Wednesday, June 16, 2010

ஆஷாக்குட்டி


மாமி மாமி மா..........மி
"ஆஷா ராகம் பாடிண்டு வரா பாரு ,என்னன்னு கேளுடி" என்றார் ராமகிருஷ்ணய்யர்.

"வாடிம்மா குழந்தே ", என்று வாஞ்சையுடன் தலையைக் கோதிவிட்டாள் ஜெயந்திமாமி.இது வழக்கமாக சாயங்காலமாச்சுன்னா நடப்பது தான்...

மாமிக்கும் ஆஷாவை பார்க்கலைன்னால் அன்றைய பொழுது சாயாது,ஆஷாக்கும் மாமி ஸ்பரிசம் படலைன்னால் எதையோ மிஸ் பண்ணினா மாதிரி இருக்கும்.,மாமான்னால் இந்த குட்டிக்கு கொஞ்சம் பயம்,அவர் உர்ருன்னு பார்ப்பதிலேயே இவ எதுக்கு வரான்னு கேட்காமல் கேட்பார்,அவரோட பட்சனத்தை கட் பண்ணிண்டு மாமி இவளுக்கு பத்திரப்படுத்தியிருப்பா,அதனாலோ என்னவோ இந்த பிஞ்சு மனம் பதறும்,"மாமா டிஃபன் சாப்பிட்டேளா?" நீயே கொட்டிக்கோம்பார்.

"மாமி மா.....மி மாமாக்கு பிடிக்கலை, நான் இனி உங்காத்துக்கு வரலை,"
"ஏண்டிமா செல்லம்,அவர் கிடக்றார்,உனக்கு இல்லைன்னால் இந்த ஆத்தில டிஃபன் யாருக்கும் கிடையாது சொல்லிட்டேன் ஆமா,"என்று விர்ரென்று சமையற்கட்டை நோக்கி போகும் ஜெயந்திமாமியை மாமா முறைப்பார்.

இவளும் மாமியுடன் அரிசிக்கு கல் பொருக்கி கொடுத்துண்டு காய்கறி அலம்பி கொடுப்பதுன்னு தினமும் மாமிக்கு உதவியாக இருப்பதுண்டு. வீட்டு கொல்லை புறத்தில் காய்த்து பழுத்து தொங்கும் புளியம்பழத்தை மரத்தில் ஏறி பறித்து மாமி சொம்பில் கொடுத்த நீர்மோரை குடித்தபடி புளியம்பழத்தை தட்டியபடி அன்று ஸ்கூலில் நடந்த விபரங்களை சுவாரஸ்யமாக சொல்லுவதை அதைவிட சுவாரஸ்யமாக மாமி கேட்டு மகிழும் அழகே தனி.அத்தனையையும் ஈஸி சேரில் சாய்ந்த படி பார்த்திண்டு மாமா எள்ளும்,கொள்ளும் வெடிக்க உட்கார்ந்திருப்பார்.

மாமாக்கு 4 மணிக்கு டிஃபன் காஃபி,ஏழு மணியானால் டான்னு சாதம் வேணும்,மாமி ஓடியோடி நோவார்ட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் சமைக்கும் அழகே தனி தான்,தொணதொணன்னு ஆஷா கேள்விக்கு பதில் சொல்லிண்டு மாமிக்கு சமைத்தால் தான் சமையல் ஆன மாதிரி இருக்கும்.மாமா சாப்பிட உட்காரவும்,வெளியே வேலைக்கு சென்று களைப்பாக வீடு திரும்பும் மாமியோட பொண்ணும் பையனும் வரவும் இவள் சிட்டென்று அவள் வீட்டிற்கு பறக்கவும் சரியாக இருக்கும்.போனால் தானே ஹோம் ஒர்க் முடிக்கலாம்.அவள் அம்மா அப்பாவிற்கு ஒரே பொண்ணு செல்லம் ஜாஸ்தி.எப்பவும் பொழுது போகலைன்னால் மாமியை பார்க்க வருவது அவள் வழக்கம்.

ஒரு நாள் தீடீரென்று ஆஷாவின் சொந்தக்காரரின் மரண செய்தி வர ஆஷாவிற்கு முழுஆண்டு தேர்வு என்பதால் இவளை எப்படி அழைத்து செல்வது என்று தயங்கிய பொழுது,பக்கத்தாத்து மாமியோ ஆஷா என்னோட இருக்கட்டும்னு சொல்ல,ஆஷாவிற்கு ஒரே மக்ழிச்சி.ஆஷாவின் அம்மா அப்பாவும் மாமியிடம் விட்டு செல்வதில் எந்த தயக்கமும் காட்டவில்லை,அவர்களும் இரண்டு நாள் கழித்து வருவதாக சொல்லி கிளம்பி சென்று விட்டனர்.

மாமா வீட்டீற்கு பக்கதிலேயே டி.வி..எஸ் சில் வேலை பார்க்கிறார்,ஆஷா ஸ்கூலும் மாமா ஆஃபிஸ் பின்னாடி தான்,எப்பவாவது இவளை பார்க்க நேர்ந்தாலும் கண்டும் காணாமல் போவது தான் மாமாவின் வழக்கம்.
டிவிஎஸ் எதிர்த்தாப்பில் தான் இ.பி ஆஃபிஸ்.,ஆஷா படிக்கும் ஸ்கூலிற்கு காம்பவுண்ட் கிடையாது,அங்கிருந்து டிவிஎஸ் பக்கம் வந்து மரத்தடியில் இண்டெர்வெல்லில் அங்கு விற்கும் குச்சிஐஸ்,மாங்கீத்து,வேர்க்கடலை,ஜவ்வு மிட்டாய் என்று விறபதை ஸ்கூல் குழந்தைங்க வாங்கி சாப்பிடுவார்கள்..
அன்றும் அந்த ரோட்டுப்பக்கம் ஆஷா வரும் பொழுது தற்செயலாக மாமாவை பார்க்க,

"மாமா எங்கே போறேள்,"ன்னு பின்னாடியே போய் கேட்கும் பொழுது
"போடிமா,நான் இ.பி கட்டப்போறே"ன்னு மாமா வேகமாக ரோட்டை கிராஸ் செய்ய,வேடிக்கை பார்த்த ஆஷா "மாமா" என்று அலறிய வண்ணம் ஓடி தடுக்கவும் வேகமாக வந்த பியட் அவளை அடித்து தூக்கி வீசவும் சரியாக இருந்தது.கண்மூடி திறப்பதற்குள் இது நடந்தேறிவிட்டது.

மாமா பிரம்மையில் உறைந்திருக்க அக்கம் பக்கமிருந்தவர் ஆஷாவை ஆட்டோவில் கொண்டு போய் பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்ஸ் உடனே எமர்ஜென்ஸியில் அட்மிட் செய்து ட்ரீட்மென்ட் கொடுத்து ஐ.சி.யு வில் வைத்தனர் தலையில் பலமாக அடிபட்டு இருப்பதால் இப்ப ஒன்றும் சொல்வதற்கில்லை,, 12மணி நேரத்திற்குள் எப்ப வேண்டுமானாலும் கண் திறக்கலாம் இல்லைன்னால் நினைவு திரும்பாமலுல் போகலாம் என்று சொல்லிவிட்டு டாக்டர்கள் சென்று விட்டனர்,எப்ப விழித்தாலும் ஏதாவது பேசினாலும் டூட்டி நர்ஸிடம் சொல்லும் படி சொன்னதால் மாமா அவளை வீட்டு நகரவில்லை.பச்சைத்தண்ணி கூட மாமா பல்லில் படலை.

செய்தியறிந்து மாமி பதற்றத்துடன் வரவும், "அவ அம்மா அப்பா இல்லாத நேரம் இப்படியாயிட்டுதே"ன்னு புலம்பியபடி,

"என்ன நடந்தது குழந்தே"ன்னு மாமி கதறவும்,மாமா பச்சப்பிள்ளை போல், "நான் தான் காரணம் என்னை காப்பாற்ற போய் இப்படி படுத்திருக்காளே"ன்னு ஒரே அமர்க்களம் பண்ண,மாமி மயக்கம் போடாத குறைதான்.அக்கம்பக்கத்தில் உள்ளவான்னு ஒரே கூட்டம்,எல்லாரும் இருவரையும் சமாதானப்படுத்தி சென்றனர்.

மாமி மாமாவிடம்,"நீங்க அந்த குழந்தைகிட்ட நிலையாய் நின்னு படுத்தினேளே,இப்ப பார்த்தேளா,உங்களுக்காக அவ பண்ணின காரியத்தை இப்பவாவது புரியறதா குழந்தை மனசு எப்படின்னு,"புலம்பிய மாமி காதில், "மாமா மாமா"ன்னு சின்ன சத்தம் விழ திரும்பினால் ஆஷா தான்,அப்பொழுது தான் நினைவு திரும்ப ஆரம்பித்திருந்தது லேசாக நினைவு வந்து வந்து போனது,

உடனே நர்ஸ், டாக்டரை அழைத்து வர டாக்டர் பரிசோதித்துவிட்டு
"இந்த பொண்ணு பிழைச்சதே ஆச்சரியம்,இனி கவலைப்பட ஒன்றுமில்லை"ன்னு சொல்லவும்,மாமா மாமி இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்."இப்பக்கூட ஆஷா மாமான்னு தான் புலம்பறா பாருங்கோ" என்ற படி மாமாவின் தோளில் ஆயாசமாக சாய்ந்தார் ஜெயந்தி மாமி.--ஆசியா உமர்..


முக்கியக்குறிப்பு : நான் முன்ன பின்ன கதை எழுதி அனுபவமில்லை.தம்பி அஹமது இர்ஷாத் பெஸ்ட் ஸ்டோரி ரைட்டர் விருது தந்து என்னை தூங்க விடாம செய்ததால் கதை எழுதியே ஆக வேண்டிய கட்டாயம்.அவருக்கு என் மனமார்ந்த நன்றி. நம்ம பிரபல ப்ளாக்கர் கதாசிரியர் ஸாதிகா கிட்ட இந்த கதையை அனுப்பி அவங்க ஓ.கே சொன்ன பின்பு இதனை பிரசுரம் செய்திருக்கேன்.குற்றம் குறை இருப்பின் தவறாமல் கருத்து சொல்லவும்.50 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் அருமை .
நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

Mahi said...

ஆசியாக்கா,கதை நன்றாக இருக்கு. :)

Chitra said...

கதை சொல்றதிலேயும் அசத்துறீங்களே! :-)

LK said...

ஆசியா அக்கா, சூப்பர் கதை... அருமை கலக்கறீங்க

vanathy said...

அக்கா, மிகவும் நல்லா இருக்கு. மனதை தொடும் சிறுகதை.

ஜெய்லானிக்கு விருது குடுத்தார்களே. ஜெய், எப்ப கதை எழுதப் போறீங்க????

ஸாதிகா said...

ஆசியா,உங்களின் கன்னி முயற்சியே இத்தனை அருமையாக உள்ளதே.பிரமாணாள் பாஷையில் அழகாக கதை புனைந்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.அது சரி எதுக்கு இந்த மேடம்.மேடம் என்பதை உங்கள் பதிவில் மட்டுமல்ல உங்கள் மனதில் இருந்தும் தூக்கி விடுங்கள் தோழி.

asiya omar said...

மிக்க நன்றி சங்கர்,முதல் கருத்திற்கு மகிழ்ச்சி.

kavisiva said...

அருமையா இருக்கு ஆசியா. ஆஷாக்குட்டி எங்கள் அப்பா அம்மாவின் செல்லக்குட்டியான அனுக்குட்டியை(எங்கள் வீட்டின் மாடியில் வாடகைக்கு இருப்பவர்கள் குழந்தை) ஞாபகப்படுத்தி விட்டாள். அவள் ஒருநாள் வரவில்லையென்றாலும் எங்க அப்பா அம்மாவுக்கு இருக்க முடியாது. அவளும் அப்படியே. அவளுக்காகவே எங்கள் வீட்டில் எப்போதும் ஜெல்லி இருக்கும். இரண்டரை வயதுதான் ஆகிறது. அப்படி வாய் பேசுவாள்.

asiya omar said...

மகி நல்லாயிருன்னு சொல்றதை கேட்க சந்தோஷமாக இருக்கு.

asiya omar said...

நன்றி சித்ரா உங்கள் பாராட்டிற்கு.மகிழ்ச்சி.

asiya omar said...

எல்.கே.உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் கருத்து சொல்வது இன்னும் மகிழ்வை தருகிறது.

asiya omar said...

வானதி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,ஜெய் இந்தப்பக்கம் காணோம் ,ப்ளாக் டெம்ப்லேட் மாற்றியதில் அடையாளம் தெரியலையோ!

LK said...

@ஆசியா
சகோதரி, என்னையும் எழுத்தாளன் என்று சொல்வது உங்கள் பெருந்தன்மை. உண்மையா சொன்னால் எனக்கு பிராமின் பாஷையில் எழுத வராது

asiya omar said...

ஸாதிகா பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி தோழி.நான் கதை எழுதி அனுப்பியதும் அதனை ஒ.கே செய்து உடன் பதிலும் அனுப்பிய உங்கள் வேகம் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.

asiya omar said...

கவி சிவா,கருத்திற்கு மகிழ்ச்சி.திருச்சியில் எங்கள் பக்கத்து ஆத்தில் குடியிருந்த மாமா மாமி பற்றிய கற்பனை கலந்த கதை தான் இது,அவா இப்ப எங்க இருக்கான்னு தெரியலை.

asiya omar said...

எல்.கே.பிராமணா பேச்சுத்தமிழை நான் மிகவும் ரசிப்பதுண்டு,என்னோட பேட்ச் மேட்ஸ் மூன்று பேர்.அப்புறம்,என் கணவர்,எங்க அண்ணனுடைய நெருங்கிய நட்பு வட்டம்னு நிறைய சொல்ல இருக்கு.நான் கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போம்னு எழுதியது தான் இது.

sarusriraj said...

ஆசியாக்கா கதை ரொம்ப நல்லா இருக்கு.... வாழ்த்துக்கள் முதல் கதையே அசத்தல்..

athira said...

ஆசியா நம்பவே மாட்டீங்க நேற்று உங்கள் தலைப்பு பார்த்த நேரம் தொடங்கி, இரவு படுக்கும்வரை முயற்சித்தேன் ஏனோ கொமெண்ட்டை அனுப்பவே முடியவில்லை....இப்போ மீண்டும்ம்ம்ம்.
....................................
கலக்கிட்டீங்க ஆசியா..இதுவும் குட்டியோ? ஆஷாக்குட்டி....

///பெஸ்ட் ஸ்டோரி ரைட்டர் விருது/// ஆசியா இது உங்களுக்குத் தந்ததில் தப்பேயில்லை. மிக அழகாகவே எழுதியிருக்கிறீங்க. தொடர்ந்து எழுதுங்கோ. நன்றாக இருக்கு கதை வசனங்கள்.

அதுசரி, இதுதான் முதல் ஸ்டோரியோ? அப்போ ஸ்டோரியே எழுதாமலோ “பெஸ்ட் ஸ்ரோரி றைட்டர்” அவோட் வாங்கினனீங்கள்? அது எப்பூடி????? கடவுளே.. என்னைக் காப்பாத்தப்பா.... மீ எஸ்ஸ்ஸ்

ஸாதிகா அக்காவோ எடிட்டர்... ஸாதிகா அக்கா...... கொஞ்சம் சந்தேகம் கேக்கோணும்:).
...................................வாணி, ஜெய்..லானியின் கோட்டைக் க்கொடுங்கோ(தோச்சுப்போட்டு:)), அதைப்போட்டால்தான் அவருக்கு மூடு வருமாம்...கதை எழுத....

asiya omar said...

நன்றி அதிரா,உங்கள் கலக்கலான வருகைக்கு மகிழ்ச்சி...
விருதை கதை எழுத ஊக்குவிக்க தந்தாராம் தம்பி அஹமது இர்ஷாத்...

Jaleela Kamal said...

ஆசியா இப்ப கதையும் எழுத ஆரம்பிச்சா?
பேஷ் பேஷ் ஆஷா குட்டியின் கதை ரொம்பவே நன்னா இருக்கு.

என்ன அப்படி பார்க்கிரேள், நானும் ஐயார்த்த்து பாஷைய பேஷ ஆரம்பித்தா அப்படியே மாமி ஆத்து பொன்னுன்னு நம்பிடுவா/


தொடர்ந்து கதை எழுத வாழ்த்துக்கள்

அஹமது இர்ஷாத் said...

ரொம்ப நல்லாயிருக்கு ஆசியாக்கா.. ஆக இனிமேல் சமையலோடு கதையையும் எதிர்ப்பார்க்கலாம்.. வாழ்த்துக்கள்..
அடுத்து ஒரு கவியரசி விருதை கொடுத்து கவிதையையும் வாங்கிறவேண்டியதுதான்... என்ன ரெடியா...?

asiya omar said...

சாருஸ்ரீ,வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

தம்பி அஹமது இர்ஷாத் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.விருதா? மீ எஸ்கேப்...

இளம் தூயவன் said...

ஆரம்பமே அமர்களமாக உள்ளது சகோதரி வாழ்த்துக்கள்.

asiya omar said...

நன்றி,இளம் தூயவன்..

vannila said...

ஆசியா அக்கா நான்
தான் லேட்டா ,

கதை ரொம்ப ப்ரமாதம்
கலக்கிடீங்க போங்க,

மேலும் நீங்கள் பல
கதைகள் எழுதவேண்டும்.

asiya omar said...

வெண்ணிலா கருத்திற்கு நன்றி.கதை எழுதஆசையுண்டு,பார்ப்போம்,
இன்ஷா அல்லாஹ்!

angelin said...

very nice story asiya.ungal story touching aaga irundhadhal asiya enru type seyvatharku asha endru 3 times type seydhen.kids are like flowers they spread fragrance .lovely story

Mrs.Menagasathia said...

வாவ்வ் ஆசியாக்க்கா பாராட்டுக்கள்,ப்ராமண பாஷையில் அழகா எழுதிருக்கிங்க.கதை மிகவும் மனதை தொட்டு விட்டது...இன்னும் எழுதுங்கள்..வாழ்த்துக்கள்!!

அக்பர் said...

கதை மிக அருமை.

asiya omar said...

thanks a lot for your loving comments angelin.

LK said...

//எல்.கே.பிராமணா பேச்சுத்தமிழை நான் மிகவும் ரசிப்பதுண்டு,என்னோட பேட்ச் மேட்ஸ் மூன்று பேர்.அப்புறம்,என் கணவர்,எங்க அண்ணனுடைய நெருங்கிய நட்பு வட்டம்னு நிறைய சொல்ல இருக்கு.நான் கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போம்னு எழுதியது தான் இது.//

ஹ்ம்ம் ok

asiya omar said...

அக்பர் உங்கள் வருகைக்கு மிக மிக நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மேனகா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.இத்தனை ஆதரவை பார்க்கும் பொழுது நிச்சயம் எழுதனும்னு ஒரு உத்வேகம் வருது.

Riyas said...

ஆஹா.. கதையிலயும் கலக்கிட்டிங்களே... அக்கா. தொடருங்கள் வாசிக்க வாழ்த்த நாங்க ரெடி..

Riyas said...

//ஜெய்லானிக்கு விருது குடுத்தார்களே. ஜெய், எப்ப கதை எழுதப் போறீங்க???? //

செவனேன்னு இரிக்கிற ஆள யாரிய்யா உசுப்பேத்துறது.. அவர் பாட்டுக்கு கதை எழுத தொடங்கிட்டா...? ஹி..ஹி...

Riyas said...

இது முதல் முயற்சியா.. நமபவேமுடியல்ல..
நானும் முதல் முயற்சியா ஒனனு எழுனேன்..

இஙக.. http://riyasdreams.blogspot.com/2010/06/blog-post_03.html

asiya omar said...

ரியாஸ் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

ரியாஸ் உங்கள் கதைக்கருவும் எழுத்து நடையும் சூப்பர்.பாராட்டுக்கள்.

Meerapriyan said...

aashakkutty urukkamaana kathai-nalla kathai samaiyal- meerapriyan

asiya omar said...

மீராப்பிரியன் உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Ayesha said...

கதையோட சேர்ந்து ஓவியமும் அருமையா இருக்கு. எங்க புடிச்சிங்க?(ஓவியத்தை! :-)).....

asiya omar said...

ஆயிஷா உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.ஓவியம் நெட்டில் தான்,நம்ம தோழி ஸாதிகா உபயம்.

Geetha6 said...

very touching!
good.

asiya omar said...

கீதா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

கதை ரொம்ப நன்னா இருக்கு மேடம்!!

அந்த பாப்பா உட்கார்ந்திருக்கிற அழகும், பார்வையும், அந்த போட்டோவே இன்னொரு கதை சொல்லும் போலிருக்கு. :))

என்கிட்ட எந்த அவர்டுமில்லை இப்போதைக்கு வாழ்த்துகள் மட்டுமே...

asiya omar said...

மிக்க நன்றி,அப்துல் காதர்.

சிநேகிதி said...

நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் வலைப்பூவில் சந்திக்கிறேன் நலமா? சமையல்,டிப்ஸ் கவிதை இதில் தான் நீங்கள் கில்லாடி என்று நினைத்தேன் கதை சொல்லியும் அசத்திவிட்டிங்க.. பாரட்டுக்கள்

asiya omar said...

சினேகிதி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.