Saturday, June 19, 2010

தன்னிகரற்ற தந்தையர் தினம் - வாழ்த்துகிறேன்


இருபத்தி ஏழு வருடம் பின்னோக்கி செல்கிறேன்

இறுதியாக நான் பார்த்த என் தந்தை முகம்

என் கண்முன்னே தெரிகிறது...


அன்பும் ஆற்றலும்

பண்பும் பாசமும்

உறுதியும் உன்னதமும்

உண்மையும் உழைப்பும்

உற்ற தோழமையும்

இனிக்கும் இன்முகமும்

கொண்ட

ஈடுஇணையற்ற

தந்தையே !

கனவிலாவது கண்டு

மகிழ விளைகிறேன்

வருவாயா ?

--ஆசியா உமர்.

அனைத்து தந்தையருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

36 comments:

LK said...

அனைத்து தந்தையருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

அனைத்து தந்தையருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

ஹைஷ்126 said...

வாழ்த்துகள்.

athira said...

Happy Father's Day.

இங்கேயும் எல்கே முந்திட்டார்:) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

Chitra said...

ஈடுஇணையற்ற

தந்தையே !

கனவிலாவது கண்டு

மகிழ விளைகிறேன்

வருவாயா ?


.... I miss my father very much! :-(

LK said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். /

வேனும்ஜ்ன வடை நீங்களே எடுத்துகோங்க

Jaleela Kamal said...

உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது ஆசியாமா/
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

அஹமது இர்ஷாத் said...

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

abul bazar/அபுல் பசர் said...

கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

//ஈடுஇணையற்ற தந்தையே!
கனவிலாவது கண்டு
மகிழ விளைகிறேன்
வருவாயா?//

வரணும்..இந்நேரம் வந்திருக்கணுமே..குழந்தைகள் வடிவில்!

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

Kousalya said...

தந்தையர் தின வாழ்த்துகள்

ப்ரியமுடன்...வசந்த் said...

http://s1.smsnshayari.com/fathers-day/happy-fathers-day.gif

செந்தில்குமார் said...

அனைத்து தந்தையருக்கும்
வாழ்த்துகள்.

நாடோடி said...

த‌ந்தைய‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள்..

Mrs.Menagasathia said...

மிக அருமையான கவிதை.தந்தையர் தின வாழ்த்துக்கள்!! நானும் 16 வருடங்கள் முன்னோக்கி செல்கிறேன் அக்கா...

kavisiva said...

அருமையான கவிதை ஆசியா! எல்லா அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

asiya omar said...

வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் said...

உங்கள் மனதில் உள்ளதை அப்படி கூறியுள்ளிர்கள். இது நீங்கள் உங்கள் தந்தையின் மீது கொண்டு உள்ள பாசத்தின் வெளிப்பாடு,இதன் வாயிலாக உங்கள் மனத்திற்கு சிறிது ஆறுதல் கிடைத்து இருக்கும்.

goma said...

இதயத்தில் நிற்கும் தந்தைக்கு அருமையான கவிதை அளித்திருக்கிறீர்கள்.

தாராபுரத்தான் said...

தந்தையாய் கேட்கிறேன்..

வேலன். said...

உங்கள் தோழியின் பிறந்த நாளை வாழ்த்தலாம் வாங்க பதிவில் வெளியிட்டிருக்கலாமே நண்பரே...அதிகம்பேர் வாழ்த்துசொல்லியிருப்பார்களே...
வாழ்க வளமுடன்.வேலன்.

asiya omar said...

புதிதாய் வருகை புரிந்து வாழ்த்தி கருத்து சொன்ன
தாராபுரத்தான் அய்யன்,
ப்ரியமுடன் வசந்த்,
செந்தில்குமார்,
நாடோடி,
கோமா,
வேலன்
ஆகியவர்களுக்கு என் மிக்க நன்றி.

asiya omar said...

வேலன் நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு நிச்சயமாகவே புரியலை.

simham said...

அன்பு ஆசியா,

அருமையாக எழுதியிருக்கீங்க.

தந்தையர் தின வாழ்த்துக்கள்! அப்பாவை நினைத்து நெகிழும் அன்பு நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள்!!

அன்புடன்

சீதாலஷ்மி

asiya omar said...

சீதாலஷ்மி உங்கள் கருத்திற்கும் முதல் வருகைக்கும் மகிழ்ச்சி.நீங்க எனக்கு தெரிந்த அறுசுவை.காமில் பழகிய சீதாலஷ்மி மேடமா?பதில் தரவும்.

simham said...

அன்பு ஆசியா,

அதே சீதாலஷ்மிதான். பல மாதங்களுக்கு முன் வலைப் பூக்களில் பின்னூட்டம் தர நினைத்து, ஜி மெயில் ஐ.டி.யில் முயற்சி செய்தேன் என நினைக்கிறேன். அப்புறம் வீட்டில் பல வேலைகள்! இடையில் பல முறை யாஹூ ஐ.டி.யில் லாக் இன் செய்ய நினைத்து, இயலவில்லை, இன்னிக்குதான் திடீரென்று இந்த ஐ.டி. ஞாபகம் வந்தது. லாக் இன் ஆகுமா, ஆகாதா என்று சந்தேகத்துடனேதான் முயற்சித்தேன். நல்ல வேளை, செய்ய முடிந்தது, அப்புறம் ஒரு சந்தேகம் ஆசியா, ஓட்டுப் போடுவது பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை, ஓட்டு போடணும்னா,நான் தமிழ் மணம்.காம் ல் மெம்பர் ஆகணுமா?

அன்புடன்

சீதாலஷ்மி

asiya omar said...

சீதாலஷ்மி மேடம் மிக்க மகிழ்ச்சி.தமிலிஷ் -சில் ஒரு ஐடி கிரியேட் பண்ணி,பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைங்க,பாஸ்வேர்ட் சேவ் பண்ணுங்க,இல்லாட்டி நினைவில் வைத்துக்கொள்ளவும்,யாருக்கு ஓட்டுப்போடனும் என்றாலும்,அந்த தளத்தில் உள்ள குறீப்பின் கீழ் உள்ள தமிலிஷ் வோட் கிளிக் செய்தால் தமிலிஷ் போகும், உங்க ஐடியில் நுழைந்து போட வேண்டியது தான்.சேவ் செய்து இருந்தால் வோட்டட் என்று வந்து விடும்.அவ்வளவு தான்.

சாருஸ்ரீராஜ் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு

Meerapriyan said...

thanthaiyai urukkamaaga ninaithu kavithai ezhuthiyulleerkal. en thanthaiyai ninaivu paduthivitteerkal. nandri. nandru.-meerapriyan

vanathy said...

Akka, super. Well written.

நியோ said...

// கனவிலாவது கண்டு
மகிழ விளைகிறேன் //
நீங்கள் தந்தையை ஏதோ ஒரு வகையில் மிஸ் செய்வது புரிகிறது ...
புகைப்படத்திலுள்ள வரிகள் சொல்வது போல ...
ஒவ்வொரு அடியிலும் அவரது வார்த்தைகள் நம்மை வழிநடத்தட்டும் !
வருகிறேன் தோழர் !
அருமையான பகிர்வு !
----------
தந்தையர் தினம் கொண்டாடினேன்!
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html

asiya omar said...

சாருஸ்ரீ

வானதி

மீராப்பிரியன்

நியோ

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

angelin said...

very nice and asiya.for you its 27 yrs for me its one and half year.wanted to write more ,some time later.children who live abroad pls visit your parents once a year .
fathers day wishes .

asiya omar said...

ஏஞ்சலின் நீங்கள் சொல்வது சரி தான்,நாம் நம்ம ஊர் செல்லும் பொழுது நாம் அவர்களை கவனிப்பதை விட ஒரு விருந்தினரை வருந்தி வருந்தி கவனிப்பது போன்று அவர்கள நம்மை கவனிப்பது அவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு,நாமும் ஆனந்தமாய் விடுமுறையை களித்து விட்டு வந்து விடுகிறோம்,பாவம் வயதானவர்களை உடன் இருந்து கவனிக்க நம்மால் முடியலையே என்ற ஏக்கத்தோடு.

ஒ.நூருல் அமீன் said...

பிரிந்தோம் சந்திப்போம் : உங்கள் கவிதை இருபது வருடங்களுக்கு முன்பு என்னை விட்டு பிரியாமல் பிரிந்த என் தந்தையை எனக்கு ஞாபகமூட்டியது. மீண்டும் சந்திப்போம் என்பது நம் நம்பிக்கையல்லவா, அது வரை நம் தந்தையர் வழங்கிய அன்பையும், பண்பையையும் அவர்களின் வாரிசாக அனைவருக்கும் வழங்கி வாழ்வோம்.

asiya omar said...

ஒ.நூருல் அமீன் தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.