Saturday, June 26, 2010

சீஸ் ஆம்லெட்

தேவையான பொருட்கள் ;

முட்டை - 1

துருவிய மொசரல்லா சீஸ் - 1 -2 டேபிள்ஸ்பூன்


எண்ணெய் -1 டீஸ்பூன்

பெப்பர் பவுடர் - கால்ஸ்பூன்

சீரகப்பவுடர் - பின்ச்

பப்ரிக்கா பவுடர் - பின்ச் (விரும்பினால்)

உப்பு - ஹாஃப் பின்ச்முட்டையுடன்,மிளகு,சீரகம்,பப்ரிக்கா,உப்பு பவுடர் சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும்,நன்கு பீட் செய்து கொள்ளவும்.

கலந்த முட்டை முட்டையை ஆம்லெட்டாக பானில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு விடவும்.முட்டை வெந்து வரும் பொழுது சீஸ் தூவவும்.


அப்படியே ஆம்லெட்டை மடக்கவும்.
ஆம்லெட்டை திருப்பி போட்டு உடன் எடுக்கவும்.சுவையான சீஸ் ஆம்லெட் ரெடி.டோஸ்டட் ப்ரெட்,நூடுல்ஸ் உடன் பரிமாறலாம்.
சிம்பிளாக இருந்தாலும் அந்த சீஸ் சேர்த்து ஆம்லெட் சாப்பிடும் பொழுது யம்ம்மியாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
--ஆசியா உமர்.


30 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆம்லேட் போட்டுறவேண்டியதுதான்.

ஸாதிகா said...

ரிச் ஆன ஆம்லட்தான்.

எம் அப்துல் காதர் said...

இவ்வளவு பொறுமையா எப்படி பிக்சர் எடுத்து அழகா இடுகை போட்டீங்க மேடம்! ஒரு பிளேட்டை இங்கே தள்ளுங்க பார்க்கவே பசிக்கிதே,,

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆசியாக்கா பப்பரிக்கா பவுடர் அப்படின்னா என்ன?..

இளம் தூயவன் said...

சகோதரி இது கொஞ்சம் புது மாதிரியாக தான் உள்ளது.

அஹமது இர்ஷாத் said...

Nice One...

Cool Lassi(e) said...

Umm delicious! Perfect breakfast choice.

ஜெய்லானி said...

ஆம்லெட்டில் சீஸ் போட்டு இதுவரை சாப்பிட்டதில்லை. அதையும் பார்த்துடுவோம்..

asiya omar said...

ஸ்டார்ஜன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.செய்து பாருங்க,என் மகனோட ஃபேவரைட்.பப்ரிகா பவுடர் என்றால் காய்ந்த சிவப்பு கொடைமிளகாய் பவுடர் .

asiya omar said...

நன்றி தோழி ஸாதிகா.

நன்றி அப்துல் காதர் .மொபைலில் உள்ள கேமராவை தான் படம் எடுக்க உபயோகிக்கிறேன்,பழகிவிட்டது.மொபைல் மசாலா வாடையுடன் தான் இருக்கும்.

இளம் தூயவன், என் மகனோட கண்டு பிடிப்பு.சில ரெசிப்பி அவனே செய்து சாப்பிடுவான் சொல்ல மாட்டான்,சீக்ரட் சொல்லுவான்,இன்று கிட்டே நின்று பார்த்ததால் செய்து விட்டேன்.

asiya omar said...

நன்றி அஹமது இர்ஷாத்.

ஜெய்லானி நிச்சயம் செய்து சாபிடுங்க.அப்படியே ஆம்லட்டை பிய்க்கும் பொழுது பிட்சா மாதிரி சீஸ் வரும்.

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு அக்கா

asiya omar said...

thanks cool lassie for your nice comments.

நாடோடி said...

ஆம்லேட் வித்தியாச‌மா இருக்கு...

GEETHA ACHAL said...

மொபைலில் அழகாக எடுத்து இருக்கின்றிங்க...சூப்பர்ப்...அருமையானஆம்லெட்

Chitra said...

a good breakfast. உங்கள் படங்கள் பார்க்கும் போது, நானும் பக்கத்துல இருந்து அப்படியே எடுத்து சாப்பிட மாட்டோமானு தோணுது....

Mrs.Menagasathia said...

அருமையான சீஸ் ஆம்லெட்...மெபைலில் எடுத்த போட்டோக்களா அக்கா...ம்ம் நல்லா எடுத்திருக்கிங்க...

asiya omar said...

ஸ்டீபன்

கீதா ஆச்சல்

சித்ரா

மேனகா

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

kavisiva said...

யம்மி சீஸ் ஆம்லெட்...நாளை ப்ரேக்ஃபாஸ்ட் இதுதான்

மங்குனி அமைச்சர் said...

அருமையான டிஸ் மேடம்

மங்குனி அமைச்சர் said...

பொழுது யம்ம்மியாக இருக்கும்///அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................ எனக்கு சைனீஸ் பாசை எலாம் தெரியாது , ஜெய்லானி உனக்கு தெரிஞ்சா , இதுக்கு என்னா அர்த்தம் சொல்லுடா ????

asiya omar said...

அமைச்சரே வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அக்பர் said...

அட! இது புதுசா இருக்கே. பகிர்வுக்கு நன்றி

Padhu said...

Omelet looks yummy!!

asiya omar said...

thanks padhu for your first visit &loving comments.

ஜெய்லானி said...

@@@மங்குனிஅமைச்சர்--//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................ எனக்கு சைனீஸ் பாசை எலாம் தெரியாது , ஜெய்லானி உனக்கு தெரிஞ்சா , இதுக்கு என்னா அர்த்தம் சொல்லுடா ????//

இப்பதான்யா கிளாசுக்கு போறேன் இதுக்கு சைனீஸ்ல Chaojí meiwei ன்னாங்க. உண்மையான்னு கூகிள்ள பாத்துக்க

asiya omar said...

ஜெய்லானி கருத்திற்கு நன்றி.சாவோஜி மிஐ விஐ சரிதானே,நீங்க சொன்னதை தமிழில் எழுதிட்டேன்.

asiya omar said...

கவி சிவா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

LK said...

இரண்டு நாட்கள் ஊரில் இல்லை .. இன்று ஆஜர்

asiya omar said...

எல்.கே வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.நானும் உங்கள் இடுகை எதுவும் இருக்கான்னு பார்த்துவிட்டு வந்தேன்.