Wednesday, June 23, 2010

செம்மொழியான தமிழ்மொழியாம் பாடல்


உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு மையநோக்கப் பாடல்


பாடல் - மு.கருணாநிதி

இசை - ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்கம் - கௌதம் வாசுதேவ் மேனன்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர்


யாதும் ஊரே யாவரும் கேளிர்


உண்பது நாழி உடுப்பது இரண்டே


உறைவிடம் என்பது ஒன்றே என


உரைத்து வாழ்ந்தோம்


உழைத்து வாழ்வோம்


தீதும் நன்றும் பிறர் தரவாராஎனும்


நன்மொழியே நம் பொன் மொழியாம்


போரை புறம்தள்ளி பொருளை பொதுவாக்கவே


அமைதி வழி காட்டும் அன்பு மொழி


அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


ஓர் அறிவு முதல் ஆறறிவு உயிரினும் வரையிலே


உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்


ஓர் அறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே


உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்


ஒல்காபுகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குரல் கூறும் உயர் பண்பாடு


ஒலிக்கின்ற சிலம்பும் மேகலையும்


சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழி செம்மொழி செம்மொழி… …தமிழ்மொழியாம்


கம்ப நாட்டாழ்வாரும்


கவியரசி அவ்வை நல்லாளும்


எம்மதமும் ஏற்று புகழ்கின்ற


எம்மதமும் ஏற்று புகழ்கின்ற


எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்ப்போர் தரும்


புத்தாடை அனைத்துக்கும்


வித்தாக விளங்கும் மொழி


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


அகம் என்றும் புறம் என்றும்


வாழ்வை அழகாக வகுத்தளித்து


ஆதி அந்தம் இலாது இருக்கின்ற இனிய மொழி


ஓதி வளரும் உயிரான உலக மொழி


ஓதி வளரும் உயிரான உலக மொழி


நம் மொழி நம் மொழி அதுவே


செம்மொழியான தமிழ்மொழியாம்


தமிழ்மொழி தமிழ்மொழி தமிழ்மொழி தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


தமிழ்மொழியாம் தமிழ்மொழியாம் தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


தமிழ்மொழியாம் எங்கள் தமிழ்மொழியாம்


தமிழ்மொழியாம் எங்கள் தமிழ்மொழியாம்


செம்மொழியான தமிழ்மொழியாம்


வாழிய வாழியவே


தமிழ் வாழிய வாழியவே


வாழிய வாழியவே

--நன்றி கூகிள்
கடந்த ஒரு மாத காலமாக தொலைக்காட்சியை திறந்தாலே எல்லாச்சேனலிலும் இந்த பாடல் ஒலிக்க கேட்கலாம்,அதன் வரிகளை அறிய ஆவலாய் தேடியபொழுது கிடைத்தது,வரிகளை தெரிந்து கொண்டு பாடலை கேட்கும் பொழுது மிக அருமை.
-ஆசியா உமர்.

31 comments:

ஹைஷ்126 said...

நல்ல பதிவு...

வாழ்க வளமுடன்

LK said...

thanks for sharing

மங்குனி அமைச்சர் said...

உள்ளேன் டீச்சர்

Anonymous said...

எ .ஆர் .ரஹ்மான் இசையில் இந்த பாடல் கேக்க நல்லா இருக்கு ..பதிவுக்கு நன்றி

சாருஸ்ரீராஜ் said...

பகிர்தலுக்கு நன்றி அக்கா , என் பொண்ணுங்க இரண்டும் இப்போ இந்த பாட்டு தான் பாடுறது.

நாடோடி said...

வ‌ரிக‌ள் எழுத்து வ‌டிவில் அருமை.... ப‌கிர்விற்கு ந‌ன்றி..

asiya omar said...

எல்.கே

சகோ.ஹைஷ்

அமைச்சர்

சந்தியா

சாருஸ்ரீ

ஸ்டீபன்

தங்களின் பொன்னான கருத்திற்கும்,வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

Chitra said...

தமிழ் மொழி வாழ்க!

Chitra said...

செம்மொழியாம் தமிழ் வாழ்க!

என்.கே.அஷோக்பரன் said...

முதலிரண்டு வரிகள் பிழை

பிறப்புக்கும் அல்ல - பிறப்பொக்கும்

கேளீர் இல்லை - கேளிர்

வரி 5 - உரைத்து வாழ்ந்தோம்
வரி 6 - உழைத்து வாழ்வோம்

என அமைய வேண்டும்

பொருளை போதுவாக்கவே அல்ல - பொதுவாக்கவே

உயிரினும் அல்ல உயிரினம்

தொல்காப்புகழ் அல்ல ஒல்காப் புகழ்

ஒளிகின்ற சிலம்பு அல்ல ஒலிக்கின்ற

கம்பன் நாட்டாழ்வார் அல்ல - கம்ப நாட்டாழ்வார்

இது செம்மொழிப் பாடல் - மொழிசார்ந்தது ஆகவே வரிகளில் அதிக கவனம் தேவை!

வரிகளைத் தேடி நீங்கள் எடுத்த முயற்சிக்குப் பாராட்டுக்கள். பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

டாக்டர் கலைஞர் அய்யாவின் சாதனைகளில் இதுவும் ஒன்று. அருமையான பாடல்வரிகளை எழுதிய கலைஞர் அய்யாவுக்கும் இசையமைத்து அத்தனை பாடகர்களையும் பாடவைத்த ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் இயக்கிய கௌதம் சாரும் என்னுடைய நன்றிகள்.

asiya omar said...

சித்ரா

ஸ்டார்ஜன்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

என்.கே அஷோக்பரண் தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.தாங்கள் குறிப்பிட்ட பிழைகளை திருத்தி மாற்றி அமைத்து விட்டேன்.சரியான நேரத்தில் கண்டு குறிப்பிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.

இளம் தூயவன் said...

நல்ல பகிர்வு ,செந்தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

கேக்க நல்லா இருக்கு பாடல்.
தமிழ் வாழ்க! மிக்க நன்றி.
HD டவுன்லோட் லிங்க்>
http://hotfile.com/dl/50119636/8912e2c/Semmozhi.zip.html

Anbarasu said...

இந்த பாடல் வரிகளை நீங்கள் கூகிள் வலைத்தளத்தில் தேடும் அளவிற்கு பாடல் உள்ளது என்றால் எவ்வளவு மோசமான பாடல் ஆக்கம் என்று பாருங்கள். இதுவே இளையராஜா என்ற மேதை மெட்டமைத்து இருந்தால் எவ்வளவு அருமையாய் வந்து இருக்கும்

Mrs.Menagasathia said...

தமிழ் வாழ்க!! பகிர்வுக்கு நன்றி அக்கா!!

அக்பர் said...

பாடலும் படமாக்கப்பட்ட விதமும் அருமை.

ஸாதிகா said...

பகிர்வுக்கு நன்றி ஆசியா.ஊரில் இல்லாததாதல் சில நாட்கள் கணினி பக்கம் வர இயலாமல் போய் விட்டது.

asiya omar said...

இளம் தூயவன்
தமிழன்
அன்பரசு
அக்பர்
மேனகா
ஸாதிகா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

GEETHA ACHAL said...

அக்ஷ்தா குட்டிக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துவிட்டது...இதனை அடிக்கடி பார்ப்பது....

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு ஆஸியா!!

Mahi said...

பொறுமையா டைப் பண்ணிருக்கீங்க ஆசியாக்கா! அருமை!

எம் அப்துல் காதர் said...

உங்கள் ஆர்வத்தை என்னவென்று சொல்வேன் மேடம்! அப்படிதானிருக்கணும். ம்ம்ம்ம் தொடரட்டும்...!

ஜெய்லானி said...

பாட்டு மட்டும் ஓக்கே !! படத்தில சரியில்லை பாதிப்பேரு தமிழனே இல்லை.

athira said...

இப்பொழுதுதான் பாடலைப் பார்க்கிறேன், பெரிதாகக் கவரவில்லை. ஒருவேளை இசையோடு கேட்க நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

asiya omar said...

கீதாஆச்சல்
மனோஅக்கா
மகி
அப்துல் காதர்
ஜெய்லானி
அதிரா
தங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

எல்லாரும் அவங்கவங்க கருத்தை சொல்லியதில் மகிழ்ச்சி.

நானும் தொலைக்காட்சியில் அந்த பாட்டை முழுமையாக ரசித்து பார்த்தேன்,நம்ம டி.எம்.எஸ் தொடங்கி சின்ன பாப்பா வரை பாடி முடிக்கிறாங்க,இடையில் நம்ம பி.சுசீலாலாமா இன்னும் மற்ற பாடகர்கள் எல்லோருமே அசத்தலாக பாடியிருப்பாங்க,அந்த மியுஸிகோடு கேட்கும் பொழுது,படமாக்கப்பட்ட விதம், பாடல்வரிகள் அனைத்தும் அசத்தலாகவே இருக்கும்.

SUMAZLA/சுமஜ்லா said...

காலேஜ் வைவா ல சம்பந்தமில்லாத கேள்வியெல்லாம் கேட்டுட்டு இருந்தாங்க. அதுல, தமிழ் மேஜர் ஸ்டூடண்ட் கிட்ட கேட்ட கேள்வி, இந்த பாடலின் முதல் வரி என்ன? எழுதியவர், இசையமைத்தவர், பாடியவர் பெயர்கள் என்ன? என்பது! நல்ல தகவல்.

asiya omar said...

சுமஜ்லா உங்கள் கருத்தை பார்த்தவுடன் எனக்கு மிக்க மகிழ்வை தருகிறது,என் மகளூக்காகத்தான் எழுதி எடுத்தேன்,அப்படியே ப்ளாக்கிலும் போட்டாச்சு.

Roohi Fathima said...

thanks asiya mami for this song.. yet there are some mistakes.. but am not sure about that.. I hav many doubts in this lyrics.. It got cleared thru ur post.. thanks once again