Wednesday, June 9, 2010

கோதுமை மாவு புட்டு / Wheat Flour Puttu


தரமான கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் - முக்கால் கப்
உப்பு - தேவைக்கு
தேங்காய் துருவல் - பாதி தேங்காயில்

மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.தண்ணீர்,உப்பு போட்டு கையால் உதிரியாக கிளறவும்.கால் மணி நேரம் வைக்கவும்.


மிக்ஸி பெரிய ஜாரில் இரண்டு முறையாக பல்ஸில் 4 சுற்று போட்டு உதிரியாக எடுக்கவும்.அதனுடன் தேங்காய்ப்பூ சேர்த்து மிக்ஸ் செய்யவும்.புட்டுகுழலில் சிறிது நெய் தடவி மாவை முக்கால் அளவு போட்டு மூடவும்.

அதனை அவித்து மணம் வரவும்,(சுமார் 5 -10 நிமிடம்) கழித்து எடுக்கவும்.சுவையான கோதுமை மாவு புட்டு ரெடி.இதனை சர்க்கரை நோயாளிகள்  பச்சைபயறு கறியுடன் அல்லது கடலை கறியுடன் பரிமாறலாம்.மற்றும் அனைவரும் வாழைப்பழம் பால்,சீனி போட்டும் சாப்பிடலாம்.ஆரோக்கியமான உணவாகும்.பக்குவமாக மாவை விரவி அவித்து எடுப்பதில் தான் அதன் சுவையே இருக்கிறது.
விருப்பப்பட்டால் லேசாக வறுத்துக் கொண்டு தண்ணீர் சேர்த்து விரவியும் அவிக்கலாம். நான் வறுக்காமல் தான் செய்தேன்.சூப்பராக வந்தது.

--ஆசியா உமர்.


45 comments:

LK said...

arumai aasiyaa

மாதேவி said...

நல்ல கோதுமைப் புட்டு.

இலங்கையருக்கு மிகவும் பிடித்த உணவு இது.

அரிசி,குரக்கன்,மைதா,ஆட்டா மாவுகளிலும் செய்துகொள்வார்கள்.

asiya omar said...

thanks l.k.

asiya omar said...

மாதேவி உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.உங்கள் தளம் அருமையாக உள்ளது.

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு ... பார்கும் போதே சாப்பிட தூண்டுது.

soundar said...

நல்ல கோதுமை புட்டு

Chitra said...

பாக்கவே சூப்பரா இருக்குதே......!!!

asiya omar said...

சாருஸ்ரீ வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சித்ரா கருத்திற்கு மகிழ்ச்சி.உங்க போட்டோ நல்லாயிருக்கு.

asiya omar said...

நன்றி சௌந்தர்.

Anonymous said...

நல்லாருக்கு ஆசிய ஜி எனக்கு இது ரொம்ப பிடிக்கும் சில சமயங்களில் கட்டி கட்டிய வரது .நீங்க சொன்ன மாதிரி பண்ணி பார்க்கறேன் நன்றி .

கோதுமை மாவு என்று சொன்னிங்களே சப்பாத்தி செய்யற மாவு தானே ?இல்லே புட்டுக்கென்று தனியா மாவு இருக்கா?

இளம் தூயவன் said...

புட்டு என்ற உணவு இன்று கேரளா மக்களிடம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கடலோர பகுதியில் வசிக்கும் பக்களிடமும் இந்த உணவு பழக்கம் உள்ளது. செய்முறை நன்றாக உள்ளது சகோதரி.

asiya omar said...

சந்தியா வருகைக்கு மகிழ்ச்சி.சப்பாத்தி செய்கிற மாவே தான்.செய்து பாருங்க.

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி.நான் ஆசிரியையாக அபுதாபியில் உள்ள ஒரு பள்ளியில் வேலை பார்த்த சமயம் சக கேரள ஆசிரியை சொல்லி தந்தது தான் இந்த ரெசிபி.

♠புதுவை சிவா♠ said...

''மிக்ஸி பெரிய ஜாரில் இரண்டு முறையாக பல்ஸில் 4 சுற்று போட்டு உதிரியாக எடுக்கவும்.''

''பல்ஸில் 4 சுற்று '' என்றால் மிக்ஸின் அறைக்கும் வேகமா? அல்லது வேறு ஏதாவதா புரியவில்லை தயவு செய்து விளக்கம் தரவும்.

நன்றி

Aruna Manikandan said...

looks healthy and delicious dear:-)

Riyas said...

ஐ.. புட்டும் பழமும்..

asiya omar said...

thanks for your loving comments aruna.

asiya omar said...

நன்றி ரியாஸ்.

asiya omar said...

புதுவை சிவா உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.பல்ஸ் என்பது மிக்ஸி ஸ்விட்சில் வேகம் 1 2 3 என்று இருக்குமில்லையா அந்தப்பக்கம் திருப்பாமல்,பின்(மறு)பக்கம் திருப்பி திருப்பி ஸ்விட்சை எடுக்க வேண்டும்,அவ்வளவு தான்.

ஸாதிகா said...

கோதுமைமாவு பசைத்தன்மை உள்ளதாயிற்றே.நீரில் பிசைந்தால் எப்படி உதிரியாக வரும்.மாவை நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து அப்புறம் நீர் கலந்து பிசிற வேண்டுமா?விபரம் தாருங்கள் ஆசியா.

அஹமது இர்ஷாத் said...

புட்டு என்றவுடன் பசி'யைவிட ஞாபகம் வந்தது 'மா'னாதான்...

எனிவே நல்ல உணவு வகை அருமை.

asiya omar said...

ஸாதிகா,நான் மாவை பிசைய சொல்லவில்லை,தண்ணீரை தேவைக்கு தெளித்து விரவ (கையால் கிளற வேண்டும்)விரவிய மாவை பார்த்தால் படம் இரண்டில் தெரியும்,அதனை கால் மணி நேரம் வைத்து மிக்சியில் போட்டு எடுத்தால் பூந்துருவலாய் வரும்,அதன்பின்பு தேங்காய்ப்பூ கலந்து அதனை அவிக்க வேண்டும்.அவ்வளவே.

♠புதுவை சிவா♠ said...

என் சந்தேகத்துக்கு விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி ஆசியா.

asiya omar said...

அஹமது இர்ஷாத் வருகைக்கு மகிழ்ச்சி.

Mrs.Menagasathia said...

வாவ்வ் அருமையாக இருக்கு,இதுவரை கோதுமையில் புட்டு செய்ததில்லை...

jagadeesh said...

globe jamun கொஞ்சம் பெரிதாகவும் இருக்க வேண்டும், நல்ல கலராகவும் இருக்கவேண்டும், கொஞ்சம் செய்து காட்டுங்கள்.

asiya omar said...

ஜெகதீஸ் குலோப் ஜாமுன் இன்ஸ்டண்ட் மிக்ஸ் பாக்கெட் வாங்கி அதில் விளக்கிய செய்முறைப்படி மாவு தயார் செய்து சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து ஜீராவில் போட்டு எடுத்தால் ரெடி.

vanathy said...

அக்கா, எனக்கு மிகவும் பிடித்த உணவு. முன்பெல்லாம் அடிக்கடி செய்வேன். இப்ப செய்வது குறைவு. அருமையாக இருக்கு.

Geetha Achal said...

அருமையான சத்தான புட்டு...அழகாக செய்து காட்டி இருக்கின்றிங்க...இப்பவே பசி எடுக்குதே...அருமை...

மகி said...

சூப்பரா இருக்கு ஆசியாக்கா! குழாப்புட்டெல்லாம் சாப்பிட்டு பல வருஷமாச்சு!

asiya omar said...

வானதி .கீதா ஆச்சல்,மகி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

athira said...

இன்று இதே குழல்புட்டுத்தான் நானும் அவித்தேன் சூப்பர்.

asiya omar said...

அதிரா கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கு.நன்றி.

thenammailakshmanan said...

புட்டு சூப்பர்.. அனுப்புங்க ஆசியா சாப்பிடணும்போல இருக்கு

asiya omar said...

தேனக்கா,வந்திருப்பது நீங்க தானா? பிரபலங்கள் வருகை தரும் பொழுது புத்துணர்ச்சி ஏற்படுகிறது.உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.புட்டு தானே அனுப்பிவிட்டால் ஆச்சு.

சுகந்தி said...

நல்லா இருக்குதுங்க புட்டு.

asiya omar said...

நன்றி சுகந்தி.

Jaleela Kamal said...

ஆசியா கோதுமை மாவில் புட்டு இது வரை செய்தத்ல்லை.

டேஸ்ட் எப்படி இருக்கும்,

goma said...

புட்டு செய்ற ரகசியத்தைப் புட்டு புட்டு வச்சிட்டீங்க......நன்றி

asiya omar said...

goma வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஜலீலா புட்டு சூப்பராக இருக்கும்.செய்து பாருங்க.

ராதா ராணி said...

கோதுமை மாவில் புட்டு இதுவரை செய்ததில்லை..இனி செய்து பார்க்கணும்..

Suchi Sm said...

its yummy madam.. we do in rice, ragi, wheat, corn too:) it looks delicious

Vikis Kitchen said...

Superb puttu akka. Tasted it in one of my friend's home. Looks delicious.