Wednesday, June 30, 2010

மீண்டும் சந்திப்போம்விடுமுறை வந்தது
விட்டு வந்த
வீட்டு நினைவும் வந்தது

உல்லாசமாய் ஊரில்
உற்றார் உறவினருடன்
உண்டு மகிழும்
கண்டு களிக்கும்
நாளும் வந்தது

கொண்டாடும் குதூகலம்
கொட்டம் போட்டது
கொஞ்சும் செழிப்பாய்
பயண பிரமிப்புடன்
நாட்கள் நகர்ந்தது

ப்ளாக்கிற்கு விடுமுறை
அது மட்டும்
மனதிற்கு பாரமானது.
- ஆசியா உமர்.

Tuesday, June 29, 2010

ஓ ! ஒயாசிஸ் ....

இது எங்க பேக்யார்டில் இருக்கிற ஒயாசிஸ்.இங்கு இப்ப எங்கு பார்த்தாலும் பேரீச்சம் பழம் பழுத்து தொங்குவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் ,எங்க வீட்டிற்கு பின்னாடி ஒரு பெரிய பேரீச்சம்பழத் தோப்பு இருக்கு


இது தாங்க எங்க வீட்டில் இருந்து தோப்பிற்கு போற வழி.எவ்வளவு அழகு. எப்பவாவது வாக்கிங் போவது வழக்கம்,அழகான வாக் வே.இரண்டு பக்கமும் பெரிய மதிற்சுவர்கள் உள்ளே பேரீச்சம்பழ மரக்கூட்டம்,பறவைகளின் ஓசை,மெலிதாக ஓடும் நீர் ஓடைகள் ,பாக்ஸ் பாக்ஸ் ஆக பறித்து அடுக்கி வைத்த பேரீச்சம் பழங்கள் , அங்கங்கு சிறிய வீடுகளில் தங்கி வேலை செய்பவர்கள் என்று பார்க்க அழகாக இருக்கும்
இது உள்ளே வேலை செய்றவங்க போற வழி,

நாம வெளியே தான் நடக்க முடியும்.

இங்கே பாருங்க ஒயாசிஸில் இருந்து பார்த்தால் எங்க வீடு தெரியுதா?


எஙக வீட்டு பின் பக்க பால்கனியில் இருந்து பார்த்தால்

இப்படி தான் தோப்பு தெரியும்.கொள்ளை அழகு!

இந்த வெயிலும் கூட எவ்வளவு செழிப்பாக இருக்கு பாருங்க.அப்ப அப்ப ஜீப் போவதும் வருவதும் அந்த தோட்டத்தில் பார்ப்பதே அழகு,வழியை தவற விட்டால் கண்டு பிடிப்பது சிரமம்,உள்ளே நுழைந்தால் எங்கும் ஒரு போல் இருக்கும்,வாக் போகும் பொழுது எங்க குடும்பம் மட்டும் அந்த தோப்புக்குள் இருப்பது போல் பயமாக இருக்கும்,அப்படி மயான அமைதி,அங்கு வேலை செய்பவர்கள் ஆடு,கோழி,மாடு,பறவைகள் என்றும் வளர்க்கிறார்கள்,அவற்றின் கழிவு உரமாக பயன்படுத்துவார்களோ ! வேலை செய்யும் பல நாட்டு ஆட்களையும் பார்க்கவே பாவமாக இருக்கும்,இங்கு நம்ம தமிழ் ஆட்களும் இருப்பார்களோ என்று உற்று பார்ப்பதுண்டு.நம்ம ஊரில் இருந்து வந்து இது மாதிரி தோப்பில் வேலை செய்து எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்களோன்னு
நினைப்பதுண்டு. இந்தப்படத்தில் மரங்களின் இரண்டு பக்கமும் நீர் ஓடைகள் தெரியுதா?
இது காய்வெட்டான பேரீச்சம் பழம்.
ஆகா பழுத்த பழம் உள்ள மரம்,விடலாமா?

நாங்கள் வாக் போய் வரும் பொழுது எங்களுக்கு கிடைத்த பேரீச்சம் பழம், அதனை தண்ணீரில் அலசும் பொழுது தான் ப்ளாக்கில் போட்டால் என்ன என்ற எண்ணம் வந்து கிளிக்கினேன்.
நல்ல அலசி கிச்சன் டவல் விரித்து காய வைத்தது.
ஃப்ரெஷ் பழமாச்சே அதனை அப்படியே பேக் செய்து ஊருக்கு கொண்டு போக ரெடி செய்தாச்சு,அது வேற பார்சல்.


இது உங்க எல்லோருக்கும் டேஸ்ட் பாருங்க.தெளி தேனும் பாலும் கலந்த மாதிரி ஒரு ருசி,அதுவும் ஃப்ரெஷ் ஆக பழுத்த பழத்தில் தான்.


--ஆசியா உமர்.பேக்ட் சிக்கன் & வெஜிடபிள்
தேவையான பொருட்கள் ;
முழுக்கோழி - 1 கிலோ
மேகி சூப் கியுப் – 2
சிக்கன் டிக்கா மசாலா (பார்பிகியு) – 2 டீஸ்பூன்
லைம் – 1
உருளை- 2
கொடைமிள்காய் – 2
கேரட் -2
பீன்ஸ் – சிறிதுஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்கோழியை சுத்தம் செய்து முழுதாக தண்ணீர் வடிய வைக்கவும்.


டிக்கா மசாலா, சூப் கியுப்(பொடிக்கவும்) ,லைம் சேர்த்து நன்கு கோழியில் கலந்து வைக்கவும்.குறைந்தது அரை மணி -நேரம் ஊற வைக்கவும்.உப்பு தேவையில்லை,சூப் கியுப்பிலும்,மசாலாவிலும் இருக்கும் உப்பே போதுமானது
குக்கிங் ரேஞ்சில்(கேஸ் ஓவன்) 250 டிகிரி வெப்பம் செட் செய்து மேலும் கீழும் பற்ற வைக்கவும்.


ஒரு பைரக்ஸ் போன்ற பவுலில் ஆலிவ் ஆயில் ஒரு டேபிள்ஸ்பூன் தடவி,கட் செய்த உருளைக்கிழங்கு,பின்பு கேரட்,கொடைமிளகாய் ,பீன்ஸ்,விரும்பினால் வெங்காயம் கூட சேர்த்து அடுக்கவும்.அதன் மீது மசாலாவில் ஊறிய கோழியை வைக்கவும்.சிக்கனை வைத்து மேல் ஒருடேபிள்ஸ்பூன் எண்ணெய்யை விடவும்.

20 நிமிடம் மீடியம் ஃப்லேமில் வைத்து கவனமாக கருகாதபடி சிக்கனை திருப்பி வைக்கவும். மறுபடியும் சிக்கனை
திருப்பி வைத்து இருபது நிமிடம் கழித்து எடுக்கவும்.அலுமினியம் ஃபாயில் போட்டு கவர் செய்யவும்.
திரும்ப அடுப்பை சிம்மில் 160 டிகிரி வெப்பம் வைத்து 10 நிமிடம் வைத்து அணைக்கவும்.சூடான சுவையான பேக்ட் சிக்கன் & வெஜிடபிள் ரெடி.இதனை ரொட்டி,நாண்,குபூஸ் உடன் பரிமாறவும். வெஜிடபிளும் சிக்கனும் சாப்பிட வெண்ணெய் போல சாஃப்டாக இருக்கும்.

-ஆசியா உமர்.


Monday, June 28, 2010

மை ஸ்டீமர்


ஸ்டீம்ட் சிக்கன் ரெசிப்பி கொடுத்த பின்பு இந்த ஸ்டீமர் பற்றி தோழிகள் கேட்டதால் அதனை பற்றிய ஒரு சிறு பதிவு.

என்னிடம் உள்ள ஸ்டீமரில் 3 லேயர் இருக்கு.காய்கள் ,புட்டு, கொழுக்கட்டை,இடியாப்பம்,கிழங்கு வகைகள் அவிப்பதற்கு ஏன் சிக்கன் ஃபிஷ் கூட அவித்து எடுக்கலாம்.கீழ் பாத்திரத்தில் சாதம், குழம்பு,சூப்,பாயாசம் என்றும் செய்து அசத்தலாம்.


இட்லி தட்டை உள்ளே வைத்து இப்படி ஈசியாக அவிக்கலாம்.மேல் லேயரில் இடியாப்பதட்டு வைத்து பிழிந்து வைக்கலாம்.நார் தட்டு என்றால் அடுக்க வசதியாக இருக்கும்.


மொத்தத்தில் இந்த பாத்திரம் ரொம்ப வசதியாக இருக்கு.தோழிகளே நீங்களும் ஒண்ணு வாங்கிக்கோங்க.
--ஆசியா உமர்.

Sunday, June 27, 2010

ஸ்டீம்ட் சிக்கன் / Steamed Chicken

அரபு நாட்டில் சிக்கன் தான் மெயின் ஃபுட் என்றே சொல்லலாம்.பலமுறையாக அதனை ருசி பார்ப்பதில் அவர்கள் கில்லாடிகள் .இப்படி ஸ்டீம் பண்ணி சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியம் ,டயட் இருக்கிறவங்க இப்படி செய்து சாப்பிடலாம்.ருசி செய்து பார்த்து விட்டு சொல்லுங்க,அருமையாக இருக்கும்,இப்பெல்லாம் எங்க வீட்டில் அடிக்கடி இது உண்டு.
தேவையான பொருட்கள் ;
முழுக்கோழி - 1000 கிராம்
தயிர்- 2 டேபிள்ஸ்பூன்
சிக்கன் டிக்கா மசாலா - 2 டீஸ்பூன்
(அல்லது விருப்பமான மசாலா.)
பப்ரிக்கா பவுடர் - அரைஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4 நபர்.

செய்முறை:

சிக்கனை குவார்டர் பீஸாக கட் செய்து கொள்ளவும். அதனுடன் தயிர்,உப்பு,சிக்கன் டிக்கா அல்லது பிடித்தமான மசாலா ,பப்ரிக்கா பவுடர் ,உப்பு சேர்க்கவும்.

சிக்கனுடன் மசாலா கலந்து அதனை குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்கவும்.பின்பு இட்லி சட்டியில் வைத்து அவித்து எடுக்க வேண்டியது தான்.

பின்பு அதனை அடியில் இருக்கும் பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் வைத்து கொதி வந்ததும் சிக்கன் துண்டுகள் முழுவதும் வைத்து 20 நிமிடம் ஆவியில் வெந்து எடுக்கவும்.

வெந்த பின்பு சிக்கன் இப்படி காணப்படும்.

இப்ப சுவையான ஸ்டீம்ட் சிக்கன் ரெடி.திறந்து சூடாக பரிமாறவேண்டியது தான்.
சாலட்,ரொட்டி,குபூஸ்,ரைஸ் உடன் பரிமாறலாம்.
அட உங்களுக்கு தான்,எடுத்துக்கோங்க.உடன் பரிமாறி இருப்பது ஜலீயின் ரைஸ்குக்கர் பகாறா கானா தான்.
குறிப்பு : ஸ்டீமர் இல்லாட்டியும் இட்லி பாத்திரத்தில் கூட சிக்கனை இப்படி அவித்து எடுக்கலாம்.


-ஆசியாஉமர்.


Saturday, June 26, 2010

சீஸ் ஆம்லெட்

தேவையான பொருட்கள் ;

முட்டை - 1

துருவிய மொசரல்லா சீஸ் - 1 -2 டேபிள்ஸ்பூன்


எண்ணெய் -1 டீஸ்பூன்

பெப்பர் பவுடர் - கால்ஸ்பூன்

சீரகப்பவுடர் - பின்ச்

பப்ரிக்கா பவுடர் - பின்ச் (விரும்பினால்)

உப்பு - ஹாஃப் பின்ச்முட்டையுடன்,மிளகு,சீரகம்,பப்ரிக்கா,உப்பு பவுடர் சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும்,நன்கு பீட் செய்து கொள்ளவும்.

கலந்த முட்டை முட்டையை ஆம்லெட்டாக பானில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு விடவும்.முட்டை வெந்து வரும் பொழுது சீஸ் தூவவும்.


அப்படியே ஆம்லெட்டை மடக்கவும்.
ஆம்லெட்டை திருப்பி போட்டு உடன் எடுக்கவும்.சுவையான சீஸ் ஆம்லெட் ரெடி.டோஸ்டட் ப்ரெட்,நூடுல்ஸ் உடன் பரிமாறலாம்.
சிம்பிளாக இருந்தாலும் அந்த சீஸ் சேர்த்து ஆம்லெட் சாப்பிடும் பொழுது யம்ம்மியாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
--ஆசியா உமர்.


Thursday, June 24, 2010

நெல்லை மட்டன் தக்கடி / Nellai Mutton Thakkadi

தேவையான பொருட்கள் ;

வறுத்த அரிசிமாவு (புட்டு மாவு) - 400 கிராம்

மட்டன் - அரை கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா (ஏலம்,பட்டை,கிராம்புத்தூள்)-அரைஸ்பூன்

கறி மசாலாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் - கால் கிலோ

தேங்காய்த்துருவல் - பாதி தேங்காய்

பச்சை மிளகாய் -3

மல்லி கருவேப்பிலை புதினா - சிறிது

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு- தேவைக்கு
மாவுடன் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் , மல்லி,கருவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து கலந்து வைக்கவும்.குக்கரில் எண்ணெய் விட்டு சிறிது வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,கரம்மசாலா,கறிமசாலா, மல்லி,புதினா,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்பு சுத்தம் செய்து கழுவிய மட்டனை சேர்த்து ,கறிமசாலா ,உப்பு சேர்த்து கறி மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மூடி 3 விசில் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.இப்ப தக்கடிக்குண்டான மட்டன் கிரேவி ரெடி.

ரெடி செய்து வைத்த மாவில் அந்த கிரேவியை மட்டும் மாவு கொள்ளும் அளவு விட்டு கலந்து விடவும்.

இப்ப தக்கடிக்கான மாவு ரெடி.


மட்டனை தனியாக எடுத்து விட்டு மாவிற்கு மூன்று மடங்கு தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.ரெடி செய்த தக்கடி மாவை கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.இருபது கொழுக்கட்டை மீடியம் சைசில் வரும்.

2 கொழுகட்டைக்கான மாவை மீதி வைக்கவும்.தண்ணீர் நன்கு கொதி வரவும் நெருப்பை கூட்டி வைத்து கொழுக்கட்டையை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.கொழுக்கட்டை வெந்து வரும் வரை அகப்பை போடக்கூடாது.கொழுக்கட்டி வெந்து மேலே வந்தவுடன்,தனியாக எடுத்து வைத்த 2 கொழுக்கட்டை அளவு மாவை தூவி விடவும். மூடி போட்டு சிம்மில் 10 நிமிடம் வைக்கவும், அந்த மாவு கூட்டு போல் ஆகிவிடும்.
பாத்திரத்தின் மூடியை திறந்து வேகவைத்து எடுத்து வைத்த மட்டனை போடவும்.கொழுகட்டை உடையாமல் மிக்ஸ் செய்யவும். மட்டனை எடுக்காமல் கொத்திக்க வைத்தால் மட்டன் பாத்திரத்தில் அடியில் இருக்கும் எடுப்பது சிரமம்.இப்படி மேலே போடும் பொழுது கலந்து எடுக்க வசதியாக இருக்கும்.

சுவையான நெல்லை மட்டன் தக்கடி ரெடி.

சூடாக ப்லேட்டில் கொழுகட்டை மட்டன் கிரேவியுடன் பரிமாறவும்.


--ஆசியா உமர்.


குறிப்பு : தலைக்கறியில் தக்கடி போட்டால் சூப்பராக இருக்கும். நாங்க இதற்கு எங்க ஊர் கறி மசாலாவை உபயோகிப்போம்.மசாலா குறிப்பில் உள்ளது.