Friday, June 18, 2010

கறி வடை

தேவையான பொருட்கள் ;
மீதியான சிக்கன் அல்லது மட்டன்
முட்டை - 1
வெங்காயம் - 2
பொட்டுக்கடலை - 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
மல்லி,புதினா - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - அரைஸ்பூன்
கரம் மசாலா - அரைஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - அரைஸ்பூன்
மிள்குத்தூள் - அரைஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
உப்பு -தேவைக்கு


மீதமான கறி எவ்வளவு இருக்கோ அந்த அளவு எடுத்து கொள்ளவும்.நான் எடுத்த அளவு ஒரு சாசர் அளவு.அதனை மிக்ஸி சின்ன கப்பில் போட்டு உதிரியாக அரைத்து எடுக்கவும்,ஏற்கனவே வெந்தது எனவே தண்ணீர் விட வேண்டாம்.


அரைத்த கறியை எடுத்து விட்டு மிக்ஸியில் ஒரு வெங்காயம்,மல்லி,புதினா,மிள்காய்,பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுக்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது.

அரைத்த கறியுடன் அரைத்த வெங்காயம்,மல்லி,புதினா ,மிளகாய்விழுது,முட்டை, மசாலா தூள் வகைகள் ,சிறிது உப்பு அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.அத்துடன் ஒரு வெங்காயம் கட் செய்து சேர்க்கவும்.கலந்து உருண்டைகளாக பிரிக்கவும்.

உருண்டைகளை வடையாக தட்டி போடவும்.
இரு புறமும் சிவற பொரிக்கவும்.


வடை நன்கு பொரிந்தவுடன் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
சுவையான ஐடியா கறி வடை ரெடி.
--ஆசியா உமர்.

34 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஹைய் அக்கா.., கறிவடை ஆசைய தூண்டிவிட்டுட்டீங்களே.. ஊருல இருக்கும்போது சாப்பிட்டது.

நோன்பு நேரத்தில் நோன்பு திறக்கும்போது இந்தவடைதான் வாங்குவேன். நல்ல டேஸ்டா செய்திருப்பாங்க..

Chitra said...

masala tea kku ஏத்த ஐட்டம். சூப்பர்!

Cool Lassi(e) said...

Yamma naakku ooruthu intha padaippu!Very creative spin with leftovers..

Mahi said...

வீக்கெண்ட் ஸ்பெஷலா ஆசியாக்கா? நல்லாருக்கு! :)

GEETHA ACHAL said...

Nice vadai...

Mrs.Menagasathia said...

சூப்பராயிருக்குக்கா...

vanathy said...

Akka, nice. I never had this vadai. YUMMY!

LK said...

ஹாய் ... தமிளிஷ் சப்மிட் பண்ணிட்டேன் சகோதரி

கே.ஆர்.பி.செந்தில் said...

காலையிலேயே கறி எடுக்க போக வச்சிடீங்க....

asiya omar said...

ஸ்டார்ஜன் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.ஆமாம் ,நோன்பு கஞ்சிக்கு அருமையாக இருக்கும்.

asiya omar said...

chitra
cool lassie
thanks for your loving comments.

தெய்வசுகந்தி said...

Good!!!!!!

asiya omar said...

மகி,போனவாரமே செய்து போட்டோ எடுத்தாச்சு.இப்பதான் வெளியீடு.

asiya omar said...

கீதா ஆச்சல்

வானதி

மேனகா
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

சகோ.எல்.கே உங்கள் அன்பிற்கு மிக மிக நன்றி.சப்மிட் பண்ணமுடிலைன்னு தமிலிஷ்க்கு மெயிலும் அனுப்பியாச்சு,என்னன்னு தெரியலை.

asiya omar said...

கே.ஆர்.பி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

LK said...

// உங்கள் அன்பிற்கு மிக மிக நன்றி.சப்மிட் பண்ணமுடிலைன்னு தமிலிஷ்க்கு மெயிலும் அனுப்பியாச்சு,என்னன்னு தெரியலை//

ippalam tamilish submit panna delay aaguthu enna reasonu teriyalka. nethu nite oru silarku problem irudirukku

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆசியாக்கா.. நீங்க எழுதின மீன்காரர் கதை படிக்க ஆவலாக உள்ளேன்.. அதனோட லிங் தாருங்களேன்..

எம் அப்துல் காதர் said...

ஒரு ரசம் வச்சாலும், ஒரு பருப்பு சால்னா வச்சாலும், பாலக் கீரை வச்சாலும் இது சாதரணமாவே நம்ம வீட்டில் துணை கறி தான் மேடம்! .....அசத்தலோ அசத்தல்.

//நோன்பு திறக்கும்போது இந்தவடைதான்//

- ஆமாம் ஸ்டார்ஜன் சார் நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்!!

asiya omar said...

ஸ்டார்ஜன் நான் இன்னும் மீன் காரர் பற்றிய கதையை வெளியிடவில்லை,
ஸாதிகா கொடுத்த ஊக்கம் இன்னும் வலையுலக அன்பர்கள் என் முதல் கதை ஆஷாக்குட்டிக்கு அனுப்பிய பின்னூட்டம் பார்த்து நானும் கதை எழுத ஆரம்பித்து விட்டேன்.இனி வாரம் ஒரு கதை வரும்...

asiya omar said...

அப்துல் காதர் பருப்பு,கீரை,ரசம் என்று வைத்தால் எங்கள் வீட்டிலும் சைட் டிஷ்க்கு இதனை செய்வதுண்டு,எங்கே பொரிக்கும் பொழுதே காலியாகிவிடும்.

LK said...

//இனி வாரம் ஒரு கதை வரும்../

avvvvvvvvvvvv

Barakath said...

அஸ்ஸலாமு அலைக்கும்.... அக்கா இனிமேதான் செஞ்சு பார்க்கணும். புது கறில செய்யலாமா

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு அக்கா

asiya omar said...

எல்.கே நீங்க வேறு,சும்மா ஒரு பில்டப் தான்....

asiya omar said...

பரக்கத் உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.தாராளமாக புதுசிலும் செய்யலாமே,கறியை ,இஞ்சி பூண்டு ,கறிமசாலா கொடுத்து குக்கரில் வெந்து இந்த முறையில் செய்யலாம்.

asiya omar said...

நன்றி சாருஸ்ரீ.

இளம் தூயவன் said...

சகோதரி பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு, ம்.....சாப்பிட தான் கொடுத்து வைக்கவில்லை.

asiya omar said...

இளம் தூயவன் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

jagadeesh said...

டேஸ்டான மீன் குழம்பு வைக்க எந்த மீன் நல்லா இருக்கும் கா?

asiya omar said...

டேஸ்டான மீன் குழம்பு வைக்க சீலாமீன்(வஞ்சிரம்)நல்லா யிருக்கும் ஜெகதீஸ்.

sulthana said...

This is one of favourite vadai...mom makes it for evening snack...but i heard machan saying even it goes well with boiled rice..he too loves it.i made it with your receipe and was awesome..thank you..keep going:)gud luck!

asiya omar said...

thanks sulthana for your nice comments.my kind regards to your machan.

Mohideen said...

Hai. ரொம்ப நாளாக கறிவடை செய்ய ஆசை. ஆனால் இன்றைக்குதான் உங்களுடைய குறிப்பை பார்த்தேன். மிகவும் நன்றி.