Saturday, June 12, 2010

ட்ரை மட்டன் சுக்கா


தேவையான பொருட்கள் ;
மட்டன் - முக்கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒன்னரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரைஸ்பூன்
தயிர் -1 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் - கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
மிள்குத்தூள் - முக்கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - முக்கால் ஸ்பூன்
சீரகத்த்தூள் - முக்கால் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2 பெரியது
மிளகாய் - 2
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு

மட்டனை சுத்தம் செய்து கழுவி சுமார் அரைமணி நேரம் தண்ணீர் வடிகெட்டவும்.
குக்கரில் மட்டன்,இஞ்சி பூண்டு விழுது,கரம்மசாலா,மஞ்சள் தூள்,உப்பு,தயிர் சேர்த்து கலந்து வைத்து மூடி 5 விசில் விசில் வைத்து சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

மட்டனில் இப்படி தண்ணீர் சேர்க்காவிட்டாலும் ஊறி இருக்கும்.


ஊறிய தண்ணீரை வற்ற வைக்கவும்.



கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்.


வதக்கிய வெங்காயத்துடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.

மட்டனுடன் அனைத்து மசாலாவும் சேர்த்து விடவும்.



மசாலாவை மட்டனுடன் சேர்த்து பிரட்டிவிடவும்.

சிறிது தண்ணீர் தெளித்து சிம்மில் மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.

மூடியை திறந்து கட் செய்த மல்லி இலை தூவவும்.

சுவையான ட்ரை மட்டன் சுக்கா ரெடி.இதனை ப்லைன் ரைஸ், வெரைட்டி ரைஸ்,பிரியாணி,ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.

--ஆசியா உமர்.
குறிப்பு : சித்ரா நீங்கள் இந்த ரெசிப்பி நேற்று கேட்டமையால் இன்று செய்தாச்சு.உங்க டேஸ்டுக்கு மசாலா மாற்றி கூட போட்டு இந்த முறையில் செய்யலாம்.

18 comments:

LK said...

good evening. enakkup pidikaathu irunthaalum comment pottachu and voteum pottachu

asiya omar said...

good evening l.k. thanks a lot.

Cool Lassi(e) said...

Arumai-yaana post Asiya! I like mutton a lot!

இளம் தூயவன் said...

அருமையான செய்முறை வாழ்த்துக்கள் சகோதரி.

Mrs.Menagasathia said...

பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுதே...செய்துட வேண்டியது தான்...

asiya omar said...

Cool Lassie thanks for your visit & comments.

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மேன்கா செய்து பாருங்க,கருத்திற்கு மகிழ்ச்சி.

Riyas said...

ஐ,,, மட்டன் சுக்கா ஒரு கட்டு கட்டலாம்..

Jaleela Kamal said...

மட்டன் சுக்கா நல்ல இருக்கு

vannila said...

ட்ரை பண்ணிட்டேன் மேடம்
சூப்பர் ..........வாழ்த்துக்கள் ...............

asiya omar said...

ரியாஸ் வாங்க கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

vannilla செய்து பார்த்து சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா said...

அருமையான சுக்கா.இப்படி டிரை நான் வெஜ் வகைகள் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.

asiya omar said...

ஸாதிக்கா கருத்திற்கு மகிழ்ச்சி.

Chitra said...

இன்னும் படங்கள் பார்த்து "ஜொள்ளி" கிட்டு இருக்கேன்...... இன்று செய்து விடுகிறேன். நான் கேட்டதும் ரெசிபி கொடுத்து அசத்தியதற்கு ரொம்ப நன்றிங்க...... !

asiya omar said...

நன்றி சித்ரா,இன்னும் கறிமசாலா,கரம்மசாலான்னு போட்டு செய்யலாம்,கொஞ்சம் மைல்டாக இருந்தால் தான் எங்க வீட்டில் பிடிக்கும்.