Monday, June 7, 2010

ஐடியா புளியோதரை

ரொம்ப ஈசி,எல்லாரும் செய்து அசத்துங்க.


தேவையான பொருட்கள்;

வடித்த சாதம் - 200 கிராம் அரிசியில்

புளி - எலுமிச்சை அளவு

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

இட்லிப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு,உளுத்தம்பருப்பு - தலா அரைஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2

கருவேப்பிலை - 2 இணுக்கு

உப்பு - சிறிது

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உளுத்தம்பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.




கரைத்து வைத்த புளிக்கரைசலை தாளித்ததில் விடவும்.
புளிக்கரைசல் விட்டவுடன் இட்லி மிள்காய்பொடி சேர்க்கவும்.

நன்கு கொதிவந்து வற்ற விடவும்.


எண்ணெய் வெளியே வரவும் வடித்து ஆறிய சாதம் போட்டு கிளறவும்.


சாதம் போட்டு கிளறி குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.


சுவையான ஐடியா புளியோதரை ரெடி.


குறிப்பு : இருப்பதை வைத்து அவசரத்திற்கு இப்படி கட்டுசாதம் செய்து அசத்தலாம்.இட்லி பொடி ருசியாக இருந்தால் சாதம் சூப்பராக வரும்.ஒரு நாள் முழுவதும் கெட்டுப்போகாமல் இருக்கும்.விரும்பினால் கால்ஸ்பூன் மஞ்சள் தூள்,தாளிக்கும் பொழுது ஒரு ஸ்பூன் கடலை பருப்பு ,வேர்க்கடலை சேர்த்து கொள்ளவும்.இட்லி பொடி,சாதத்தில் உப்பு இருக்கும். உப்பு அளவாக போடவும்.தொட்டுக்கொள்ள சிப்ஸ் ,புதினா துவையல் கூட அருமையாக இருக்கும்.


---ஆசியா உமர்.

42 comments:

LK said...

we do this during saturday

நாஸியா said...

Wow! Mouth watering. will try this sometime insha Allah

கே.ஆர்.பி.செந்தில் said...

புளியோதரை பதிவு என் மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது

Kousalya said...

பெயர் புதிதாக வித்தியாசமாக வைக்கிறீர்கள்! உங்கள் ஐடியா சூப்பர்!!

Chitra said...

good idea. :-)

மங்குனி அமைச்சர் said...

வடித்த சாதம் - 200 கிராம் அரிசியில்///

குக்கர்ல எப்படி மேடம் வடிக்கிறது ?

///புளி - எலுமிச்சை அளவு///

என்னா சைஸ் எலுமிச்சை மேடம் ?

//எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்///

மேடம் எங்க வீட்ல ரெண்டு டேப்ளே ஸ்பூன் தான் இருக்கு ? இப்ப என்னா செய்றது ?

//இட்லிப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்///

பொடி போக மீதமுள்ள இட்லியை என்னா செய்றது மேடம் ?

///கடுகு,உளுத்தம்பருப்பு - தலா அரைஸ்பூன்///

எங்க வீட்டுல எல்லாமே முழு ஸ்பூன் இருக்கு மேடம்

asiya omar said...

thanks for your frequent comments l.k.

asiya omar said...

thanks nazia for your loving comments.

asiya omar said...

நன்றி கே.ஆர்.பி.செய்த பின்பு பின்னூட்டம் சொல்லுங்க.

asiya omar said...

நன்றி கௌசல்யா,அவசரத்திற்கு நிறைய ஐடியா சமையல் செய்வேன்,இருப்பதை வைத்து,அன்று எல்லாரும் நல்ல சாப்பிடுவாங்க.

asiya omar said...

welcome back.thanks chitra.

asiya omar said...

அய்யோ ஆண்டவா ! அமைச்சருக்கு ஆணி புடுங்கிற வேலை இல்லையா?

மங்குனி அமைச்சர் said...

asiya omar said...

அய்யோ ஆண்டவா ! அமைச்சருக்கு ஆணி புடுங்கிற வேலை இல்லையா?///


மேடம் , மிஸ்டர் .ஆண்டவர்தான் , இந்த டவுட் எல்லாம் கேட்க சொன்னார்

Jaleela Kamal said...

புளி சாதம் என்னை தவிர யாருக்கும் பிடிகாது. எனக்கு ரொமப் பிடிக்கும் அபப் அபப் தேவைக்கு எல்லா வருத்து திரித்து செய்வதற்கு பதில் இப்படி இட்லி பொடிய சேர்த்து செய்துக்கலாம் போல

ஐடியா அருமை.,

Kousalya said...

பின்னூட்டத்திலும் அமைச்சர் கலக்குகிறாரே! சூப்பர்...!

ஸாதிகா said...

//
குறிப்பு : இருப்பதை வைத்து அவசரத்திற்கு இப்படி கட்டுசாதம் செய்து அசத்தலாம்//அதுதான் இதற்கு ஐடியா புளிசாதமா?இட்லிப்பொடி சேர்த்து செய்தால் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

எம் அப்துல் காதர் said...

ஆஹா இன்னைக்கு மங்குனி அமைச்சர் ஆஜரா. கலை கட்டிடும். பதிவு நன்றாக இருக்கு மேடம்! இங்கே வந்து பார்த்துட்டு போங்க! எல்லோருக்கும் அறிமுகபடுதுங்க..

http://mabdulkhader.blogspot.com/

Geetha Achal said...

சூப்பர்ப் புளியோதரை...அருமை.அம்மா சில சமயம் இப்படி செய்வாங்க...எனக்கு புளிசாதம் என்றால் மிகவும் விருப்பம்...சூப்பர்ப் குறிப்பு...

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
asiya omar said...

ஜலீலா எப்பவாவது இப்படி செய்து பார்க்கலாம்,நல்லா தான் இருக்கும்.

asiya omar said...

கௌசல்யா வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஸாதிகா,இது மாதிரி ஐடியா சமையல் நிறைய செய்வேன், உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலையே.

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
asiya omar said...

அப்துல் காதர் உங்கள் தளத்தை பார்வையிட்டேன்,நல்லாயிருக்கு.

Mrs.Menagasathia said...

தலைப்பு சூப்பராயிருக்கு.இட்லிபொடி புளிசாதம் வித்தியாசா இருக்கு.டேஸ்ட்டும் சூப்பராகதானிருக்கும் என்று நினைக்கிறேன்...செய்து பார்க்கனும்..

Aruna Manikandan said...

using idli powder sounds interesting!!!
Thx. for sharing :-)

asiya omar said...

கீதா ஆச்சல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

மேனகா வருகைக்கு மகிழ்ச்சி.செய்து பார்க்கவும்.

asiya omar said...

thanks for your comments aruna.

asiya omar said...

ஜெய்லானி கருத்திற்கு மகிழ்ச்சி.

Umm Mymoonah said...

Never tried Puliyodarai with idli podi, nice recipe, thank you for sharing, following you:-)

asiya omar said...

umm mymoonah thanks for your first visit and comments.

athira said...

ஆசியா புளியோதரை சூப்பர்... நாளைக்கே செய்திடுவேன்.

ஜலீலாக்கா உங்களுக்கும் பிடிக்குமா? ஆ... எனக்கும் ரொம்பப் பிடிக்கும்....

பி.கு:
ஆசியா..... குறிப்புக்கொடுத்தால், அதில் கேட்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பது கொடுத்தவரின் கடமை:), அந்த முறையில் எம்பியின் கேள்விகளுக்கும் உடனடிப் பதிலை எதிர்பார்க்கிறேன்... ஏனெனில் எனக்கும் அதே டவுட் உண்டு:)... மீ எஸ்ஸ்ஸ்ஸ்

மகி said...

புளி சாதத்தில் இட்லிப் பொடியா? புதுசா இருக்கு ஆசியாக்கா..ட்ரை பண்ணிப்பார்க்கிறேன்.

asiya omar said...

அதிரா வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்ச்சி.அமைச்சர் ஏதோ கேலியாக கேட்கிறார் என்று நினைத்தேன்,
அதிரா உங்களுக்குமா சந்தேகம்?
சரி விபரமாகவே சொல்கிறேன்.
குக்கரில் பொங்கி எடுத்த சாதம் என்றாலும் சரிதான்,உங்கள் விருப்பம்.
சிறிய எலுமிச்சை அளவு,புளிப்புத்தன்மையை பொருத்து.
இந்த ஸ்பூன் விளக்கம் தான் எப்படி சொல்வது?

asiya omar said...

மகி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.செய்து பார்க்கவும்.

kavisiva said...

எப்படி ஆசியா இப்படீல்லாம்... ! உங்க இட்லிபொடி ஐடியா சூப்பர். இந்தவாரம் செய்துட்டு நல்லாயிருக்குன்னு திரும்பவும் வந்து பின்னூட்டிடறேன் :)

vanathy said...

ஆசியா அக்கா, நல்லாயிருக்கு. நல்ல தலைப்பு. என் கணவருக்கு புளிச்சாதம் ஆகவே ஆகாது. நான் தான் எப்பாவது செய்து சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு செய்து பார்த்திட வேண்டியது தான்.

asiya omar said...

கவி சிவா வாங்க,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

வானதி வருகைக்கு மகிழ்ச்சி.செய்து பார்க்கவும்.

athira said...

ஆசியா, இட்லிப்பொடி சேர்க்காமல் கறிப்பவுடர்(எங்களது) சேர்த்துச் செய்திட்டேன் சூப்பராக வந்தது.

நான் முன்பு பகிடியாகத்தான் கேட்டேன் ஆசியா, குறிப்பிலே விளக்கமாகக் கொடுத்திருக்கிறீங்களே... மிக்க நன்றி பதிலுக்கு.

asiya omar said...

வருகைக்கு நன்றி அதிரா.மகிழ்ச்சி.