Sunday, June 6, 2010

பிஞ்சு கத்திரிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் ;

பிஞ்சு கத்திரிக்காய் - 400 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - ஒன்று (பெரியது)
பச்சை மிள்காய் - 4
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
மல்லி கருவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு - தேவைக்கு

வெங்காயம்,பூண்டு,மிள்காய் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
கத்திரிக்காயையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

எண்ணெய் வாணலியில் விட்டு காய்ந்ததும்,கடுகு உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும்,கருவேப்பிலை போடவும்.

நறுக்கிய வெங்காயம் ,பூண்டு ,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பூண்டு மிளகாய் சிறிது வதங்கியதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்,வதங்கியதும் மஞ்சள்,சீரகம்,உப்பு தூள் போட்டு பிரட்டி தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து மூடி விடவும்.


மூடி அடுப்பை சிம்மில் வைத்தால் கத்திரிக்காய் நல்ல வெந்து விடும்.

விரும்பினால் தேங்காய் துருவல் சிறிது போட்டு பின்பு மல்லி இலை தூவி, உப்பு சரிபார்த்து பிரட்டி இறக்கவும்.

சுவையான பிஞ்சு கத்திரிக்காய் பொரியல் ரெடி.

இதனை சாதம்,குபூஸ்,சப்பாத்தியுடன் கூட சாப்பிடலாம்.நான் இங்கு ப்ரவுன் குபூஸுடன் பரிமாறியுள்ளேன்.
--ஆசியா உமர்.

25 comments:

LK said...

எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று.

Kousalya said...

எனக்கும் பிடித்தமான ஒன்றுதான். சுவை அருமை தோழி

Aruna Manikandan said...

hmmm... delicious poriyal

ஸாதிகா said...

நான் இதில் எண்ணெய்க்கு பதிலாக நெய்விட்டு,சிறிது தேங்காய்ப்பால் விட்ட்டும் சமைப்போம்.

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி எல்.கே.

கருத்திற்கு மிக்க நன்றி கௌசல்யா.

asiya omar said...

thanks aruna.

asiya omar said...

ஸாதிகா தேங்காய்ப்பால் விட்டு செய்தால் சூப்பராக இருக்குமே.

அக்பர் said...

குப்பூஸ் கூட சாப்பிடலாமா. அப்ப கண்டிப்பா செய்யணுமே.

இளம் தூயவன் said...

அருமை.................

எம் அப்துல் காதர் said...

//நான் இதில் எண்ணெய்க்கு பதிலாக நெய்விட்டு,சிறிது தேங்காய்ப்பால் விட்ட்டும் சமைப்போம்//

//ஸாதிகா தேங்காய்ப்பால் விட்டு செய்தால் சூப்பராக இருக்குமே//

ஆஹா இதுல இதுவேறயா.. அசத்துங்க சகோதரிகளா! மொத்தத்தில் எங்களுக்கு வெயிட் போடாம இருந்தா சரி தான்!

asiya omar said...

அக்பர் செய்து பாருங்க,உங்களுக்கு பிடிக்கணுமே.

asiya omar said...

அப்துல் காதர் வருகைக்கு மகிழ்ச்சி.கவலைப்படாதீங்க.அளவாக சாப்பிட்டால் எல்லாம் சாப்பிடலாம்.

asiya omar said...

இளம் தூயவன் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

ஜெய்லானி said...

நல்ல வேளை , பீ டி கத்திரிகாயின்னு படிச்சிட்டு ஒரே நடுக்கமா இருக்கு ...

Riyas said...

சமைத்து அசத்துறிங்க.. அக்கா... நல்லாயிருக்கு

Mrs.Menagasathia said...

ம்ம்ம் சூப்பர்ர்ர் எனக்கு பிடித்த பொரியல் இது....

asiya omar said...

ஜெய்லானி நல்லா பார்த்தீங்களா?பிஞ்சு தானே போட்டு இருக்கேன்,நான் வெரைட்டி தெரியாம வாங்க மாட்டேனே !

asiya omar said...

ரியாஸ் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

மேனகா ம்ம்ம் ,உங்களுக்கு பிடித்ததா?எனக்கும் பிடிக்கும்.

Geetha Achal said...

சூப்பர்ப்...மிகவும் அருமை...

vanathy said...

அக்கா, சூப்பர் ரெசிப்பி. அழகான படங்கள்.

Malar Gandhi said...

I love the idea of lots of onion int his dish, looks so yumm, gonna hop into next flight and knock ur door:):)

asiya omar said...

கீதா ஆச்சல் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

வானதி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

மலர் காந்தி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

மகி said...

பூண்டு,சீரகம் இதுவரை சேர்த்ததில்லை..பொரியல் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு!

asiya omar said...

வருகைக்கு மகிழ்ச்சி.செய்து பார்த்து பிடிச்சிருக்கான்னு பாருங்க மகி.