Sunday, June 13, 2010

கருவாடு தக்காளி & கருவாடு முட்டைதேவையான பொருட்கள் ;

கருவாடு - 50 கிராம்

முட்டை - 2 (விரும்பினால்)

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு சிறிது.

துண்டு கருவாடாக இருந்தால் நன்கு சுத்தம் செய்து கட் செய்து கழுவி எடுக்கவும்,இப்படி சின்னதாக முழுதாக இருந்தால் அடுப்பில் சுடவும்.
தலையை எடுத்து விட்டு தோலை கத்தியால் உரித்து எடுக்கவும்.

கழுவி இப்படி முள் இல்லாமல் பிரித்து வைக்கவும்.


வெங்காயம் தக்காளி,பச்சை மிளகாய் கட் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம்,தக்காளி,மிளகாய் சிறிது உப்பு போட்டு வதக்கவும்,பின்பு மிள்காய்த்தூள் சேர்த்து பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும்.


பின்பு ரெடி செய்த கருவாட்டை சேர்க்கவும்.நன்கு பிரட்டி மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்,சுண்டி வரும்.


சுவையான கருவாடு தக்காளி ரெடி.

ரெடியான கருவாடு தக்காளியுடன் இரண்டு முட்டையை உடைத்து நன்கு கலக்கி விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் கழித்து பிரட்டி விடவும்.


கருவாடு முட்டை தக்காளி சேர்ந்து ரெடியாகி அருமையான சுவையுடன் இருக்கும்.இதனை ப்லைன் ரைஸ்க்கு சைட் டிஷ்சாக பரிமாறலாம்.


குறிப்பு : கருவாட்டிலேயே உப்பு இருக்கும்,தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கவும்.பிடித்தவர்கள் செய்து பாருங்க,இப்படி செய்தால் கருவாடு வாடை இருக்காது,வாய் ருசிக்காத பொழுது இப்படி செய்து சாப்பிடலாம்.

கருவாடு முட்டை ஆணம் ரெசிப்பியைக்காண அறுசுவையை கிளிக் செய்யவும்.

--ஆசியா உமர்.

33 comments:

LK said...

aasathunga aasiyaa varattaa

kavisiva said...

கருவாட்டுடன் முட்டை நல்ல காம்பினேஷன்.
மாசி சம்பல் செய்தேன். ரொம்ப நால்லா இருந்தது ஆசியா நன்றி

Riyas said...

ஐ.. நான் தான் முதல் ஆளா..

கருவாடு எனக்குத்தான்..

கே.ஆர்.பி.செந்தில் said...

சமையல்.. சமையல்
கிச்சன் கில்லாடி ..

Chitra said...

நமக்கு fresh மீன்தான், அக்கா.... மாசியும் நெத்திலியும் ஓகே..... :-)

asiya omar said...

எல்.கே வருகைக்கு மகிழ்ச்சி,உங்களுக்கு இந்த வாடையே ஆகாதுன்னு தெரியும்,என்னோட 9th std - to college வரை உங்களவா பழக்கம் ஜாஸ்தி,அதைப்பற்றி ஒரு இடுகையே இடனும்.

asiya omar said...

கவிசிவா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

வாங்க ரியாஸ்,கருவாடு உங்களுக்கே தான் எடுத்துக்கொள்ளவும்.

asiya omar said...

நன்றி செந்தில்.மகிழ்ச்சி.

asiya omar said...

நன்றி சித்ரா,ஊரில் சந்தையில் வாங்கியதாக உறவினர் கொடுத்தார்,செய்து பார்ப்போமேன்னு செய்தது.நல்லா இருந்தது.

எம் அப்துல் காதர் said...

கருவாடு தக்காளி &
கருவாடு முட்டை,

அருமையான இடுகை மேடம், முட்டை சேர்த்தால் நன்றாக இருக்கும்னு சொல்லிடீங்க,
அதையும் செய்து பார்த்திடுவோம்.

அக்பர் said...

நாங்க காய்ஞ்சு கருவாடா கிடக்கோம். கருவாட்டை காட்டி சாப்பிடுற ஆசையை கிளப்பி விட்டுட்டிங்களே. இங்கும் கிடைக்கும் ஆனால் ஊர் ருசி வராது.

இளம் தூயவன் said...

ஆஹா மணக்குது வாழ்த்துக்கள் சகோதரி.

ஸாதிகா said...

கருவாடில் இப்படியும் செய்யலாமோ?புது அறிமுகத்திற்கு தேங்ஸ் ஆசியா

LK said...

//எல்.கே வருகைக்கு மகிழ்ச்சி,உங்களுக்கு இந்த வாடையே ஆகாதுன்னு தெரியும்,என்னோட 9th std - to college வரை உங்களவா பழக்கம் ஜாஸ்தி,அதைப்பற்றி ஒரு இடுகையே இடனும்.
June 13, 2010 9:30 PM//

podunga. vaadai prachanai illa. naan sapida matten avlothaan..

asiya omar said...

எம்.அப்துல் காதர் கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

ஆமாம் அக்பர் ஊர் ருசி வராது,சீலக்கருவாடு,கடைக்கரும்பு அருமையாக இருக்கும்.இதெல்லாம் அடிக்கடி சாப்பிடுவது இல்லை.எப்பவாவது சாப்பிடலாம்.

asiya omar said...

இளம் தூயவன் கருத்திற்கு நன்றி.

asiya omar said...

ஸாதிகா தோழி செய்து பாருங்க.அருமையாக இருக்கும்.

அஹமது இர்ஷாத் said...

Realy Nice...

vannila said...

ம்...ம்...ம்...நாவில் ஜொள்ளு
கொட்டுது ஆசியா மேடம்
சூப்பர் சீக்கரம் செய்து
பார்க்க வேண்டும்......

asiya omar said...

அஹமது இர்ஷாத் கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

வெண்ணிலா செய்து பாருங்க.வருகைக்கு நன்றி.

angelin said...

superb recipe asiya .indha preparation sambar or paruppu sadhathudan saapida romba nalla irukkum.nan idhuvarai egg serthadhillai .inimel serthu parkiren.

Mrs.Menagasathia said...

வாவ்வ்வ் நாவில் நீர் ஊறுது...இதில் முட்டை சேர்த்து செய்ததில்லை....

asiya omar said...

Thanks angelin and menaga,hope you both like when you try with eggs.

athira said...

Different and good recipe.

asiya omar said...

thanks athira.

vanathy said...

அக்கா, அருமையா இருக்கு. கருவாட்டுக்கு நான் எங்கே போவது? கிடைத்தால் செய்து பார்க்கணும்.

asiya omar said...

வானதி கருத்திற்கு மகிழ்ச்சி.கிடைக்கும் பொழுது செய்து பார்க்கவும்.

Jaleela Kamal said...

இந்த கருவாடு பேரு என்ன

இங்கு கிடைக்குதா.

எனக்கு மட்டும் தான் பிடிக்கும்

பசங்க, ஹஸ் சாப்பிட மாட்டாங்க
( நெத்திலி, கண்டங்கருவாடு, வாளை தான் நான் செய்வது)

தக்காளி முட்டை சேர்த்து புதுசா இருக்கு.செய்யலாம் எல்லோரும் சாப்பிட்டாதானே கருவாடில் புது முரைகள் டிரை பண்னலாம்.

asiya omar said...

ஜலீலா,நான் இதில் உபயோகித்து இருப்பது சாளை(மத்தி) கருவாடு(குத்தைன்னு சொல்வாங்களே)இப்படி சுட்டு தோல் எடுத்து போடும் பொழுது உப்பு அளவாக மணமாக இருக்கு.

Several tips said...

நல்ல சமையல்.