Saturday, June 5, 2010

வெஜ் ஓட்ஸ் கிச்சடி


தேவையான பொருட்கள்;

ஓட்ஸ் - 100 கிராம் அல்லது ஒரு கப்

காய்கறிகள் --ஒருகப் (கேரட்,பீஸ்,பீன்ஸ்,கார்ன்)

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிள்காய் - 1

மல்லி,புதினா -சிறிது

பிரியாணி இலை-1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா- கால் ஸ்பூன்

மிள்காய்த்தூள் - கால்ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்.

செய்முறை:

ஓட்ஸை ஒரு பவுலில் எடுத்து தண்ணீர் விட்டு அலசி வடித்து வைக்கவும். காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.

ஒரு பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,கரம்மசாலா,மிளகாய் போட்டு வதக்கவும்.பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி,காய்கறிகள் சேர்த்து வதக்கவும்,உப்பு,மஞ்சள் தூள்,மிள்காய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து மூடி போடவும்.
சிறிது நேரத்தில் காய்கறிகள் வெந்து விடும்.


அதனுடன் ரெடியாக உள்ள ஓட்ஸ் சேர்த்து கிளறவும். ஓட்ஸ் தண்ணீரில் ஊறி இருப்பதால் விரைவில் வெந்து விடும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.அருமையாக கிச்சடி திரண்டு வரும்,ஒரு ஸ்பூன் மணத்திற்கு நெய் விட்டு கிளரி இறக்கவும்.சிறிது நறுக்கிய மல்லி புதினா இலை தூவி ஒரு பிரட்டு பிரட்டவும்.சுவையான வெஜ் ஓட்ஸ் கிச்சடி ரெடி.இது காலை,மாலை நேர டிஃபனுக்கு அருமையாக இருக்கும்.ஸ்பூன் போட்டு சுடச்சுட பரிமாறவும்.ஒட்ஸ் உணவு விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.விரும்பிய காய்கள் சேர்த்து செய்யலாம்.விரும்பினால் எண்ணெய் சிறிது கூட்டிக்கொள்ளலாம்.


இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

--ஆசியா உமர்.

32 comments:

மனோ சாமிநாதன் said...

ஓட்ஸ் கிச்சடி ரொம்பவும் அருமையாக இருக்கிறது, ஆசியா! புகைப்படமும் அழகு!

asiya omar said...

மனோ அக்கா நலமா? வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Aruna Manikandan said...

looks healthy and delicious :-)

asiya omar said...

thanks aruna.

sandhya said...

ஓட்ஸ் கிச்சடி பார்க்க சுபேரா இருக்கு அப்போ சாப்பிட ரொம்ப ரொம்ப நல்லா இருக்குமே ..நன்றி

மங்குனி அமைச்சர் said...

நடத்துங்க , நடத்துங்க , நல்லாருக்கு

asiya omar said...

ஆமாம் சந்தியா.செய்த உடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

asiya omar said...

மங்குனி அமைச்சர் வாங்க மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

ஒட்சில் கிச்சடி அருமை மேடம்!

asiya omar said...

அப்துல் காதர் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

ஜெய்லானி said...

கெட்டி சட்னியுடன் நல்லா இருக்கும்ன்னு தோனுது!!! :-)

asiya omar said...

ஜெய்லானி கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.தெரியாமல் போச்சே ! கெட்டி சட்னி வைத்திருப்பேனே.

Geetha Achal said...

ரொம்ப அருமையாக இருக்கின்றது..கலக்கலான சத்துள்ள கிச்சடி...சூப்பர்ப்...

Mrs.Menagasathia said...

நல்லதோரு டயட் சமையல் குறிப்புக்கா..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

ம்..........அருமை

அக்பர் said...

அட! மிக சுவையாக இருக்கும் போல...

ஸ்டார்ஜன்னோடு சேர்ந்து செய்து பார்த்துட வேண்டியதுதான்.

vanathy said...

Akka, super recipe. Very healthy too.

asiya omar said...

கீதா ஆச்சல் பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி.

மேனகா மிக்க நன்றி.

asiya omar said...

உலவு.காம் வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

அக்பர் நீங்க இரண்டு பேரும் செர்ர்ந்து செய்தால் இன்னும் அசத்தலாக இருக்குமே.

asiya omar said...

thank you very much vanathy.

ஸாதிகா said...

ஓட்ஸில் கிச்சடியும் போட ஆரம்பித்தாயிற்றா?பார்க்கவே நன்ராக உள்ளது ஆசியா.

asiya omar said...

நன்றி ஸாதிகா.புதுசாக ஏதாவது ட்ரை பண்ணினால் நான் தான் சாப்பிடனும்,அதனால் எதுவும் ட்ரை பண்ணாமல் எப்பவும் ரெகுலராக சமைப்பதை தான் போடுவது வழக்கம்,இதனை என் மகளும் கணவரும் ரசித்து சாப்பிட்டாங்க,அந்த நூடுல்ஸ் பிரியன் (ஸாஹித்) மாட்டேன்னு சொல்லிட்டான்.

athira said...

இது மிக நல்ல முறையாக இருக்கே ஆசியா. இம்முறையில் ஓட்ஸ் சமைத்தால் நிட்சயம் எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டுவிடுவார்கள். இல்லாவிட்டால் ஓட்ஸ்சை யாரும் விரும்பி உண்பதிலையே.

asiya omar said...

நன்றி அதிரா.செய்து பாருங்க .நிச்சயம் பிடிக்கலாம்.

Riyas said...

ம்ம்ம் செய்து தந்தா சாப்பிடலாம்...

asiya omar said...

ரொம்ப ஈஸி ரியாஸ்.நீங்களே செய்யலாம்.

மகி said...

டேஸ்ட்டி & ஹெல்த்தி கிச்சடி!

asiya omar said...

நன்றி மகி.

srividhya Ravikumar said...

Super yummy recipe.. visit my site whenever pls.. following you..

asiya omar said...

thanks for your vist,sure with pleasure.please give your site address.

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரமிருக்கும்போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_21.html