Tuesday, June 1, 2010

சில்லி கார்லிக் ஃபிஷ் ஃப்ரை

தேவையான பொருட்கள் ;
மீன் - 600 கிராம்
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
ரெட் சில்லி - 6-8
பூண்டு - 10 பல்
வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ்- 1டீஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
ரெட் க்லர் -பின்ச்
உப்பு - தேவைக்கு

மீனை இப்படி சுத்தம் செய்து கட் செய்து கழுவி நீர் வடிகட்டி வைக்கவும்.


காய்ந்த ரெட் சில்லி ,பூண்டு வினிகர் சேர்த்து அரைத்து எடுக்கவும்,சில்லி ப்ளேக்ஸ் இருந்தால் அதுவும் பூண்டு, வினிகர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

மீனோடு உப்பு,அரைத்த சில்லி பூண்டு விழுது,சோயா சாஸ்,ரெட் கலர்,கார்ன் ப்லோர்,உப்பு சேர்க்கவும்.நன்கு இவ்வாறு மிக்ஸ் செய்து வைக்கவும்.


பின்பு அதனை ஃப்ரிட்ஜில் அல்லது வெளியில் வைத்து குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்கவும்.


பின்பு ஒரு பேனில் 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனை போட்டு பொரிக்கவும்.


இப்படி சிவந்ததும் திருப்பி போட்டு மீண்டும் சிவற பொரித்து எடுக்கவும்.


சுவையான பூண்டு மணத்துடன் கூடிய சில்லி கார்லிக் ஃபிஷ் ஃப்ரை ரெடி.கிட்ட்தட்ட தாய் ஃபிஷ் ஃப்ரை மாதிரி தான் இருக்கும்,இது போல் ப்ரான் செய்தால் அசத்தலாக இருக்கும்.விரும்பினால் மீதியான எண்ணெயை மீன் குழம்பு செய்ய பயன்படுத்தலாம்.

குறிப்பு : நம் ஊரில் செந்நாரை அல்லது சங்கராமீன் என்று சொல்லும் மீனில் செய்திருக்கேன்,அரபு நாட்டில் இந்த மீனை சுல்தான் இப்ராஹிம் என்று சொல்கிறார்கள்.சுல்தான் ஹேடி,சுல்தான் ஹட்டான்னும் வெரைட்டி இருக்கும்.ஆங்கிலத்தில் ரெட் ஸ்னாப்பர் என்று பார்த்ததாக நினைவு.

--ஆசியாஉமர்.

29 comments:

நாஸியா said...

wow! this is so easy to make.. these days ive been able to eat only red snapper.. :) ill insha Allah try this sometime

Kousalya said...

பார்த்ததும் சாப்பிட தோன்றுகிறது தோழி. நன்றி

ஸாதிகா said...

வித்தியாசமான மீன் பிர ஆசியா.அவசியம் செய்து பார்த்துவிடுகின்றேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பார்த்ததும் சாப்பிடத்தோன்றுகிறது.

asiya omar said...

கௌசல்யா கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

ஸாதிகா குலோபல் வில்லேஜில் தாய் ஃபிஷ் ஃப்ரை டேஸ்ட் பண்ணி இப்படி செய்திருப்பார்களோன்னு ட்ரை செய்தது தான்.நிச்சயம் வித்தியாசமாக இருக்கும்.

asiya omar said...

ஸ்டார்ஜன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

நாஸியா நீங்க முன்பே இந்த மீன் மட்டும் பிரியமாக சாப்பிடுவதாக சொல்லி இருந்தீங்க,அதனால தான் இதில் செய்து போட்டேன்,மகிழ்ச்சி,கரெக்டாக முதலில் வந்து பார்த்து சென்றது மகிழ்ச்சி.my prayers.

எம் அப்துல் காதர் said...

இந்த வகை ஃப்ரை டேஸ்ட் சொல்லி மாளாது. சும்மா சாப்டுக்கிட்டே இருக்கலாம். சமைத்து அசத்தலாம் என்ற தலைப்புக்கு ஏற்பவே, தினமும் வந்து நிஜமாவே அசத்துகிறீர்கள்.

ஜெய்லானி said...

சங்கராமீன் குழம்பை விட ஃப்ரை ட்டிரிபிள் ஓக்கே!!!

அஹமது இர்ஷாத் said...

செய்முறை அதுவும் ஃபோட்டோவுடன்...சூப்பர்..

asiya omar said...

அப்துல் காதர் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெய்லானி சங்கரா மீன் ஃப்ரை சூப்பராகத்தான் இருக்கும்.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

அஹமது இர்ஷாத் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

மனோ சாமிநாதன் said...

மீன் வறுவல் சிகப்பாக மிக அழகு, ஆஸியா!!

vanathy said...

அக்கா, பார்க்கவே அருமையா இருக்கு. தெளிவான படங்கள். இங்கு நல்ல மீன்கள் வாங்குவது கஷ்டம். கிடைச்சா கண்டிப்பா செய்து பார்க்கணும்.

Mrs.Menagasathia said...

மீன் வறுவல் நல்ல கலர்புல்லா,பார்க்கவே சாப்பிடத்தோனுதுக்கா...அதைவிட மீனை மீன் ப்ளேட்டில் ப்ரெசண்ட் செய்தது சூப்பர்ர்...

asiya omar said...

மனோ அக்கா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

வானதி கிடைக்கும் பொழுது நிச்சயம் செய்து பார்க்கவும்.கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

மேனகா கருத்திற்கும் பாராட்டிற்கும் மகிழ்ச்சி.

Geetha Achal said...

ஆஹா...பிஷ் ப்ரை பார்க்கும் பொழுது சூப்பராக இருக்கின்றது...கலரும் கலக்கலாக இருக்கின்றது...அப்படியே தட்டுடன் எனக்கு பார்சல் அனுப்பிவிடுங்கள்...நன்றி

asiya omar said...

கீதா ஆச்சல் தட்டுடன் தானே எடுத்துக்கோங்க,கருத்திற்கு மகிழ்ச்சி.

இளம் தூயவன் said...

அருமை ,பண்ண கத்தாளை மீன் சாப்பிட்ட திருப்தி.

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி.பண்ண கத்தாளை மீன் பேரு புதுசாக இருக்கு.

ஜெய்லானி said...

//பண்ண கத்தாளை மீன் பேரு புதுசாக இருக்கு.//


’’கத்தாழை கண்ணால.. “” பாட்டே இருக்கு .
இதில கருவாடுதான் அதிகம் வரும் . மீனில் சாதா , பண்ன இரண்டு வகை இருக்கு . இங்கு வெளிநாட்டுக்கு வரும் அதிக கருவாடு கத்தாழை கருவாடுதான் .

Jaleela said...

சங்கரா மீன் எனக்கும், என் பெரிய பையனுக்கும் ரொம்ப பிடிக்கும்.
நானும் இது போல் செய்வதுண்டு, ஆனால் வினிகர் சேர்த்ததில்லை.

நல்ல ரெட்காக பார்க்க மொருகலாக தெரிகிறது இருக்கு.

asiya omar said...

ஜெய்லானி இப்ப தெரிஞ்சுகிட்டேன்,நன்றி.

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Gopi Ramamoorthy said...

நாங்க செங்கால மீன் என்று சொல்வோம்