Tuesday, June 15, 2010

மை பவுல்ஸ்

சமையலில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் பாத்திரம் வாங்குவதிலும் ஆர்வம் இருக்கும்,அப்புறம் பரிமாறுவதிலும் கேட்கவே வேண்டாம் அசத்திடுவாங்க.

எனக்கு இந்த அழகான பாத்திரங்கள் மீது ஒரு க்ரேஸ்ன்னு சொல்லலாம்.இந்த செஸ்சனில் மை பவுல்ஸ்.இந்த பவுல் செட்டில் தினம் லன்ச்க்கு தயார் செய்ததை வைத்து விட்டு சாப்பிட்டவுடன் மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து அப்படியே ஓவனில் வைத்து நைட் சூடு செய்து சாப்பிட வசதியாக இருக்கும்.இந்த செர்விங் பவுல் செட் ஆசைப்படுறாளேன்னு இரக்கப்பட்டு போன வருடம் வாங்கி கொடுத்தது.பாத்திரம் செக்‌ஷன் வந்தவுடன் என் கணவரும் பிள்ளைகளும் என் கடிவாளத்தை பிடித்து இழுத்து செல்வர் ,ஏக்கமாக பார்த்திட்டு போறதோட சரி.அப்பப்ப மாத பலசரக்கு வாங்கும் பொழுது இணைத்து தரும் ஃப்ரீ கிஃப்ட்ஸ் தாங்க இங்க நீங்க அதிகம் பார்க்க போறது.

இது ஆயிலுக்கு ஃப்ரீ.என் கைக்கு கண்ணாடி ,பீங்கான் பாத்திரம் உடையவே உடையாது.

இதுவும் 1999 -னில் வந்தது எதற்கு ஃப்ரீன்னு நினைவு இல்லை,தினமும் நான் உபயோக்கிற பிடித்தமான பவுல்.

இது ஓட்ஸ்க்கு ஃப்ரியாக கிடைத்தது.இதுவும் அன்றாட உபயோகத்தில் உள்ளது.


இது என்னோட பவுல் கூட்டம். எல்லாம் சீப் & பெஸ்ட் தான்.
மை ஆல் டைம் ஃபேவரைட்.ஃப்ரூட்ஸ்,கஸ்டர்ட்,ரைஸ், நூடுல்ஸ் என்று பரிமாறும் அசத்தலான பவுல்.

என்னோட சூப் & டெசர்ட்ஸ் பவுல்ஸ் தான்,அந்த கண்ணாடி பவுல் ஆப்பிள் சேப் எனக்கு மிகவும் பிடித்தமானது.ப்ளூ சதுர கண்ணாடி பவுல் அழகோ அழகு.


இது என்னோட பைரக்ஸ் பவுல்,ஃபுல் சிக்கன் பேக்கிங் செய்ய உபயோகிக்கிறதுண்டு.அதே பேக்கிங் பவுல் தான்.


இது குட் டே பிஸ்கட்டிற்கு ஃப்ரீயாக கிடைத்தது,ட்ரான்ஸ்பேரண்டாக இருக்கிற கண்ணாடி பவுல் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம்.

இதுவும் எனக்கு பிடித்த பவுல் தாங்க . வந்தவங்களை சும்மா அனுப்பலாமா பிஸ்தா நட்ஸ் எல்லோரும் எடுத்துக்கோங்க.
அப்படியே இந்த கோடைக்கு இதமாக பிஸ்தா ஐஸ்கிரீம் என் சூப்பர் ஐஸ்கிரீம் பவுலில்.


திஸ்கி ; இதெல்லாம் உடைச்சாதான் இனி புது பவுல் வாங்கலாமாம்,நான் எப்ப உடைக்க எப்ப புதுசு வாஙக, ஊருக்கு கொண்டு போன அழகான பவுல் எல்லாம் தன்னை படம் எடுக்கலைன்னு கனவில் வேறு வந்து ஆட்டம் போடுறாங்க,போய் அவங்களையும் எடுத்து பப்ளிஷ் பண்ணனும்.
இன்னும் என் பாத்திரங்கள் சமையலறை உபகரணங்கள் தொடர்ந்து அப்ப அப்ப வரும்.


--ஆசியா உமர்.

45 comments:

LK said...

hmm here we use eversilver only.. otherwise i need to buy everyday

GEETHA ACHAL said...

ஆஹா...பவுல்ஸ் எல்லாம் அழகு...எனக்கு இது மாதிரி தான் உபயோகிக்க மிகவும் பிடிக்கும்...நானும் இதுவரை எதையும் உடைத்தது இல்லை...ஆனால் எனக்கு பதிலாக என்னவரும், அக்ஷ்தா குட்டி சேர்த்து உடைத்து விடுகின்றாங்க...

asiya omar said...

here i have some stainless steel vessels also, it is always good l.k.

asiya omar said...

நான் ஊர் போய் திரும்ப வந்து பார்த்தால் எனக்கு பிடிச்சது நிறைய மிஸ்ஸிங்,கேட்டால் என் மகனார் தான் உடைத்து இருக்கிறார்,உடைத்ததை கிளிக் செய்தும் வைத்து காட்டியது தான் அதில் ஹைலைட்.

Chitra said...

////இதெல்லாம் உடைச்சாதான் இனி புது பவுல் வாங்கலாமாம்,நான் எப்ப உடைக்க எப்ப புதுசு வாஙக, ////


..... அழகு bowls. என் கிட்ட ஒரு நாளைக்கு இரவல் தாங்க...... அப்புறம் உடஞ்ச பீஸ் தான் கிடைக்கும்.... I have butter hands. :-(

Jaleela Kamal said...

ஆசியா எனக்கும் இது போல் கல்ர் கலராக கண்ணாடி பவுல்கள் ரொம்ப பிடிக்கும்.
ஆனால் நான் செய்யுர அட்டகாசத்துக்கு எல்லாம் உடைந்தே போய் விடும் ஆனால் வந்த புதிதில் வாங்க்கிய பல புருட் சாலட் பவுல்கல் பத்திரமாக் இருக்கு.

இடம் பற்றாகுறையால் என்னால் எதையும் பயன் படுத்த முடியல.

உங்கள் பொருட்கள் எல்லாம் நல்ல இருக்கு

அடிக்கடி உடைவது டீ கப் மட்டும் தான்/

Aruna Manikandan said...

nice collection...

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஆமாம் ஜலீலா நானும் அனைத்தும் முன்பு கலெக்ட் பண்ணியது தான்,இப்ப இண்ட்ரெஸ்ட் குறைந்துவிட்டது.

sarusriraj said...

பவுல் எல்லாம் சூப்பர் .

asiya omar said...

thanks aruna.

asiya omar said...

நன்றி சாருஸ்ரீ.

ஸாதிகா said...

ஆசியா வித்தியாசமான பதிவு.சுவாரஸ்யமாக உள்ளது.1999 இல் வாங்கியது,தினமும் உபயோகிப்பது..அம்மாடியோவ்..உங்களைப்பாராட்டத்தான் வேண்டும்.எங்கள் வீட்டில் கப்& சாஸர் செட்டில் எதுவுமே ஒன்று கூட ஃபுல் செட்டாக இல்லை ஆறு பீஸில் ஒரு சாஸர் இருக்காது.அல்லது கப் இருக்காது.என்னுடைய கவனக்குறைச்சல் மட்டுமில்லை,:-(ஆனால் நீங்கள் தந்த செட்டை நான் பத்திரமாக வைத்து இருக்கின்றேன்.தொடர்ந்து போடுங்கள் ஆசியா. மற்ற புது வித சமயல் உபகறணக்களியும் படம் எடுத்துப்போடுங்கள்.உதாறணமாக நீங்கள் சுலைமான் டீ போட்டு சர் செய்த அந்த தங்கவர்ண கெட்டில்...

asiya omar said...

ஸாதிகா வருகைக்கு மகிழ்ச்சி,ஆப்பிள் கட்டர் அப்புறம் இந்த பாத்திரப்பிரிவில் இடுகை போடலைன்னு இன்று போட்டாச்சு,நிச்சயமாய் தொடர்ந்து இந்த பகுதி களை கட்டும்.

நாஸியா said...

வாவ்! எல்லாமே சூப்பருங்க.. :) இது நல்ல ஹாபியா இருக்கே! :)

asiya omar said...

கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி நாஸியா.

இளம் தூயவன் said...

சகோதரி பிஸ்தாவும், ஐஸ் கிரீம் எங்களுக்கு கொடுத்து. எங்க வீட்டுகார அம்மாக்கு பவுல்சை போட்டு காட்டி, எங்களுக்கு பட்ஜெட் துண்டு விழுந்து போச்சு. அது எப்படி சகோதரி பர்சை காலிபன்னுவதில், எல்லா பெண்களும் ஒன்றாக சேர்ந்து கொள்கிறீர்கள்.

asiya omar said...

இளம் தூயவன்,அட அட இது எல்லாம் ரமலான் ஆஃபரில் கிடைத்த ஃப்ரீ கிஃப்ட்ஸ்,எத்தனை வருஷமாக சேர்த்தது தெரியுமா?இதெல்லாம் ரொம்ப சீப் & பெஸ்ட் அயிட்டம்ஸ்,இதுக்கு போய் கவலைப்படலாமா?

Riyas said...

AAHA.. NICE

asiya omar said...

thanks riyas.

vannila said...

ஆசியா மேடம் ,,,
நீங்க ரொம்ப பொறுமை
என்று நினைக்கிறேன் ,,,,,

எனக்கு அம்மாவிடம் தினமும்
திட்டுதான் {உனக்கு இரும்பும்
இருதுளி}என்று அம்மா
சொல்லுவார்கள்,,,

அப்படி இருக்க கிளாஸ்
எம்மாத்திரம் ,,,

தினமும்
ஒரு கிளாஸ் வீட்டில் உடைத்து
கொண்டே இருக்கும் ,,,

நேற்று ஒன்று உடைந்து விட்டது
ஹா,,,ஹா,,,

UR BOWL SUPER ,
உங்கள் பிஸ்தா & ஐஸ் கிரீம்க்கு சுக்ரன்...

asiya omar said...

வாங்க வெண்ணிலா, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,உங்களுக்கும் பழகப்பழக சரியாகிவிடும்.அப்பாடா நீங்களாவது ஐஸ்கீரீம் எடுத்தது மகிழ்ச்சி.

இலா said...

சூப்பர் பவுல்ஸ்.. அருமையான கலக்ஷன் ஆசியா அக்கா... உங்களை எப்படி தொடர்பு கொள்ள கொஞ்சம் அக்ரி பற்றி கவுன்சலிங் தேவை...

கமிங் டு த பவுல்ஸ்... இப்ப எல்லாமே கண்ணாடிக்கே மாறிட்டேன்... நேரம் கிடைத்தால் எங்கூட்டு கூட்டமும் அனுப்பி வைக்கிறேன்...

thenammailakshmanan said...

ஆசியா சமைச்சதையும் சமைச்சு வைச்ச பௌல் களையும் ஆவலாய் எடுக்குறீங்களே .. ரொம்ப ரசனைக்காரிதான் நீங்கள்.:))

vanathy said...

ஆசியா அக்கா, ம்ம்.. எனக்கும் பவுல்கள் பிடிக்கும். நிறைய வாங்கி வைத்திருக்கிறேன். இனிமேல் இடமேயில்லை. அழகான பவுல்கள்.

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்க்கா உங்க பவுல்ல்லாம் ரொம்ப அழகா இருக்கு...எனக்கும் கண்ணாடி,பிங்கான் சாமான்லாம் ரொம்ப பிடிக்கும் ஆனா சீக்கிரம் உடைந்துவிடும் அதான் எங்கவீட்டுக்காரர் உனக்கு சில்வர் தான் பெஸ்ட்னு சொல்லுவார்...

asiya omar said...

இலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.
அக்ரி என்றால் ஆறு,மலை,காடு,கடல் தாண்டி ஓடிடுவேன்.டச் விட்டு போச்சு.அதிராவிடம் என் மெயில் ஐடி இருக்கு வாங்கிக்கோவேன்.

asiya omar said...

நன்றி வானதி.மகிழ்ச்சி.

asiya omar said...

ஐ .. தேனக்காவா! வாங்க வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்கக்கா.

asiya omar said...

மேனகா,குழந்தையை வைத்துக்கொண்டு பத்திரமாக புழங்குவது கஷ்டம்,கொஞ்ச நாள் கழித்தால் உனக்கே பழகி விடும்.

sandhya said...

எல்லா பவுல்சும் ரொம்பா ரொம்பா அழகா இருக்கு தோழி ..

அப்பாவி தங்கமணி said...

//சமையலில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் பாத்திரம் வாங்குவதிலும் ஆர்வம் இருக்கும்//
அப்படின்னு சொல்ல முடியாது... எனக்கு கூட பாத்திர craze உண்டு... (இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியம்... என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு எல்லாம் சமைக்க முடியாதே... அதான் அப்படி சொன்னேன்... மத்தபடி நானும் கிச்சன் கில்லாடி தான்...நம்புங்க....)
உங்க collections நல்லா இருக்குங்க......

asiya omar said...

சந்தியா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

kavisiva said...

ஆசியா நானும் கிளாஸ் பவுல்களின் ரசிகைதான். ஆனால் எனது மெய்ட் கையில் பட்டால் எல்ல்லாம் தூள் தூள்தான் :(. அதனால் என்னுடைய கலெக்ஷன்கள் எல்லாம் அலமாரிக்குள் தூங்குது :((. யாராவது வரும்போது மட்டுமே வெளியில் வருவார்கள். சிலவற்றில் கிளாஸ் பெயிண்ட் செய்து ஷோகேசில் வைத்து விட்டேன்.

asiya omar said...

அப்பாவி தங்கமணி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.எல்லாரும் சொல்ற பேமஸ் ஆன மல்லிப்பூ இட்லி உங்களோடது தானே,சூடான இட்லி கெட்டி சட்னி பிரியாணியைவிட பிடிக்கும். அவங்கவங்க வீட்டில் எல்லாரும் கிச்சன கில்லாடி தாங்க. நன்றி.

abul bazar/அபுல் பசர் said...

எல்லா பௌலும் அழகாக இருக்கிறது. கடைசி பௌலில் பிஸ்தா ஐஸ் கிரீம் வைத்து நாக்கில் நீரை வரவைத்துவிட்டீர்கள்.
நல்ல பதிவு.

எம் அப்துல் காதர் said...

ஆஹா,,,, உங்க ரசனையின் அழகு பாத்திரங்களில் தெரியுது. ஐஸ் கிரீமை இப்ப வந்து எடுத்துக்கவா? லேட்டா வந்து சாப்பிடவா? ஒருவேளை கரைஞ்சுடுமோ.. இருங்க எதுக்கும் பிரீசரில் எடுத்து வைத்து விட்டு போகிறேன்..

asiya omar said...

கவிசிவா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.ஊரில் எங்க மாமா மாமிக்கு துணையாக இருக்கும் வேலையாட்களும் இப்படி தான்,நாங்க ஆசையாக வாங்கி வைப்பதை உடைத்து டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடுவார்கள்,ஒன்றும் சொல்ல முடியாது.என்ன செய்ய...

asiya omar said...

அபுல் பசர் உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

அப்துல் காதர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஐஸ்கிரீமை, நீங்கள் வருவதற்குள் ஜெஸிரா குட்டி எடுத்து சாப்பிடப்போறா...

Mahi said...

அழகான கலெக்ஷன் ஆசியாக்கா! எனக்கும் இந்த பாத்திரம் க்ரேஸ் உண்டு..பாத்திரம்னு இல்லை, வீடு மாறும்பொது,வீட்டில் இருக்கும் சாமான்கள் எல்லாம் அப்படியே புதுஇடத்துக்கு வரணும் என்று அடம் பிடிப்பேன்.அந்த அளவுக்கு அட்டாச்ட்! :)

asiya omar said...

மகி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.பார்த்த மட்டில் மொத்தத்தில் எல்லாரும் இந்த பாத்திரம் என்றால் விருப்பமாகத்தான் இருக்கிறார்கள்.

goma said...

பவுல்ஸ் எல்லாம் பார்த்ததும் நான் அப்படியே CLEAN BOWLED...

asiya omar said...

goma உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

mahavijay said...

கண்ணாடி பொருள்களுக்கு நானும் அடிமை ஆசியா