Thursday, June 10, 2010

சிம்பிள் சன்னா மசாலா
ஈசியாக செய்யக்கூடிய இந்த சன்னா மசாலா ருசியில் அபாரமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் ;
கொண்டைக்கடலை - கால் கிலோ
சன்னாமசாலா - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
பச்சை மிள்காய் - 4
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு

கொண்டைக்கடலையை சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் முழுவதும் போட்டு நன்கு வதக்கி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.சிறிது அடுப்பை சிம்மில் வைக்கவும்.


பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசிய விடவும்.

தக்காளி வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்ந்து கூட்டு போல் ஆனதும் வேகவைத்த சன்னாவை சேர்த்து பின்பு சன்னா மசாலா பொடியை சேர்த்து கிளறி ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.


சுவையாக சிம்பிளாக செய்த சன்னா மசாலா ரெடி.மல்லி இலை தூவி பரிமாறவும்.,பேச்சிலர்ஸ் இது மாதிரி ஈசியாக செய்து ருசியாக சாப்பிடலாம்.

இந்த சிம்பிள் சன்னா மசாலா பூரி,சப்பாத்தி,பரோட்டா,நாண்,ரொட்டியுடன் சுவையாக இருக்கும்.

-ஆசியா உமர்.
இந்த ரெசிப்பியை நிதுபாலாவின் சிக்பீஸ் இவெண்டுக்கு அனுப்புகிறேன்.

39 comments:

LK said...

arumai sagothari

மங்குனி அமைச்சர் said...

5 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
/////


அட போங்க மேடம் நீங்க சொன்னத நம்பி நானு அஞ்சு விசில் அடிச்சேன் , பக்கத்து வீட்டு பொண்ணு போலீசுல கம்ளைன்ட் குடுத்திருச்சு , (நான் உங்க பேர தான் சொல்லிருக்கேன் ) ...................... (அப்புறம் லாஸ்ட்டு பதிவுல எனக்கு பதில் சொன்ன உங்க பதிலா அளிச்சிட்டிக , எனி பிராபளம் , சும்மா சொல்லிருங்க மேடம், நோ, பிராபளம் , என் மெயில் ஐடி : yasinshaji@gmail.com , என்னா ஒரு நல்ல பிரண்டு மிஸ்சாகும்??? ) தப்பிருந்தா சாரி !!!

asiya omar said...

எல்.கே கருத்திற்கு நன்றி.

asiya omar said...

அமைச்சரே சிலசமயம் நான் கொடுத்த கமெண்ட் எனக்கு பிடிக்கலைன்னால் டெலீட் செய்வேன் அவ்வளவே.இதில் எனக்கு எந்த தவறும் இருப்பதாக தெரியலை.

இளம் தூயவன் said...

பரோட்டா சப்பாத்தி யோடு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இது வட இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் அதிகமா சேர்த்து கொள்வார்கள். அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு டிரை பண்ணி பார்கிறேன் இந்த மெத்தட்ல

Geetha Achal said...

சூப்பர்ப் சன்னா மசாலா...

Kousalya said...

இந்த அமைச்சர் பின்னூட்டத்தையும் சும்மா விட்டுவைப்பது இல்லையே ? தோழி உங்க சமையல் simply super..!!

Mrs.Menagasathia said...

மிகவும் ஈஸியாக இருக்கு...அருமை!!

மங்குனி அமைச்சர் said...

asiya omar said...

அமைச்சரே சிலசமயம் நான் கொடுத்த கமெண்ட் எனக்கு பிடிக்கலைன்னால் டெலீட் செய்வேன் அவ்வளவே.இதில் எனக்கு எந்த தவறும் இருப்பதாக தெரியலை.////
ஓகே , ஓகே டபுள் ஓகே மேடம், தேங்க்ஸ்

jagadeesh said...

அருமை, எங்க அம்மா சப்பாத்தி செஞ்சா அப்பளம் மாறி ஆய்டுது, யாரவது மேல எடுத்து வீசினா அடி பட்டிடும், எப்படி சாப்டா பண்றது?. கொஞ்சம் சொல்லி என்னை காப்பாத்துங்க.

Anonymous said...

சூப்பர் சன்னா கூடவே bathura இருந்தா ஜாலியோ ஜாலி தான்

ஸாதிகா said...

ஈஸியாக சன்னா செய்முறை தந்துள்ளீர்கள் தோழி.

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

சாருஸ்ரீ,கௌசல்யா,கீதா ஆச்சல்,மேனகா
உங்களின் வருகை,கருத்து எனக்கு எப்பவும் மகிழ்வைத் தருகிறது.நன்றி.

asiya omar said...

மங்குனி அமைச்சர் புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெகதீஸ் சப்பாத்தி தானே என் முறைப்படி செய்து காட்டிட்டா போச்சு.
இப்ப வீகெண்ட் பிஸி.

asiya omar said...

சந்தியா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

தோழி ஸாதிகா நலமா? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Pmt said...

எல்லாம் சரி எந்த சன்னா மசாலான்னு சொல்லாலேயே Shan மசாலா வங்கி முயற்சி செய்து பார்த்தேன் அதோட வாசனை பிடிக்கலை வேறு மசாலா வாங்கி முயற்சி செய்து பார்க்கணும்.

Chitra said...

simple and tasty. :-)

நம்ம ஊர்ப்பக்கம் கிடைக்கும் மட்டன் சுக்கா (dry) வறுவல் ரெசிபி ப்ளீஸ்.....

மனோ சாமிநாதன் said...

சன்னா மசாலா ரொம்பவும் நன்றாக இருக்கிறது ஆஸியா!

asiya omar said...

pmt உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.நான் வெரைட்டியாக ட்ரை பண்ணுவேன்,இந்த தடவை வாங்கியது அக்ரி கோல்டு சன்னா மசாலா.

asiya omar said...

மனோ அக்கா நலமா?உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

நிச்சயம் சித்ரா மட்டன் சுக்கா தானே ,போட்டுவிட்டால் போச்சு.சில நாட்கள் முன்பு வீட்டில் பார்ட்டிக்காக செய்தேன், நேரம் கிடைக்காததால் போட்டோ எடுக்கலை,உங்களுக்காக செய்து விட்டால் போச்சு.

Mahi said...

ஆசியாக்கா,டெம்ப்ளேட் மாத்திட்டீங்க..அழகா இருக்கு இந்த கலர்.
சன்னா மசாலா சூப்பர்!

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஆசியா உமர் நேரம் கிடைத்தால் செய்து பார்க்கிறேன். நன்றி.

பி.கு: 15 டிசம்பர் 2008 இல் ஆரம்பித்த சமையல் 15 ஜுன் 2010 இல் முடிந்து விட்டது இனி சமையல் இல்லை...:) No more cooking...

vanathy said...

akka, my son's favorite dish. I will try this very soon. Nice one.

Riyas said...

படத்த பார்க்கும் போதே பசியெடுக்குதே..

asiya omar said...

மகி மிக்க நன்றி,இந்த கலர் தான் எப்பவும் எது வாங்கினாலும் அமையும் எனக்கு....i love both colours.

asiya omar said...

சகோ.ஹைஷ் சில நாள் கழித்து வந்தாலும் பெரும் மகிழ்ச்சி.நீங்கள்
என் குறிப்பை பார்த்து செய்து அனுப்பிய முருங்கைக்காய்ப்பொரியலை இணைத்து விட்டேன்,அதுவே எனக்கு கிடைத்த பெரிய விருது.

asiya omar said...

வானதி மிக்க நன்றி.

asiya omar said...

ரியாஸ் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

சன்னா மசாலா அருமை! டெம்ப்ளேட் மாத்திட்டீங்க, நல்லா இருக்கு, அனால் கலர் கண்ணுக்கு குளிர்ச்சியா இல்லை. இதுக்கு மேல ஒரு கோட்டிங் அடித்தால் நல்ல இருக்குமோ? இது என் சஜஷன் தான். கண்டிஷன் அல்ல.

asiya omar said...

அப்துல் காதர் கருத்திற்கு மகிழ்ச்சி.இன்னும் நல்லதாக செலக்ட் பண்ணலாம்,என் மகளுக்கும் பிடித்ததால் இந்த ப்ரைட் கலர் செலக்ட் செய்தேன்.

Jaleela Kamal said...

சிம்பிள் சென்னா மசாலா ரொம்ப ஈசியாகவே இருக்கு.

vannila said...

super madam...........

asiya omar said...

நன்றி ஜலீலா.

asiya omar said...

thanks vannila.