Wednesday, June 23, 2010

மினி சாசேஜ் ஃப்ரை

தேவையான பொருட்கள் ;

சிக்கன் சாசேஜ் - ஒரு பாக்கெட்

மைதா - 2 டேபிள்ஸ்பூன்

கார்ன்ஃப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்

முட்டை வெள்ளைக்கரு மட்டும் - 1

மிளகுத்தூள் -கால்ஸ்பூன்

உப்பு ,எண்ணெய் - தேவைக்கு

சாசேஜ் டீஃப்ராஸ்ட் ஆனவுடன் கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு வேக வைக்கவும்.சாசேஜில் உப்பு இருப்பதால் போட தேவையில்லை.
வெந்தவுடன் தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
ஒரு பவுலில் மைதா,கார்ன்ஃப்ளோர்,முட்டை வெள்ளைக்கரு,உப்பு சிறிது,மிளகு ,சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து எடுக்கவும்.

மாவுக்கரைசல் ரெடியானவுடன் சாசேஜை இரண்டாக கட் செய்து வைக்கவும்.


ஒரு சாலோ ஃப்ரை பானில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சாசேஜை ரெடி செய்த கரைசலில் தோய்த்து பொரிக்கவும்.


நன்கு பொரிந்தவுடன் எடுத்து ஒரு ப்லேட்டில் டிஸ்யு வைத்து வைக்கவும்.

சுவையான மினி சாசேஜ் ஃப்ரை ரெடி.

அரேபியர்கள் இந்தமுறையில் செய்து சாப்பிடுவார்கள்.நாம் கொஞ்சம் கடலை மாவு கூட சேர்த்து செய்யலாம்.
சமுன்(லாங் ப்ரெட்) சாசேஜ் சாண்ட்விச் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும் அல்லது வேக வைத்த பின்பு சின்னதாக கட் செய்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுத்தும் சில்லி பவுடர் சேர்த்தும் சாப்பிடலாம்.
--ஆசியா உமர்.

30 comments:

jagadeesh said...

குட். உட்கார்ந்து யோசிபீங்கலோ!

LK said...

good parka nalla irukku

asiya omar said...

ஜெகதீஸ் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

சகோ.எல்.கே.மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஜெய்லானி said...

ஈஸியான ரெஸிபி . இது ஊரில கிடைக்கிறதான்னு தெரியல.

Chitra said...

In US, it is called "hotdogs" -
Sausages are different ones.


Thank you for the recipe. Looks like a good appetizer for parties. :-)

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு

சசிகுமார் said...

ரொம்ப எளிமையா சொல்லி இருக்கீங்க அக்கா , நானே செய்யலாம் போல தொடரட்டும் உங்கள் பணி

நாடோடி said...

ஓ.. இது பேர்தான் சாசேஜ் யா.... இதை க‌டைக‌ளில் பார்த்து இருக்கிறேன்... இது ந‌ம்ம‌க்கு சொந்த‌மில்லாத‌து என்று வில‌கி சென்று விடுவேன்... ந‌க‌ட்ஸ் ம‌ட்டும் வாங்கி பிரை ப‌ண்ணுவேன்..

GEETHA ACHAL said...

நல்ல ப்ரை...ஆனால் எனக்கு தான் இதனை பிடிப்பதில்லை...

asiya omar said...

yes chitra,here also we use to say this as a hot dogs 0r chicken franks or sausage.i know the real sausages also.thanks for your loving comments.

asiya omar said...

ஜெய்லானி கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.

சாருஸ்ரீ மிக்க நன்றி.

நன்றி சசிகுமார்.

ஸ்டீபன் சாதியா ப்ராண்ட் சிக்கன் ஃப்ரான்க்ஸ் வாங்கி முதலில் சாப்பிட்டு பாருங்க,சும்மா அவித்து கட் பண்ணியே சாப்பிடலாம்.இங்க நான் அதனை தான் உபயோகித்து இருக்கேன்.


கீதா ஆச்சல் கருத்திற்கு நன்றி.

அக்பர் said...

விதவிதமா செஞ்சு அசத்துறீங்க. தொடருங்க.

thenammailakshmanan said...

மினி சாசேஜ் அருமை.. ஆசியா

ஸாதிகா said...

அட ,வித்தியாசமாக இருக்கே!//ஜெய்லானி said...
ஈஸியான ரெஸிபி . இது ஊரில கிடைக்கிறதான்னு தெரியல//சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றது.ஆனால் அங்கு கம்பேர் பண்ணும் பொழுது விலை அதிகம்.

எம் அப்துல் காதர் said...

//ஸ்டீபன் சாதியா ப்ராண்ட் சிக்கன் ஃப்ரான்க்ஸ் வாங்கி முதலில் சாப்பிட்டு பாருங்க//

ஸ்டீபன்,"SADIA CHICKEN FRANCKS"-ல்
RIGHT TOP SIDE-ல்,"ORIGINAL" என்று எழுதியிருக்கும் அது தான் டேஸ்டியா, டிலீசியசாக இருக்கும். மற்றது SPICY, BUTTER என்று அதெல்லாம் புதிதாக சாப்பிடுவார்கள் சாப்பிட்டால், இதை சாப்பிடுவதையே சுத்தமாய் மறந்து விடுவார்கள்.

நாங்கள் வெறுமெனே முட்டையை அடித்து கலக்கி இந்த ஹாட் டாக்கை அதில் நனைத்து ஃபிரை செய்து
சாப்பிடுவோம். அசத்தலாகவே இருக்கும்.

Riyas said...

//சுவையான மினி சாசேஜ் ஃப்ரை ரெடி.// ம்ம்ம்

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர் அக்கா!! என் வீட்டுக்காரர் தான் வாங்கி வந்து சாப்பிடுவார்...இங்க இதை ஹாட்டாக் நு சொல்லுவாங்க..எனக்கு இதன் சுவை பிடிப்பதில்லை...

asiya omar said...

அக்பர்

தேனக்கா

ஸாதிகா

ரியாஸ்

அப்துல் காதர்

மேனகா

தங்கள் அனைவரின் கருத்திற்கு மிக்க நன்றி.

SUMAZLA/சுமஜ்லா said...

இந்த சிக்கன் ரோல்ஸ் இந்தியாவில் கிடைக்காது. கிடைத்தாலும் ஹலாலா இருக்குமா தெரியல...ஆனா நாவூறும் படங்கள் அருமை!

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

ஈஸியான ரெஸிபி . இது ஊரில கிடைக்கிறதான்னு தெரியல.///


எந்த ஊருல ராசா ???

மங்குனி அமைச்சர் said...

மேடம் சாசேஜ் அப்படின்னா என்ன ?

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

ஓ.. இது பேர்தான் சாசேஜ் யா.... இதை க‌டைக‌ளில் பார்த்து இருக்கிறேன்... இது ந‌ம்ம‌க்கு சொந்த‌மில்லாத‌து என்று வில‌கி சென்று விடுவேன்... ந‌க‌ட்ஸ் ம‌ட்டும் வாங்கி பிரை ப‌ண்ணுவேன்..///


சார் , இது ரொம்ப நக்கல் சார் , ஏற்கனவே சாசேஜ் அப்படின்னா என்னான்னு கேட்குறேன் , நீங்க வேற புதுசா ந‌க‌ட்ஸ் அப்படின்னு சொல்ரிக்க ,ந‌க‌ட்ஸ் அப்படின்னா என்னா சார் ??

asiya omar said...

சுஹைனா உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி,மறக்காமல் என் ப்ளாக் வந்து எட்டி பார்த்தமைக்கு மிக்க நன்றி.ஆமாம் அரபு நாட்டில் ஹ்லால ஆனது தான் இருக்கும் பயப்படாமல் சாப்பிடலாம்.

asiya omar said...

அமைச்சரே ,சாசேஜ் என்பது மட்டன்,சிக்கன்,பீஃப் ந்னு நிறைய வெரைட்டியில் வருது.இறைச்சியை பேஸ்ட் மாதிரி ஆக்கி டேஸ்டுக்கு சில பொருட்கள் சேர்த்து பாடம் செய்து இப்படி சேப் செய்து இங்கு கிடைக்கிறது.

இளம் தூயவன் said...

சகோதரி செய்முறை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

நாடோடி said...

@மங்குனி அமைச்சர்
//சார் , இது ரொம்ப நக்கல் சார் , ஏற்கனவே சாசேஜ் அப்படின்னா என்னான்னு கேட்குறேன் , நீங்க வேற புதுசா ந‌க‌ட்ஸ் அப்படின்னு சொல்ரிக்க ,ந‌க‌ட்ஸ் அப்படின்னா என்னா சார் ??///

அமைச்ச‌ரே..ந‌க‌ட்ஸ் என்றால் சிக்க‌ன், ம‌ட்ட‌ன் போன்ற‌வ‌ற்றை பேஸ்ட் செய்து அதில் மாவு சேர்த்து ப‌ல‌ வ‌டிவ‌ங்க‌ளில் செய்து வைத்திருப்பார்க‌ள்... நான் அதை வாங்கி எண்ணையில் பொரித்து சாப்பிட‌ வேண்டிய‌து தான்...

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றது. ஆனால் அங்கு கம்பேர் பண்ணும் பொழுது விலை அதிகம். //

@@@SUMAZLA/சுமஜ்லா--//

இந்த சிக்கன் ரோல்ஸ் இந்தியாவில் கிடைக்காது. கிடைத்தாலும் ஹலாலா இருக்குமா தெரியல//


இந்த (ஹலால் )பயம் எனக்கும் இருக்குது அதனாலதான் கேட்டேன். இங்கு சாப்பிட்ட ருசி ஊரில் கிடைப்பதில்லை

ஜெய்லானி said...

@@@ மங்குனி அமைச்சர்--//

ஜெய்லானி said...

ஈஸியான ரெஸிபி . இது ஊரில கிடைக்கிறதான்னு தெரியல.///


எந்த ஊருல ராசா ??? //

ஆப்கானிஸ்தான் பார்டர் .

vanathy said...

அக்கா, சூப்பர். நல்ல ஐடியா.

asiya omar said...

thanks for your loving comments.