Tuesday, June 15, 2010

முள்ளங்கி பூண்டு சாம்பார்
தேவையான பொருட்கள் ;
முள்ளங்கி - 400 கிராம்
பருப்பு - 200 கிராம்
பூண்டு - முழுதாக 1
வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை மிள்காய் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
மஞ்சள் பொடி - அரைடீஸ்பூன்
பெருங்காயப்பொடி - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால்ஸ்பூன்
சீரகத்தூள் -கால் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - அரைஸ்பூன்
வற்றல் - 2
உப்பு - தேவைக்கு


முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,சீரகம்,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடித்ததும்,நறுக்கிய வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும்.

பருப்பு அரை மணி நேரம் ஊறவைத்து குக்கரில் பருப்புடன்,கால்ஸ்பூன் மஞ்சள் தூள் ,மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து எடுக்கவும்,பருப்பு மலர்ந்தது போல் இருக்க வேண்டும்.

வெங்காயம் பூண்டு வதங்கியதும்,முள்ளங்கி சேர்த்து வதக்கவும்,பின்பு தக்காளி,மிளகாய் சேர்த்து,சிறிது உப்பு சேர்க்கவும் .
பெருங்காயப்பொடி ,கால்ஸ்பூன் மஞ்சல் தூள் சேர்த்து வேக விடவும்.

முள்ளங்கி வெந்ததும் பருப்பு சேர்த்து கொதி வரும் பொழுது பொடி வகைகளை சேர்க்கவும்,கலக்கி விடவும்.
மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.

திறந்து நறுக்கிய மல்லி இலை தூவி ,நெய் சேர்த்து இறக்கவும்.


சுவையான முள்ளங்கி பூண்டு சாம்பார் ரெடி.இதில் பொடி வகைகளை இறுதியில் சேர்த்து,மூடி வைப்பது தான் மணம்,சாம்பார் பொடி இல்லையா இப்படி செய்து அசத்துங்க,சுவைக்கு நான் கேரண்டி.ஃப்ரெஷ் மணத்துடன் இருக்கும்.
--ஆசியா உமர்.

33 comments:

LK said...

//சுவைக்கு நான் கேரண்டி/

how many years????

asiya omar said...

எல்.கே இதனை சமைக்கும் பொழுதெல்லாம்....

Mahi said...

vaav! Superaa irukku asiyaakkaa!

Chitra said...

அப்படியே ரெண்டு மீன் துண்டை உள்ளே போட்டு சமைத்து இருக்கலாம்.....ha,ha,ha,ha,ha...
aduththu non-veg. special thaan!!!

asiya omar said...

மகி கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

அ(ட)ப்பாவி சித்ரா என்னை மீன் விட்டாலும் நீ விடமாட்டே போல் இருக்கே,வாரத்தில் 4 நாள் மீன் தான்,சாம்பாரையாவது நிம்மதியாக சாப்பிடவிடேன்....

LK said...

//அப்படியே ரெண்டு மீன் துண்டை உள்ளே போட்டு சமைத்து இருக்கலாம்.....ha,ha,ha,ha,ha...
aduththu non-veg. special thaan!!!//

grrrrrrrrrrr

Aruna Manikandan said...

My hubby loves Mullangi sambar . I always cook the dal with garlic..
This version sounds new to me..
Thx. for sharing :-)

நாஸியா said...

aahaa mullaingi ennoda fav. insha Allah try panna poren.. easy recipes sister!

asiya omar said...

நன்றி அருணா.சாம்பார், சாதத்திற்கு என்றால் முள்ளங்கி,வெண்டை,சின்ன வெங்காயம் இது மூன்றும் தான் ரொட்டீனில் வரும்.i love these 3 sambaars very much...

asiya omar said...

thanks nazia.

மனோ சாமிநாதன் said...

பூண்டு சேர்த்தது வித்தியாசமாக இருக்கிறது. சுவையும் வித்தியாசப்படுமென நினைக்கிறேன். வழக்கம்போல புகைப்படம் மிக அழகு!

asiya omar said...

மனோ அக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

இளம் தூயவன் said...

சகோதரி நல்ல சாம்பார். வாய்வு நிறைய பிரியும், வாழ்த்துக்கள்.

asiya omar said...

இளம் தூயவன் பூண்டை முள்ளங்கியோட வதக்கி,பருப்பு,பொடி வகைகள் சேர்த்து கொதித்த பின்பு அந்த பூண்டை சாப்பிட்டு பாருங்க,அசந்திடுவீங்க,செமையாக இருக்கும்.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

நன்றி எல்.கே.காலையில் இருந்து தமிலிஷ் சப்மிட் பண்ணமுடியலை,ஏன்னு தெரியலை.சப்மிட் பண்ணியமைக்கு மகிழ்ச்சி.

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு சாம்பார்ல பூண்டு போடுறது புதுசு டிரை பண்ணி பார்கிறேன். போட்டோஸ் எல்லாம் சூப்பர்

Mrs.Menagasathia said...

எனக்கு மிகவும் பிடித்தது...ஆனால் நான் அடிக்கடி இதை செய்வதில்லை,முள்ளங்கி எனக்கு ஆகாது...

vannila said...

ஆசியா அக்கா சீக்கிரம்
உங்க அட்ரஸ் குடுங்க
நான் தினமும் வந்துவிடுகிறேன்,,,

என்னால் வீட்டில் இருக்கமுடியவில்லை,,,
குடுத்துவைத்த கணவன்,பிள்ளை{கள்}..

சூப்பர் சாம்பார் இங்கு வரை மனம்,,,மனம்,,,மனம்....

asiya omar said...

சாருஸ்ரீ கருத்திற்கு மகிழ்ச்சி. சிலர் சாம்பாருக்கு பருப்பு வேகும் பொழுதே பூண்டு சீரகம் மஞ்சப்பொடி போட்டு சேர்ப்பதுண்டு,ட்ரை செய்து பாருங்க.

asiya omar said...

மேனகா முள்ளங்கி பிடிக்காதா? ஆச்சரியாமாக இருக்கு,இளம் முள்ளங்கியாக வாங்கி இப்படி முயற்சி செய்து பாருங்க.

asiya omar said...

வெண்ணிலா,நீங்க யாருன்னு தெரியலையே,வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

ஸாதிகா said...

இந்த வாரம் சாம்பார் வாரமா?ஒரே சாம்பார் மயமாக உள்ளது.சீக்கிரம் மற்ருமொரு அரபி சாப்பாடு ரெஸிப்பி போடுங்கள் ஆசியா.

எம் அப்துல் காதர் said...

முள்ளங்கி பூண்டு சாம்பார் அருமை மேடம்!

//வெண்ணிலா,நீங்க யாருன்னு தெரியலையே//

வேணும்னா சீட்டு குலுக்கி பார்த்திடுவோம். ஒரு வேளை ஐஸ் க்ரீம் பேரா இருக்குமோ?

asiya omar said...

நன்றி ஸாதிகா,போட்டோஸ் எடுத்து வைத்ததை போட்டு வருகிறேன்,இன்ஷா அல்லாஹ் !

asiya omar said...

நன்றி அப்துல் காதர்.

jagadeesh said...

அருமை அக்கா!

vanathy said...

Asiaa akka, super recipe. Very nice photos.

Geetha Achal said...

எனக்கு முள்ளாங்கி சாம்பார் என்றால் மிகவும் பிடிக்கும்...எங்கள் வீட்டிற்கும் வரும் veg.சாப்பிடுவாங்களுக்கு இந்த முள்ளாங்கி சாம்பார் தான் செய்வேன்...மிகவும் சூப்பராக இருக்கும்...எப்பொழுதும் 3 பல் பூண்டினை இந்த சாம்பாருக்கு மட்டும் த்ட்டி போட்டு தாளிப்பேன்...அடுத்த தடவை முழு பூண்டையுமே சேர்த்து செய்துவிடுகிறேன்....

asiya omar said...

நன்றி ஜெகதீஸ்.

நன்றி வானதி.

நன்றி கீதா ஆச்சல்.

Jaleela Kamal said...

ஆசியா முழு பூண்டு போட்டால் , பூண்டு ஸ்மெல் வருமா?

இதுவரை. 4 பல் தான் தட்டி போடுவேன்.

asiya omar said...

ஜலீலா நீங்கள் செய்யும் அளவிற்கு தகுந்தபடி பூண்டை சேர்த்து பாருங்க சூப்பராக இருக்கும்,100 பருப்பு என்றால் பாதி பூண்டு போட்டால் போதும்(8 பல்).பூண்டு அதிகம் உபயோகிப்பதை என் கணவருக்கு சமைத்து கொடுத்த குமார் கிட்ட இருந்து தான் தெரிந்து கொண்டேன்.நாம் காயுடன் சேர்த்து வதக்கும் பொழுது அதன் சுவையே தனி தான்.

இந்திரா said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன்..

நேரமிருந்தால் வருகை தாருங்களேன்..


http://blogintamil.blogspot.com/2011/08/4.html