Sunday, June 20, 2010

ப்ரெட் ஃப்ரிட்டெர்ஸ்




தேவையான பொருட்கள் ;

ப்ரெட் - 4 துண்டுகள்
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சிக்கன் 65 மசாலா அல்லது
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சோடா உப்பு -பின்ச்
பஜ்ஜி கலர்-பின்ச்
இஞ்சிபூண்டு பேஸ்ட்- அரைடீஸ்பூன்(விரும்பினால்)
முட்டை -1
உப்பு,எண்ணெய் - தேவைக்கு

ஒரு ப்ரெட் துண்டை நான்காக கட் செய்து கொள்ளவும்.இப்படியே நான்கு துண்டையும் கட் செய்யவும்.

ஒரு பவுலில் கடலை மாவு,மைதா மாவு,அரிசிமாவு,மிளகாய்த்தூள்,சோடாஉப்பு,உப்பு சிறிது எடுத்து கொள்ளவும்.

இல்லாவிடில் மேற்சொன்ன பொருட்களோடு மிளகாய்த்தூள் பதில் சிக்கன் 65 பவுடர்,சோடா உப்பிற்கு பதில் முட்டை சேர்த்து எடுக்கவும்.
அனைத்தும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.



கால மணி நேரம் கழித்து கட் செய்த ப்ரெட் துண்டுகளை மாவில் தோய்த்து சிவற பொரித்து எடுக்கவும்.



பொரித்ததை ஒரு ப்லேட்டில் டிஸ்யு பேப்பரில் வைத்து எடுக்கவும்.சுவையான ப்ரெட் ஃப்ரிட்டர்ஸ் ரெடி.



சூடாக தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ கெட்சப்புடன் பரிமாறவும்.சும்மா அப்படியே சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.

-ஆசியா உமர்.

31 comments:

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர்!! ஆனால் நான் இதில் முட்டை சேர்த்ததில்லை...மாலைநேரத்துக்கு ஏற்றது...

இளம் தூயவன் said...

அருமையாக உள்ளது சகோதரி வாழ்த்துக்கள்.

Chitra said...

nice winter time snack with a cup of masala tea. :-)

GEETHA ACHAL said...

மிகவும் சூப்பராக இருக்கின்றது....மாலை நேரம் ஸ்நாக்...

LK said...

பிரட் பஜ்ஜி???

சி. கருணாகரசு said...

எளிமையான பஜ்ஜி.
பகிர்வுக்கு நன்றி.

asiya omar said...

மேனகா முட்டை சேர்த்து செய்து பாருங்க,அருமையாக இருக்கும்.

இளம் தூயவன் மிக்க நன்றி.

நன்றி சித்ரா.

நன்றி கீதாஆச்சல்.

ஆமாம் எல்.கே.ப்ரெட் பஜ்ஜியே தான்.

asiya omar said...

கருணாகரசு உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

நாடோடி said...

என‌து அம்மாவும் ப‌ண்ணுவார்க‌ள்... முட்டை புதுசா இருக்கு...

மங்குனி அமைச்சர் said...

//ப்ரெட் - 4 துண்டுகள்//
டர்க்கி துண்டா? இல்ல கதர் துண்டா ?

//சிக்கன் 65 மசாலா அல்லது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்//

மேடம் சிக்கன் 65 மசாலா இல்லாட்டி , சிக்க 32 .5 மசாலா ரெண்டு ஸ்பூன் போடலாமா ?

///முட்டை -1 (விரும்பினால்)//
முட்டை விரும்புதா , விரும்பலையான்னு நாம எப்படி தெரிசுகிர்றது மேடம் ?

Aruna Manikandan said...

Easy tasty snack, looks perfect:-)

asiya omar said...

ஸ்டீபன் அம்மாட்ட ஒரு தடவை மற்ற மாவு வைகளுடன் முட்டையும் சேர்த்து செய்து பார்க்க சொல்லுங்களேன்,சாஃப்டாக கிரிஸ்பாக இருக்கும்.

asiya omar said...

அமைச்சர் இப்படி எப்படி எழுதறீங்க?

ஹைஷ்126 said...

மழைக்கு நல்ல ஸ்னேக்கு...(இது அந்த சினேக்கு இல்லை வேறு) சூப்பரா இருக்குமே...

எல்லா முட்டையும் பூஸு கிட்ட இருக்கும் போது ஒரு முட்டை மட்டும் விரும்புதா ? விரும்பலையான்னு? நாம எப்படி தெரிந்து கொள்வது???// :)

வாழ்க வளமுடன்.

asiya omar said...

thanks aruna for your loving visit & comments.

asiya omar said...

சகோ.ஹைஷ் வருகைக்கு மகிழ்ச்சி.

athira said...

சூப்பர், வித்தியாசமான ரெசிப்பி.

/////மங்குனி அமைச்சர் said...

முட்டை -1 (விரும்பினால்)//
முட்டை விரும்புதா , விரும்பலையான்னு நாம எப்படி தெரிசுகிர்றது மேடம் ?=====///இது கூடவா தெரியாது? முட்டையிடம் கேட்டுத்தான்:).

///ஹைஷ்126 said...

எல்லா முட்டையும் பூஸு கிட்ட இருக்கும் போது ஒரு முட்டை மட்டும் விரும்புதா ? விரும்பலையான்னு? நாம எப்படி தெரிந்து கொள்வது???// :)///== அந்த ஒரு முட்டையிடம் மட்டுமே கேட்டுத் தெரிந்து கொள்ளோணும்........

சே..சே... பெரியவாளுக்கெல்லாம் ஒரு குட்டிப்பூஸ் ஓடியோடி விளக்கம் சொல்லவாண்டிக்கிடக்கே....

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அதிரா.

எம் அப்துல் காதர் said...

நல்ல.. அருமையான, ஈசியான, கிரிஸ்பியான.. ம்ம்ம்ம்...நைஸ் மாம்!!

Barakath said...

அஸ்ஸலாமு அலைக்கும், அக்கா
பேச்சுலராக இருப்பதால் இப்போதைக்கு செய்ய முடியாத நிலை. ஆனா நான் எல்லாத்தையும் பிரிண்ட் எடுத்து வச்சுருக்கேன். ஊருக்கு போய் எங்க அம்மாட்ட படுச்சு காமிச்சு செய்ய சொல்ல போறேன்.

asiya omar said...

அப்துல் காதர் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

பரக்கத் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

சாருஸ்ரீராஜ் said...

ஆசியா அக்கா ரொம்ப நல்லா இருக்கு

அக்பர் said...

அட! இது நல்லா இருக்கே. நன்றி மேடம்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பிரட் நல்லாருக்கு..

asiya omar said...

சாருஸ்ரீ மிக்க நன்றி.

asiya omar said...

அக்பர், ஸ்டார்ஜன் இருவர் கருத்திற்கும் மகிழ்ச்சி.
இருவரும் சேர்ந்து செய்து பாருங்க,ரொம்ப சிம்பிள் தான்.அரிசிமாவு இல்லை என்றால் கார்ன் ஃப்லோர் உபயோகிக்கலாம்.

தெய்வசுகந்தி said...

நானும் இதில் முட்டை சேர்க்காமல் செய்வேன்!!!! நல்லா இருக்குதுங்க!!!!!!!!

vanathy said...

Akka, super. Looking very crispy!

Mahi said...

நல்லா இருக்கு ஆசியாக்கா! முட்டை சேர்ப்பது புதிதா இருக்கு.

asiya omar said...

தெய்வசுகந்தி,
மகி,
வானதி
கருத்திற்கு மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

பிரெட் பஜ்ஜி ரொம்ப நல்ல இருக்கு