் இருப்பதை பொருத்து உங்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.


13 comments:

Mrs.Menagasathia said...

அருமை அக்கா!! எனக்கு இங்கு கீமா மட்டனில் கிடைக்கமாட்டேங்குது.மாட்டுக்கறியில் தான் கிடைக்குது...சாப்பிடனும்போல் ஆசையாக இருக்கு.எப்படி ஹார்ட் ஷேப் கையால் செய்தீங்க அழகா இருக்கு...

asiya omar said...

நன்றி மேனகா.ஹாட் சேப் செய்ய இடது கையில் உருண்டையை வைத்து பெருவிரலை தனியாக மற்றவிரல்களை சேர்த்து சேப் செய்ய வேண்டும்,ஆட்காட்டி விரலால் மத்தியை குழித்து விடவேண்டும்.அவ்வளவு தான்.

இங்கு போன்லெஸ் மட்டன் வாங்கி நாம மின்ஸ் எப்படி பண்ணச்சொல்கிறோமோ அப்படி நம் கண்முன்னாடியே மின்ஸ்செய்து தருவாங்க.ரெடியாக சில ச்மயம் இருக்கும்,அவை மிக தூசியாக மின்ஸ் செய்திருப்பாங்க,நாங்க இப்ப விருப்பத்திற்கு கேட்டு இப்படி தான் வாங்குவது வழக்கம்.

Geetha Achal said...

மிகவும் அருமையாக இருக்கின்றது....சூப்பர்ப்...

vanathy said...

ஆசியா அக்கா, நல்ல கிரியேட்டிவிட்டி உங்களுக்கு ஹார்ட் சேப் அழகு. நல்ல ரெசிப்பி & அழகான, தெளிவான படங்கள்.

Chitra said...

super! super! super! mmmmm......
ssssssssssssssuperrrrrrrr!

asiya omar said...

கீதா ஆச்சல்,வானதி,சித்ரா உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
ஏதாவது மாற்று முறை ,குறை இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே,நானும் உங்கள் மேலான கருத்துக்களை எப்பவும் எதிர்பார்க்கிறேன்.

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு மட்டும் தனி கை பக்குவம் இருக்கு மேடம். அதனால் தான் இது சாத்திய மாகிறது. சிலர் அன்பால் கட்டிபோடுவது போல், நீங்கள் சமையலால் எங்களை கட்டிபோட்டு விட்டீர்கள். இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் மேடம். அல்ஹம்துலில்லாஹ்!!!

asiya omar said...

நன்றி,அப்துல் காதர்.

Cool Lassi(e) said...

Mutton cutlet looks fabulous. Can it be baked rather than deep fried?

Ann said...

Looks too good, I love mutton cutlet, my mom often makes this. Thanks for sharing the recipe. I have to try this soon.

Jaleela said...

> சிக்கன் லாலிபாப் எல்லாம் பொரிப்போமே அபபடி,ஓ எல்லாத்தையும் சேர்ர்த்தே பிசறி பொரித்து விட்டீர்களா.

இதுவும் நல்ல இருக்கு,

அழகாக ஷேப் செய்து பொரித்த் இருக்கீங்க.
ச்ழ்

மின்னுது மின்னல் said...

தேவையான பொருட்களுக்கு எண்டர் தட்டி இருக்கலாம் :)


சுவையான குறிப்பு
செய்து பார்க்கனும் :)

Asiya Omar said...

Cool lassie
Ann
Jaleela
Thanks for your visit and comments.

Minnuthu minnal enter thattivitteen.Thanks pa.